பேச்சு:புத்தர் கோயில், தியாகனூர்

Latest comment: 1 ஆண்டிற்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic தலைப்பு மாற்றம்

தலைப்பு மாற்றம் தொகு

வணக்கம், பயனர்:Iramuthusamy, இக்கட்டுரையின் தலைப்பை புத்தர் கோயில், தியாகனூர் என்று மாற்றுவது பற்றிக் கருத வேண்டுகிறேன். உள் தலைப்பில் சிலைகள் பற்றி விவாதிக்கலாம் என எண்ணுகிறேன். தற்போது இதனை மேம்படுத்துகிறேன். பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 03:53, 22 சூன் 2022 (UTC)Reply

ஐயா வணக்கம்,
'புத்தர் கோவில், தியாகனூர்' நல்ல தலைப்பு. மாற்றி விடுகிறேன். இக்கட்டுரையில் தாங்கள் மேற்கொண்ட திருத்தங்கள் மிகவும் பயனுள்ளவை ஆகும். நன்றி ஐயா. என் தொலைபேசி எண்: 9444949507. நான் தற்போது அமெரிக்காவில் நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள என் மகன் வீட்டில் இருக்கிறேன். Whatsapp மூலம் தொடர்பு கொள்ளலாம். நேர வேறுபாடு 9.30 மணி நேரம். தங்களுக்கு ஏற்ற நேரத்தை Whatsapp செய்தியில் தெரிவியுங்கள் பேசலாம். நன்றி. வணக்கம். இரா.முத்துசாமி (பேச்சு) 15:21, 22 சூன் 2022 (UTC)Reply
வணக்கம், பயனர்:Iramuthusamy, செய்தியறிந்தேன். தலைப்பினை நீங்கள் மாற்ற இசைந்தமைக்கு நன்றி. இதுவரை புத்தர் கோயில், பெருஞ்சேரி, புத்தர் கோயில், புத்தமங்கலம் என்று இரு கட்டுரைகள் தொடங்கியுள்ளேன். அவ்வப்போது தமிழ்நாட்டில் பௌத்தக் கோயில்கள் என்ற கட்டுரையோடு இணைத்துவிடுகிறேன். உரிய பகுப்பினையும் தந்துவிடுகிறேன். அவ்வரிசையில் இதனை புத்தர் கோயில், தியாகனூர் என்று தலைப்பினை மாற்ற வேண்டுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:43, 22 சூன் 2022 (UTC)Reply
தலைப்பு மாற்றம் - ஆயிற்று --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)
நன்றி, மா. செல்வசிவகுருநாதன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:54, 22 சூன் 2022 (UTC)Reply

பா.ஜம்புலிங்கம் ஐயா, தாங்கள் நீக்கிய வரிகள் குறித்து ஒரு சிறு மீள்பார்வை மேற்கொள்ள வேண்டுகிறேன்: //ஓய்வு பெற்ற கால்நடை மேற்பார்வையாளரான ஜி.பாண்டுரங்கன் ... இவர் கூறியுள்ளார்// இந்த வரிகள் தியாகனூர் புத்தர் கோவிலுடன் தொடர்புடையதாகக் கருதுகிறேன். ஏனெனில், இக்கோவில் குறித்து உள்ளூர் மக்களின் அணுகுமுறை என்ன என்பதை இவ்வரிகள் தெளிவாக படம்பிடித்துக் காட்டுகின்றன. சற்று விரிவாகச் சொல்லி விளக்குவது எனது அணுகுமுறை. எனவே அவசியம் கருதி மீளமைத்துள்ளேன். இங்குள்ள சிற்பங்களுடன், பௌத்த படிமக்கலை குறித்த ஆய்வுகளை தாங்கள் மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும். நன்றி ஐயா. இரா.முத்துசாமி (பேச்சு) 16:50, 23 சூன் 2022 (UTC)Reply

சரி, நன்றி பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:32, 24 சூன் 2022 (UTC)Reply

  புத்தர் கோயில், தியாகனூர் பௌத்த மதம் தொடர்பான கருத்துகளை கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் பௌத்தம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:16, 6 செப்டம்பர் 2022 (UTC)
Return to "புத்தர் கோயில், தியாகனூர்" page.