பேச்சு:மலாய் மொழி

Latest comment: 1 ஆண்டிற்கு முன் by ZanzibarSailor in topic National language
இந்த கட்டுரை, தரப்படுத்தப்பட்ட, தகவற் செறிவுள்ள, பயன்படுத்த இலகுவான, மொழிகள் தொடர்பான வளங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட விக்கித் திட்டம் மொழிகள் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபற்ற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


இந்த மொழி மலாயு (Bahasa Melayu) என்றுதான் அழைக்கப்படுகிறது. மலாய் என்பது ஆங்கில வழக்கு. மலாயு மொழி பேசுவோர் மலேசியாவை விட மிகக் கூடுதலான எண்ணிக்கையினர் இந்தோனேசியாவிலேயே உள்ளனர். அதாவது, மலாயு மொழி பேசுவோரின் மொத்த எண்ணிக்கையில் 90% இந்தோனேசியர்கள். இந்தோனேசியாவில் இது மலாயு என்று மாத்திரமே அறியப்படுகிறது. மலாய் என்று எவரும் கூறுவதில்லை. இந்தோனேசியத் தமிழர்களும் மலாயு என்றுதான் கூறுகின்றனர். எனவே, இதன் தலைப்பு மலாயு என்றிருக்க வேண்டும்.--பாஹிம் 08:01, 17 நவம்பர் 2011 (UTC)Reply

மலாயு மொழி என்றே மாற்றலாம்.--Kanags \உரையாடுக 08:11, 17 நவம்பர் 2011 (UTC)Reply
"மலாய் மொழி" என்பதை விட "மலாயு மொழி" என்பது நல்லப் பரிந்துரை. ஆனால் மலாயு மொழி என ஒரே தலைப்பாக இன்றி, "மொழி" என்பதை அடைப்புக்குறிக்குள் இடுதல் (இது போன்ற தலைப்புகளில்) பொறுத்தமற்றது.--HK Arun (பேச்சு) 13:27, 3 திசம்பர் 2012 (UTC)Reply
ஏற்கிறேன். --தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:05, 3 திசம்பர் 2012 (UTC)Reply

மலாய் மொழி

தொகு

வணக்கம். மலேசியாவில் வாழும் தமிழர்கள் மலாய் மொழியை, மலாயு மொழி என்று அழைப்பது கிடையாது. மலாய் மொழி என்றுதான் அழைக்கிறார்கள். ஆங்கிலத்தில் பேசும் போது மலாய் மொழியை Malay Language என்பார்கள். Melayu Language என்று அழைக்க மாட்டார்கள்.

மலாய் என்பது ஓர் இனத்தைக் குறிப்பதாகும். தமிழில் அந்த இனத்தைச் சார்ந்தவர்களை மலாய்க்காரர்கள் என்று அழைக்கிறோம். ஆங்கிலத்தில் Malay People or Malay race. மலாயு என்றாலே அது இனத்தைச் சார்ந்து போகிறது. மொழியைச் சார்ந்து போவது இல்லை. மலாய் மொழி என்பதே சரியான தேர்வு. தவிர, பேச்சு வழக்கில் மலாய் மொழி எனும் தொடர்ச் சொல் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

இருப்பினும், எழுதும் போது மலேசிய மொழி என்றே சொல்வார்கள். எழுதுவார்கள். அதிகாரத்துவமாக மலேசிய ஊடகங்களில் மலேசிய மொழி என்றே பயன்படுத்தப் படுகிறது.Bahasa Malaysia

மலேசியாவில் தமிழ்ப் பள்ளிகளிலும், மலாய்க் கல்லூரிகளிலும் 20 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி இருக்கிறேன். அதனால், மலாய் மொழியைப் பற்றி ஓரளவுக்குத் தெரியும்.

எதிர்காலத்தில் நம்முடைய பதிவுகளில் மலாய் மொழி அல்லது மலேசிய மொழி என்று பதிவு செய்வதை முன்னெடுக்கிறேன். தங்களின் கருத்துகளையும் தெரிவியுங்கள். நன்றி. மலாக்கா முத்துக்கிருஷ்ணன்,பேச்சு--ksmuthukrishnan 11:33, 9 சனவரி 2015 (UTC)Reply

National language

தொகு

Malay language is not the official language of Indonesia as stated in the second paragraph. ZanzibarSailor (பேச்சு) 13:35, 8 அக்டோபர் 2023 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மலாய்_மொழி&oldid=3805131" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மலாய் மொழி" page.