பேச்சு:முன்னின்பம்

சரசம் என்பது தமிழ்ச் சொல்லா? எனக்கு ஐயம் உள்ளது. (ரா ரா பாடலில் இச்சொல் இடம்பெறும் என்பதால் கேட்கிறேன்.) --சூர்யபிரகாசு உரையாடுக... 11:12, 26 திசம்பர் 2011 (UTC)Reply

சரசம் என்பதற்கு இனியகுணம் என்று இத்தளத்தில் பொருள் சொல்லப்பட்டுள்ளது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 12:08, 26 திசம்பர் 2011 (UTC)Reply
சரசம் தமிழ்ச்சொல் இல்லை என்றே நினைக்கிறேன். சகரம், சைகாரம், சௌகாரம் ஆகியவற்றில் தமிழ்ச் சொற்கள் தொடங்குவதில்லை என்கிறது, தொல்காப்பியம். இப்போது வழக்கில் சில சொற்கள் இவ்வெழுத்துக்களில் தொடங்கினாலும் எண்ணிக்கை மிகவும் குறைவே. நானும் |மோசோசரசும் செய்த ஆய்வில் இத்தகைய சொற்கள் தமிழ் இலக்கியத்தில் மிக அரிதாகவே தென்படுவதையும், வரலாற்றில் பிந்திய பயன்பாட்டைக் கொண்டிருப்பதையும் காண முடிந்தது. ஆகையால் இத்தகைய சொற்கள் பிறமொழிகளில் இருந்து வந்திருக்கக் கூடும் அல்லது பின்னால் உருவாகியிருக்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 12:56, 26 திசம்பர் 2011 (UTC)Reply
சிற்றின்ப விளையாட்டுகள் மிகப் பொதுவாக இருப்பது போலத் தோன்றுகிறது, தேனி. எம். சுப்பிரமணி. சிறிய இடைவெளிகளில் (நேர இடைவெளிகளைச் சொல்கிறேன், இடுப்பை அல்ல ;)) குறும்பாக அவ்வபோது செய்பவைதாமே அவை? Foreplay என்பது குறிப்பாகப் பாலுறவுக்கு முன்பு பாலுணர்வைத் தூண்டுவதற்காக நிகழ்வதாகும். -- சுந்தர் \பேச்சு 15:16, 26 திசம்பர் 2011 (UTC)Reply
சரசம்/சிற்றின்ப விளையாட்டு இரண்டுமே "foreplay" அல்ல. பாலுறவுக்கு முந்தைய செய்கைகளுக்கு தனியே ஒரு பெயரை உருவாக்க வேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 15:22, 26 திசம்பர் 2011 (UTC)Reply
ஆம், விக்சனரியில் பாலுணர்வுத்தூண்டல், பாலுணர்வூட்டல், பாலுறவின் முன்நிகழ்ச்சி ஆகியவை தரப்பட்டுள்ளன. இவற்றில் கடைசி பொருந்துவது போலத் தோன்றுகிறது. இருந்தாலும் நிறைவாக இல்லை. மேலும், மாந்தநோக்கில் உள்ளதையும் மாற்ற வேண்டும். -- சுந்தர் \பேச்சு 16:54, 26 திசம்பர் 2011 (UTC)Reply
இப்போது கொக்கோகம் எனும் நூலின் உரையொன்று எனக்குக்கிடைத்துள்ளது (நானாகத்தேடிப்பொறுக்கவில்லை ;). அதிலுள்ள சொற்களைக்கொண்டு முறையான தலைப்புகளில் தகவல்களைத்தொகுக்க முயல்வேன், சோடாபாட்டில். முதல்கட்டமாக அதிலிருந்து புறத்தொழில் என்றசொல்லைத் தலைப்பில் சேர்த்துள்ளேன். -- சுந்தர் \பேச்சு 14:04, 5 சனவரி 2015 (UTC)Reply

சுந்தர் கொக்கோகம் ஆ.வி.யில் உள்ளதா? --AntonTalk 17:30, 5 சனவரி 2015 (UTC)Reply

இல்லை அன்ரன். en:Ratirahasya என்ற மூலநூலைப்பற்றிய கட்டுரை மட்டுமே சிக்கியது. -- சுந்தர் \பேச்சு 04:21, 6 சனவரி 2015 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முன்னின்பம்&oldid=1781565" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முன்னின்பம்" page.