பேச்சு:மனுவந்தரம்

Theni.M.Subramani, மனுவந்தரத்தில் என்ன பிரச்சினை? ஏன் அழிக்க வேண்டும்?--தென்காசி சுப்பிரமணியன் 11:07, 11 ஆகத்து 2011 (UTC)Reply

குறை இருப்பதாகத் தெரியவில்லை. ஆதாரங்கள் ஏதேனும் (நூல், ஆசிரியர்) இருந்தால் சேர்த்து விடுங்கள்.--Kanags \உரையாடுக 11:15, 11 ஆகத்து 2011 (UTC)Reply

எழுதி 5 நிமிடத்துக்கள் தான் ஆகிறது? அதற்குள் என்ன வந்தது? சிறிது அவகாசம் தாருங்கள்? ஆதாரம் தேவை என்றால் ஆதாரம் தேவைபடும் பக்கங்களுக்கள்ளவா அனுப்ப வேண்டும்? எதற்காக நீக்க பட வேண்டிய கட்டுரைகளுக்கு கொண்டு சென்றீர்கள்?--தென்காசி சுப்பிரமணியன் 11:20, 11 ஆகத்து 2011 (UTC)Reply

இந்துக் காலக் கணிப்பு முறை எனும் கட்டுரையில் அனைத்துத் தகவல்களும் அட்டவணைப்படுத்தப்பட்டு தரப்பட்டுள்ளது. மனுவந்தரம் என்பது குறித்து முழுமையான தகவல்கள் கொண்ட கட்டுரையாக இருந்தால் பரவாயில்லை. தென்காசி சுப்பிரமணியன் கொடுத்த தகவல்கள் அனைத்தும் இக்கட்டுரையிலேயே இருக்கின்றன. --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 11:28, 11 ஆகத்து 2011 (UTC)Reply
இதனை தேனியார் முன்னரே தெரிவித்திருந்தால் இக்குழப்பம் நேர்ந்திராது. இக்கட்டுரையில் மேலதிக தகவல்கள் சேர்க்க முடியாவிட்டால் நீக்கலாம்.--Kanags \உரையாடுக 11:39, 11 ஆகத்து 2011 (UTC)Reply
பயனர் கணக்குள்ளவர்களால் தொடங்கப்படும் கட்டுரைகளுக்கு நீக்குதல் வார்ப்புரு இட்டால், எதற்காக இடப்படுகிறது என்பதை தவறாமல் பேச்சுப் பக்கத்தில் சேருங்கள். கட்டுரை துவங்கி சில நிமிடங்களில் வார்ப்புரு இடுவதையும் தவிர்க்கலாம் (விசமத் தொகுப்புகளைத் தவிர்த்து). --சோடாபாட்டில்உரையாடுக 12:02, 11 ஆகத்து 2011 (UTC)Reply
இக்கட்டுரைத் தலைப்ப்புக்கு இந்துக் காலக் கணிப்பு முறை கட்டுரைக்கு வழிமாற்றுக் கொடுக்கலாம்.--Kanags \உரையாடுக 11:56, 11 ஆகத்து 2011 (UTC)Reply
நீக்கல் வார்ப்புருவை இணைப்பு வார்ப்புருவாக மாற்றியுள்ளேன். இப்போது உள்ளதைக் காட்டிலும் கூடுதலாக தகவல்கள் சேர்க்கப்பட வில்லையெனில் இதனை வழிமாற்றாக மாற்றலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 12:09, 11 ஆகத்து 2011 (UTC)Reply

நிர்வாகிகள் கவனிக்கவும்

தொகு
  • நான் எழுதிய வித்வான்சாக் என்ற கட்டுரை 4 முறை பெயர் மாற்றப்பட்டு மீண்டும் வித்வான்சாக் என்ற தலைப்பிற்கே வந்துள்ளது. இதனால் என்ன பயன்?
  • மேலும் இன்சாசு என்ற கட்டுரை மிகப்பெரிய பெயராக மாற்றப்பட்டுள்ளது. அந்த பெயரிலேயே அனைத்து விசயங்களையும் கூறிவிட்டால் கட்டுரை எதற்கு? மேலும் இன்சாசை தயாரித்த அதே நிறுவனம் வேறு எந்த துப்பாக்கியையும் தயாரித்ததில்லையா?
  • இங்கே 23 நிர்வாகிகளும் 23 கருத்தினை கொண்டிருக்கிறார்கள். அதற்கு வித்வான்சாக் உதாரணம். ஒவ்வொருவருக்கும் தனி கட்டுரை எழுத முடியுமா?
  • மேலும் நீங்கள் இணைப்பு கட்டுரை இந்துக் காலக் கணிப்பு முறை என்ற கட்டுரையில் மனுவந்திரம் சிவப்பு மை இடப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் அந்த தலைப்பில் கட்டுரை எழுதப்படும் போது அதை மேம்படுத்த வேண்டுமே தவிர அழிப்பதில் என்ன பயன்?
  • ஒருவர் கட்டுரையை அழிக்கும் முன் அதை எழுதியவரிடம் அதற்கான தேவைகளை கூற வேண்டாமா?
  • மேலும் விக்கியில் எழுதப்பட்ட கட்டுரைகள் அனைத்திற்கும் உசாத்துணை பகுதி உள்ளதா? கட்டுரை பத்தவில்லை என்றால் குறுங்கட்டுரையாக மாத்தலாமே.
  • இதை போன்றவற்றால் விக்கியின் வேகம் குறையுமே தவிர வேறொன்றும் பயனில்லை. இதை போன்று வார்ப்புரு இடப்படும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஆலோசனை செய்தால் என்ன?
  • இங்குள்ளவர்கள் கட்டுரையை நீக்குவதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மேம்படுத்துவதற்கு கொடுக்கலாமே?
  • வார்ப்புரு இடுவதற்கு 10 நொடி போதும். ஆனால் கட்டுரை எழுதவதென்ன அவ்வளவு எளிதா?
  • மொத்தத்தில் 5 நிமிட கட்டுரைக்கு 5 மணி நேரம் ஆனதே மிச்சம்.--தென்காசி சுப்பிரமணியன் 13:23, 11 ஆகத்து 2011 (UTC)Reply
சுப்பிரமணியன், விக்கிப்பீடியா கட்டுரைகள் உங்களைப் போன்ற ஆர்வலர்களால் தான் எழுதப்படுகிறது. அனைவரும் ஒரு கட்டுரையில் பங்கு பற்றி சிறந்த முறையில் அதனை முடிவாக்குவதே விக்கிப்பீடியாக் கட்டுரையின் தனிச் சிறப்பு. எனவே நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரச்சனைகள் எழுவது தவறல்ல. கட்டுரைகளில் சில சர்ச்சைக்குரிய மாற்றங்களைச் செய்வதற்கு முன்னர் அதன் பேச்சுப் பக்கத்தில் அது குறித்து எழுதுவது விக்கிப் பண்புகளில் ஒன்று. அதனை நிருவாகிகள் உட்பட அனைவரும் கடைப்பிடித்தல் நல்லது.--Kanags \உரையாடுக 13:37, 11 ஆகத்து 2011 (UTC)Reply
  • தென்காசி சுப்பிரமணியன் தங்கள் கருத்தைத் தெரிவிப்பதற்கு முன்பு எதற்காக என்பதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். நிர்வாகியாக இருப்பவர்கள் எவரும் கட்டுரைகள் எழுதாதவர்கள் இல்லை. நீக்கம் செய்ய வேண்டும் என்று கருதியிருந்தால் உடனடியாக என்னால் நீக்கியிருக்க முடியும். இக்கட்டுரை விரிவடைய வேண்டும் என்று விரும்பியதாலேயே “நீக்க வார்ப்புரு” மட்டும் என்னால் இடப்பட்டது. தாங்கள் தொடர்ந்து விரிவாக்கம் செய்வதாக இருந்தால் underconstruction என்று வார்ப்புருவை இட்டிருக்க வேண்டும். ஏற்கனவே ஒரு கட்டுரையிலிருக்கும் தகவலை மட்டும் தாங்கள் கட்டுரையில் இட்டிருப்பதால் அதை எப்படி எடுத்துக் கொள்வது?. என்னவோ தாங்கள் மட்டும்தான் கட்டுரை எழுதுவது போல சலிப்படையத் தேவையில்லை.என்னுடைய கட்டுரைகள் ஒன்றும் எண்ணிக்கையிலோ தரத்திலோ குறைந்தவையல்ல.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 13:51, 11 ஆகத்து 2011 (UTC)Reply



சுப்பிரமணியன்,
நீங்கள் மேற்குறிப்பிட்ட அனைத்து கூறுகளுமே விக்கி முறைமையின் அறியப்பட்ட சிக்கல்களே. (தமிழ் விக்கியென்றல்ல, அனைத்து மொழி விக்கிகளிலும் இப்பிரச்சனைகள் உள்ளன). நீங்கள் முன் வைப்பவை இரண்டாகப் பிரிக்கலாம்
1) மாற்றுக் கருத்துகள் உள்ள விசயங்கள். நிருவாகிகள் என்றல்ல அனைத்து பயனர்களுக்கும் ஒரு விசயத்தை எப்படி முன் வைப்பது என்பதில் வேறுபாடுகள் வரும். இது தவிர்க்க இயலாதது. இதனைத் தவிர்க்க ஆங்கில விக்கி போல அனைத்து கூறுகளுக்கும் விதிகள் வகுக்க முயற்சி செய்யலாம், ஆனால் அந்த அணுகுமுறையும் உகந்ததல்ல, அதனால் வேறு பல சிக்கல்களும் உருவாகலாம். எனவே இங்கு பொதுவான சில விதிகள் மற்றும் வழிகாட்டல்கள் தவிர வேறு விசயங்களை இப்படி கூடிப் பேசி ஒரு வழியாக முடிவு செய்வதே வழமையாக உள்ளது. தலைப்பு / கலைச்சொல் / தமிழாக்கம் குறித்த விவாதங்கள் சில நேரங்களில் பல நாட்கள் இழுத்தடித்து முடிவு ஏற்படாமல் போனதும் உண்டு. இவ்வாறு ஒரு கட்டுரை பலரால் பல வகையாக மாற்றப்பட்டு (தலைப்பு, அமைப்பு, நடை போன்றவை) இறுதி நிலையை அடைய பல நாட்கள் ஆகும். இது விக்கி முறையின் பலமும் பலவீனமும் ஆகும். விக்கியில் எழுதும் போது முதலில் கருத்தில் கொள்ள வேண்டியது - நாம் எழுதுவது பலரால் பலவிதமாக மாற்றப்படும் என்பது. இதனை ஏற்றுக் கொள்வது முதலில் சிறிது கடினமாக இருக்கலாம். நாம் கஷ்டப்பட்டு எழுதியதை பிறர் எழுதில் பல வகையாக மாற்றுவதும் நமது படைப்பு நாம் விரும்பா வடிவம் பெறுவதும் விக்கியில் வழக்கமான ஒன்று தான். எனவே இதனைப் பொறுத்தருள வேண்டுகிறேன்.
2) புதிய பயனர்களுக்கு நெரங்குடுக்காமல் பராமரப்பாளர்கள் அவசரப்படுவது - நீங்கள் எழுதி முடிக்கும் முன்னர் வார்ப்புரு இடல், மாற்றல் போன்றவை எழுதுபவருக்கு எரிச்சல் தரக்கூடிய விசயங்களே. இதனை முடிந்தவரை தவிர்க்க நிருவாகிகளும் பிற பயனர்களும் முயலுகிறோம். ஆனால் பல நேரங்களில் எழுத்து முறைத் தொடர்பின் போதாமையாலும், சமச்சீரற்ற பங்களிப்பு காலக்கோடாலும் இது புதிய பயனர்களை கடும் வருத்ததுக்கு ஆளாக்குகிறது (நான் இதை உங்களுக்கு முன்பு மின்னஞ்சலில் கூறியிருந்தேன் என நினைக்கிறேன்). இங்கு நீங்கள் கவனிக்க வேண்டியது, நிருவாகிகள் என்ப்வர் இறுதி முடிவு எடுப்பவர் அல்ல - எடுக்கப்பட்ட முடிவை அமல் படுத்துபவர் மட்டுமே. கட்டுரைத் தலைப்பை மாற்றுவது, நீக்கப் பரிந்துரைப்பது போன்றவற்றை அனைத்து பயனர்களும் செய்யலாம். எனவே இக்குறையினையும் பொறுத்தருள வேண்டுகிறேன்.
விக்கியின் திறந்த நிலை பங்களிப்பு முறையால் இப்படிப்பட்ட சிக்கல்கள் விளைந்தாலும், கட்டுரை இறுதியில் மேம்படும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நீங்கள் மேற் குறிப்பிட்ட அனைத்து கட்டுரைகளும் பிறர் கை வைத்துள்ளதால், முன்பிருந்ததை விட கூடுதல் விசயங்கள் கொண்டுள்ளன. எனவே குறைகள் இருப்பினும் இறுதி வடிவம் நன்றாகவே அமைவதால், விக்கி இயக்கம் இக்குறைகளை சகித்துக் கொள்கிறது. ஆனால் புதிய பயனர்கள் புண்படுவதை தவிர்க்க இயலாமல் போகிறது (விக்கி அறக்கட்டளை இது குறித்து அய்வுகளையும் மேற்கொண்டு வருகிறது)
நான் மின்னஞ்சலில் குறிப்பிட்டதைப் போல இதனை நேரடியாக இன்னும் தெளிவாக விளக்க இயலும். அருள் கூர்ந்து என்னைத் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 13:52, 11 ஆகத்து 2011 (UTC)Reply
  • Theni.M.Subramani,நீங்கள் இதை வளர்த்தெடுக்கும் என்னத்தில் இட்டுள்ளீர்கள் என்பதை நான் அறியவில்லை.
  • மேலும் 20 கட்டுரைகளை மட்டும் எழுதிவிட்டு நான் மட்டும் கட்டுரை எழுதுகிறேன் என்று நான் நினைக்கவில்லை.
  • பொதுவாக விரிவாக்கப்பட வேண்டிய கட்டுரைக்கு அதற்கான வார்ப்புருவை தானே இடுவர். வார்ப்புரு இடப்படுமுன் நீங்கள் காரணத்தை குறிப்பிடவில்லை. இதற்கு முன்னும் சித்தர் நூல்கள் பற்றிய கட்டுரை அடைப்புக்குறிக்குள் தக்க காரணம் குறிப்பிடப்பட்டு நீக்கப்பட்டது. அதற்கு நான் ஒன்றும் கூறவில்லை. *மேலும் under construction வார்ப்புருவை இடாதது என் தவறே. அந்த வார்ப்புருவை பற்றி ஏற்கனவே கூறியிருந்தீர்கள்.
  • உங்கள் தரத்தை பற்றி நான் எதுவும் கூறவில்லை. திடுமென காரணம் கூறாமல் புதியவர்களுக்கு எதையும் செய்ய வேண்டாம் என்பதே என் கருத்து.--தென்காசி சுப்பிரமணியன் 14:59, 11 ஆகத்து 2011 (UTC)Reply
நீங்கள் புதிதாகத் தொடங்கும் கட்டுரைகள் முழுமையடையும் முன்னர் பிறரால் தொகுப்படுவது / வார்ப்புரு இடப்படுவது / நீக்கப்படுவதைத் தவிர்க்க இரு வழிகள் உள்ளன.
1) {{underconstruction}} அல்லது {{வேலைநடந்துகொண்டிருக்கிறது}} என்ற வார்ப்புருவை கட்டுரையின் ஆரம்பத்தில் இட்டு விடுங்கள். இவ்வார்ப்புரு உள்ளவரை பிறர் அக்கட்டுரையைத் தொகுக்கமாட்டார்கள்
2) பயனர்வெளியில் கட்டுரையைத் தொடங்குதல். பயனர் வெளி என்பது, பயனர்களின் தனிப்பட்ட பகுதி, அங்கு முழுக்கட்டுரையும் வளர்த்தெடுத்து விரிவாக்கிய பின்னர் புதிய கட்டுரையாக உருவாக்கி சேமிக்கலாம். உங்கள் பயனர்வெளியில் பிறர் தொகுக்கமாட்டார்கள். பயனர் வெளிப் பக்கத்தை பயனர்:தென்காசி சுப்பிரமணியன்/பயனர்வெளிப்பக்கம் என்ற சிவப்பிணைப்பில் உருவாக்கலாம்.
மேற்கூறிய இரு வழிகளில் ஒன்றினைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் கட்டுரை முழுமையடையுமுன்னர், பிறரால் தொகுக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 15:03, 11 ஆகத்து 2011 (UTC)Reply

மனுவந்தரம்

தொகு

ஐயா, ஒரு பிரம்ம கல்பத்திற்கு 14 இந்திரர்கள். ஒரு பிரம்மநாளுக்கு(2 கல்பம்(பகலிரவு)) 28 இந்திரர்கள்.(28 மனுக்கள்) இது தானே சரி. ஆனால் நீங்கள் 1 பிரம்மநாளுக்கு 14 இந்திரர்கள் என்று மனுவந்தரம் கட்டுரையில் மாற்றம் செய்திருக்கிறீர்கள். எனக்கு அதில் தவறு இருப்பது போல் தெரிகிறது.--தென்காசி சுப்பிரமணியன் 15:52, 14 செப்டெம்பர் 2011 (UTC)Reply

பிரம்மாவின் இரவில் இந்திரன், மனு, மற்றும் பூலோகம், புவர் லோகம், சுவர்லோகம் ஆகிய ஒன்றுமே இருக்காது. ஏனென்றால் பிரம்மாவின் பகல் முடியும்போது பிரளயத்தில் எல்லாம் அழிந்து பகவானிடத்தில் ஒடுங்கிவிடும். பிரம்மாவும் தூங்குவதுபோல் இருப்பார். மறுநாள் (மறு கல்பத்தில்) படைப்பு முதலிலிருந்து தொடங்கும். ஒவ்வொரு கல்பத்திலும் 14 மனுக்களும், 14 இந்திரர்களும் இருப்பர். மனு பூலோகத்திற்கதிபதி. இந்திரன் தேவலோகத்துக்கதிபதி. மனுவும் இந்திரனும் ஒரேகாலத்தவர். இந்திரனின் காலமும் ஒரு மன்வந்தரம் தான்.--Profvk 17:05, 14 செப்டெம்பர் 2011 (UTC)Reply

ஐயா, இந்திரன்=மனு Y ஆயிற்று.

  • ஆனால் ஒரு பிரம்ம நாள்=864 கோடி ஆண்டுகள் = 28 மனுவந்தரம் = 28 இந்திரன்கள் இதுதானே சரி.
  • ஒரு கல்பத்திற்கு 14 இந்திரன்கள்  Y ஆயிற்று. ஆனால் ஒரு பிரம்ம நாளுக்கு 28 இந்திரன்கள் இதுதானே சரி. ஆனால் நீங்கள் ஒரு பிரம்ம நாளுக்கு 14 இந்திரன்கள் என்றல்லவா மாற்றினீர்கள்.
  • ஒன்று ஒரு கல்பம்= 14 இந்திரன்
  • அல்லது ஒரு பிரம்ம நாள்= 28 இந்திரன் அல்லவா.
  • மேலும் ஒரு கற்பம்= பாதி பிரம்மநாள் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்--தென்காசி சுப்பிரமணியன் 17:42, 14 செப்டெம்பர் 2011 (UTC)Reply
சுப்ரமணியன் அவர்களே,

இந்திரனும் மனுவும் வெவ்வேறு. ஆனால் ஒவ்வொரு மன்வந்திரத்திலும் ஒரு மனு பூமியிலும் ஒரு இந்திரன் தேவலோகத்திலும் ஆட்சி செய்வார்கள். 71 மகாயுகத்திற்கு இவர்கள் ஆட்சி செய்வார்கள். பிறகு அடுத்த மன்வந்திரத்திற்காக வேறு ஒரு மனுவும் வேறு ஒரு இந்திரனும் வருவார்கள். இதனால் ஒரு கல்பத்தில் 14 மனுக்கள், 14 இந்திரர்கள் என்று சொல்கிறோம். இரவில் இந்திரனோ மனுவோ கிடையாது. பிரம்மாவின் நாள் காலக்கணக்கிற்காக பகல் + இரவு என்பது சரி. இரவில் வேறு ஒன்றும் கிடையாதாகையால், பேச்சு வழக்கில் பிரம்மாவின் 360 கல்பங்களை, 360 நாட்கள் என்றே சொல்லும் வழக்கம் உண்டு. காலம் கணக்கிடும்போது மட்டும், துல்யமாக பகலுக்காக எடுத்துக்கொள்ளும் 1000 மகயுகங்களையும் இரவுக்காக இன்னொரு 1000 மகாயுகங்களை எடுத்துக்கொள்ள வேணும். ஆனால் இந்த இரவுக்காக எடுத்துக்கொள்ளும் மகாயுகங்களில் காலம்தான் செல்லுமே தவிர இந்திரனோ, மனுவோ,படைப்போ, எந்த விவகாரமோ கிடையாது.--Profvk 02:29, 15 செப்டெம்பர் 2011 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மனுவந்தரம்&oldid=874572" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மனுவந்தரம்" page.