பேச்சு:முத்து குமாரசுவாமி

முத்து குமாரசுவாமி என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


முத்து குமாரசுவாமி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

Untitled

தொகு

முத்துக் குமாரசாமி என்றுதானே இருக்க வேண்டும்!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:33, 2 திசம்பர் 2012 (UTC)Reply

முத்திரையில் அவ்வாறு இல்லை, எனவே முத்து குமாரசுவாமி என்பதே சரி என்று நினைக்கிறேன். --Natkeeran (பேச்சு) 14:34, 2 திசம்பர் 2012 (UTC)Reply

ஏற்கிறேன். இருப்பினும், முத்து தன் பெயராகவும் குமாரசாமி தந்தைப் பெயராகவும் இருந்தால் இவ்வாறு எழுதலாம். ஆனால் பொதுவாக முத்துக்குமரன் என்பதே சரி :) --தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:43, 2 திசம்பர் 2012 (UTC)Reply

விளக்கம்

தொகு

அன்புடன் தமிழ்க்குரிசில், ஒருவரின் பெயர் என்பது பதிவு செய்யப்பட்ட அடையாளமாகும். அதில் எது சரி, எது பிழை என்றெல்லாம் பார்க்க முடியாது. ஒருவரின் பெயர் எவ்வாறு பதிவு செய்யப்படுகிறதோ அப்பெயரை அவ்வாறே பயன்படுத்த வேண்டும். இலங்கையில் ஒரு பெண்ணின் பெயர் வடிச்சம்மா என்றுள்ளது; காரணம் கேட்டப்போது அப்பெண்ணின் பெற்றோர் "வடிவம்மா" என்றே பெயர் சூட்டியுள்ளனர். ஆனால் பெயர் பதிவகத்தில் "வடிச்சம்மா" என்று தவறாக பதிவுசெய்யப்பட்டுவிட்டது. (அவர்கள் முறையிட்டு திருத்தியிருக்கலாம் ஆனால் திருத்தவில்லை) அதனால் அவரின் பெயர் இன்றுவரையும் வடிச்சம்மா தான். இதில் எது சரி, எது பிழை எனும் வாதம் பொருட்டல்ல; பதிவு செய்யப்பட்ட பெயர் அவ்வாறே வழங்கப்படுகிறது. இங்கு ஹொங்கொங்கில் இரண்டு "வடிவேல்" எனும் பெயர் கொண்டோர் இருக்கின்றனர். ஆங்கிலத்தில் ஒருவர் பெயர் Vadivel, மற்றவர் பெயர் Vadiwel என்று கடவுச்சீட்டுகளில் உள்ளது. எனவே அப்பெயர்கள் அப்படியே அனைத்து பதிவுகளிலும் இடம்பெறுகிறது. ஒருவரின் பெயரில் ஒரு எழுத்தையேனும் எவரும் எங்கும் மாற்றுவதில்லை. மாற்றும் உரிமையும் எவருக்கும் இல்லை. காரணம் ஒருவரின் பெயர் என்பது பதிவு செய்யப்பட்ட ஒரு அடையாளம். இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இது பெரிதாக பொருட்படுத்துவதில்லை. ஆனால் ஹொங்கொங் உட்பட ஐரோப்பிய, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் ஒரு எழுத்தையேனும் மாற்றியெழுதப்படுவதில்லை. சிலவேளை எவரேனும் மாற்றி எழுதினால் அதற்காக வழக்குத் தொடரவும் சட்டத்தில் இடமுண்டு.

சிலவேளை ஒரு நபர் தானே தனது பெயரை மாற்ற விரும்பினாலும் கூட, முதலில் பதிவேடுகளில் முறைப்படி பெயர் மாற்றம் செய்யப்பட்ட பின்னரே நடைமுறையில் பயன்படுத்த முடியும். (புனைப்பெயர் விதிவிலக்கு)

ஒன்றுடன் 100 சுழியங்களை குறிக்கும் எண்ணிக்கையை குறிக்கும் சொல்லான Googol என்பதை Google என பதிவுசெய்யப்பட்டுவிட்டதால் அது இன்றுவரை Google தான். காரணம் அது பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர். வணிகப் பெயர் மட்டுமல்ல மனிதப் பெயரும் அப்படித்தான். எப்படி பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அதனை அப்படியே வழங்குதல் தான் முறை. (இவ்விளக்கம் உரையாடலுக்காக கொடுக்கப்படவில்லை; நடைமுறை குறித்த குறிப்பாக இடப்பட்டுள்ளது எனக் கொள்க.) நன்றி! --HK Arun (பேச்சு) 16:03, 2 திசம்பர் 2012 (UTC)Reply

கனிவான பதிலுரைக்கு நன்றி அருண்! :-) பல நேரங்களில் ஆங்கில வழி தமிழாக்கம் செய்கிறோம். பிழை ஏற்படுகின்றன. இது அவ்வகையில் இருக்கலாம் என்று எண்ணினேன். -தமிழ்க்குரிசில்

இது மேனாட்டுவயமாக்கத்தின் ஒரு விளைவாக இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. பெரும்பாலான தமிழ் நூல்களில் "முத்துக்குமாரசாமி" என்றுதான் எழுதுகிறார்கள். இவரது தந்தையார் பெயர் "ஆறுமுகநாதபிள்ளை குமாரசாமி". இவர் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவர். இந்து. அதனால், குமாரசாமி என்பது குடும்பப்பெயராக இருக்காது. "ஆறுமுகநாதபிள்ளை" என்பது அவரது தந்தை பெயராகவும், "குமாரசாமி" என்பது அவர் பெயராகவும் இருக்கும். ஆ. குமாரசாமி சட்டசபை உறுப்பினராகி பிரித்தானியர் தொடர்பு ஏற்பட்டு பிள்ளைகள் மேனாட்டுக் கல்வியும் பெற்றதனால், "குமாரசாமி" என்பது குடும்பப் பெயராகி இருக்கலாம். அந்தக்காலத்தில் தமிழர் பெயர்களை நீளமாக வைப்பதுதான் வழக்கம். "முத்து" என்பது போல் சுருக்கமாக வைத்திருக்க மாட்டார்கள். முத்துக்குமாரசாமி குமாரசாமி என்பதைச் சுருக்கமாக மேனாட்டு முறைக்கு அமைய "முத்து குமாரசாமி" ஆக்கியிருக்கலாம். யாராவது ஆராய்ந்து பார்க்கவேண்டும். இந்துத் தமிழருடைய பெயர்கள் குடும்பப் பெயர் முறையைச் சாராது இருப்பதும், உலகின் பரவலாகக் காணப்படும் முறைக்கு மாறுபாடாக இருப்பதும் வெளிநாட்டுத் தொடர்புகளின்போது பிரச்சினையாக இருப்பதை இன்றும் காணலாம். முதற்பெயர், இறுதிப்பெயர் பிரச்சினையை எல்லா இடங்களிலும் எதிர்நோக்க வேண்டியுள்ளது. இதனால், வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ள தமிழர் பலர் தமது பெயர்களை புதிய வடிவில் மாற்றிக்கொள்கிறார்கள் (சின்னத்தம்பி சற்குணநாதன் -----> குணா சின்னத்தம்பி). இது நம்மிடையே காலங்காலமாக இருந்துவரும் பின்வாங்கி வளைந்து கொடுக்கும் உத்தி என்றுதான் தோன்றுகிறது. நம்முடைய வழக்கங்களையும் ஒரு வேறுபாடாக ஏன் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வலியுறுத்தக்கூடாது என்று தெரியவில்லை. ---மயூரநாதன் (பேச்சு) 10:23, 16 ஆகத்து 2013 (UTC)Reply

கேட் முதலியார்

தொகு

கேட் முதலியார் என்பது ஒரு பதவியா. --Natkeeran (பேச்சு) 16:00, 18 செப்டம்பர் 2013 (UTC)

Return to "முத்து குமாரசுவாமி" page.