பேச்சு:மதுரை
தகவல் சேர்க்கை
தொகுகல்விப் பகுதியின் கீழுள்ள and SACS MAVMM Engineering College, KIDARIPATTY.. நீக்கியுள்ளேன். தகவல் சரியென்றால் தமிழில் சேர்த்துவிடவும்.--உமாபதி \பேச்சு 10:12, 29 மார்ச் 2008 (UTC)
தவறு எது என்று தெரியவில்லை
தொகுசோடாபாட்டில் அவர்களே 22:33, 29 திசம்பர் 2011 அன்று எஸ்ஸார்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது என்று உள்ளது. இதில் எது முன்நிலையாக்கப்பட்டது என்று எனக்கு தெரியவில்லை. அது எது என்று தெரிந்தால் எதிர்காலத்திற்கு கொஞ்சம் உபயோகமாய் இருக்கும். எஸ்ஸார்
- எஸ்ஸார், அடையாளம் காட்டாத பயனர் 122.174.85.47 அன்றைய தேதியில் செய்த இரு மாற்றங்கள் கட்டுரைக்குத் தேவையில்லை என்பதால் அந்த மாற்றங்களுக்கு முன்பிருந்த நிலைக்குச் சோடாபாட்டில் கொண்டு சென்றிருக்கிறார். இதனால் அடையாளம் காட்டாத பயனர் செய்த மாற்றம் இல்லாமல் போனது. அதற்கு முன்பு தாங்கள் செய்த மாற்றம் கடைசி நிலையிலிருந்ததால் தங்கள் பெயருடன் முன்னிலையாக்கப்பட்டது என்று இருக்கும். நிர்வாகிகளாக இருப்பவர்கள் கட்டுரையை ஒழுங்குபடுத்தும் போது அதற்கான முன்னிலையாக்கு எனும் வசதியைப் பயன்படுத்தினால் இது போன்ற குறிப்புகள் இடம் பெறும். தாங்கள் இது குறித்து முழு விவரம் அறிய கட்டுரைப் பக்கத்திலான வரலாற்றைக் காட்டவும் எனுமிடத்தில் சொடுக்கினால் கட்டுரையில் செய்யப்பட்ட மாற்றங்கள் அனைத்தையும் பார்வையிட முடியும். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:07, 30 திசம்பர் 2011 (UTC)
- எஸ்ஸார், தேனியார் சொல்வது போது உங்களுக்கு அடுத்து செய்யப்பட்ட இரு தொகுப்புகள் விசமத்தொகுப்புகளாக இருந்தன. அவற்றை நீக்கி நீங்கள் இறுதியில் தொகுத்து விட்டுச் சென்றிருந்த பதிப்புக்கே கட்டுரையை மீண்டும் கொண்டு சென்றுள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 19:13, 30 திசம்பர் 2011 (UTC)
- விளங்கியது. நன்றி தேனி, சோடாபாட்டில்.. எஸ்ஸார்
ஆட்சியர்
தொகுஆட்சியர் பெயர் மற்ற வேண்டும். தகவற்சட்டத்தின் மூலம் எங்கு உள்ளது என தெரியவில்லை. இப்போதுள்ள அன்சூல் மிஸ்ரா பெயர் இடம் பெறவேண்டும். --எஸ்ஸார் (பேச்சு) 15:49, 19 சூன் 2012 (UTC)
- ஆயிற்று --எஸ்ஸார் (பேச்சு) 09:05, 15 செப்டெம்பர் 2012 (UTC)
மதுரை தமிழ் மாநாடு
தொகுஇத்தலைப்பில் கட்டுரையொன்றைத் தேடினேன். பகுப்பு:தமிழ் மாநாடுகள் இல்லையே? உருவாக்க வேண்டுமா? மதுரை வாழ் விக்கிப்பீடியர் கட்டுரை எழுதினால் சிறப்பாக அமையும் --த♥ உழவன் +உரை.. 03:31, 7 அக்டோபர் 2012 (UTC)
மதுரை 'கூடல்' பெயர்க்காரணம்
தொகுசைவ (சிவன்), வைணவ (அழகர் பெருமாள் தங்கை மீனாட்சி அம்மன்) சமயங்களின் கூடல். Helppublic (பேச்சு) 10:17, 1 சூலை 2020 (UTC)
படிமம்: மதுரை: மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்
தொகுமீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நிகழ்வு, மீனாட்சி அம்மன் கோவில் தூணில் காணப்படும் சிற்பம். அழகர் பெருமாள், தங்கை மீனாட்சியை, சுந்தரேசுவரருக்கு தாரை வார்த்து கொடுத்தல்.
என்று திருத்த வேண்டுகிறேன். Helppublic (பேச்சு) 11:18, 1 சூலை 2020 (UTC)