பேச்சு:வடசீனா
குறிப்பிடத்தக்கமை
தொகுவணக்கம், //இதற்குரிய குறிப்பிட்ட ஆட்சி எல்லைப் பகுதிகளைச் சீன அரசு வரையறுக்கவில்லை// சீன அரசே வரையறுக்காத நிலப்பகுதிக்கு தனியாக கட்டுரையாக உருவாக்கப்படவேண்டியதன் அவசியம் கூறவும். நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 07:22, 30 மார்ச்சு 2024 (UTC)
- ஆனால் உலக தாவர வளங்களை ஆய்வுசெய்யும் பன்னாட்டு அமைப்புகள், வட நடு சீனாவை என்ற சொல்லினை வரையறுத்துள்ளது. விரைவில் அதற்குரிய கட்டுரையை எழுதுவேன். எடுத்துக்காட்டாக, காண்கஇதில் அரசியல் எல்லைகள் குறிப்பிடப்படுவதில்லை. உயிர் சூழலின் வாழ்விடங்களைக் குறிக்க இது போன்ற சொற்களைப் பயன்படுத்துவர். அவசரம் வேண்டாம். த♥உழவன் (உரை) 07:37, 30 மார்ச்சு 2024 (UTC)
- வணக்கம், //வட நடு சீனாவை என்ற சொல்லினை வரையறுத்துள்ளது.// இந்த இடங்களிலெல்லாம் Rostellularia தாவரம் பூர்வீகமாக உள்ளது என்று தான் கூறப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு மாம்பழம், விருதுநகரில் உள்ள நடுத்தெருவில் பூர்வீகமாக விளைகிறது என்று இந்தத் தளத்தில் இருந்தால் நடுத்தெரு (விருதுநகர்) என்ற கட்டுரையினை உருவாக்கலாமா?
- // உயிர் சூழலின் வாழ்விடங்களைக் குறிக்க இது போன்ற சொற்களைப் பயன்படுத்துவர்// விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று.
- //அவசரம் வேண்டாம்// தங்களது கனிவான கவனத்திற்கு, இந்த வலைதளத்தில் உள்ள தகவல்களை வைத்து இது போன்று அவசர அவசரமாக நான் கட்டுரையினை உருவாக்கவில்லை. மற்ற விக்கிப்பீடியர்களும் ஆட்சேபனைத் தெரிவிக்கவில்லை எனில் இது போன்று விரைவாக கட்டுரைகளை எழுதிக் குவிக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 08:02, 30 மார்ச்சு 2024 (UTC)
//உலக தாவர வளங்களை ஆய்வுசெய்யும் பன்னாட்டு அமைப்புகள், வட நடு சீனாவை என்ற சொல்லினை வரையறுத்துள்ளது.// அங்கு அப்படி ஒன்றும் இல்லையே. தெளிவாகக் குறிப்பிட முடியுமா? நிற்க, இணைத்துள்ள மேற்கோள்கள் பிற விடயத்திற்கேயன்றி வடநடு சீனா பற்றியல்ல. --AntanO (பேச்சு) 09:23, 30 மார்ச்சு 2024 (UTC)
- ஒரு தாவர வாழ்விடம் என்பது சூழ்நிலையை பொறுத்தது. அச்சூழ்நிலை என்பது ஒரு நாட்டின் அரசு சார்ந்த எல்லைகள் அல்ல. உரிய சான்றுகள் ஆங்கிலத்தில் உள்ளதாக எண்ணுகிறேன். மற்றவை தமிழ் விக்கியின் சமுக விருப்பம். கால எல்லைக் கொடுத்தால் அதற்குரிய கட்டுரைய உருவாக்குவேன். துறைசார்ந்த புரிதல் வர இன்னும் பலரை எண்ணிமட கோரியிருக்கிறேன். பொறுக்கவும். த♥உழவன் (உரை) 13:21, 30 மார்ச்சு 2024 (UTC)
- விளையாட்டாக பதில் அளிக்க வேண்டாம். கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கவும். AntanO (பேச்சு) 04:49, 31 மார்ச்சு 2024 (UTC)
விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (புவியியல் சிறப்புக்கூறுகள்) --~AntanO4task (பேச்சு) 09:37, 31 மார்ச்சு 2024 (UTC)
பிற பயனர்களின் கருத்து வேண்டல்
தொகு@Kanags இக்கட்டுரை பன்னாட்டு தாவரவியல் மண்டலங்களில் ஒன்று. இவ்விடம் பல மல்லிகை இனங்களின் பட்டியல் என்பதில் முதலில் கண்டேன். பிறகு மூலிகைப் பட்டியல் (தமிழ்நாடு) என்பனவற்றிலும் கண்டுள்ளேன். பொதுவாக தாவரத் தரவுகள் குறித்து powo தளத்தில் systematic scientists குறிப்பிட்டுள்ளனர். அவர்களின் கூட்டுழைப்பைத் தமிழாக்கம் செய்யவே, இதனைப் பரிந்துரைத்தேன். இதனை வைத்து கட்டுரைகளை உருவாக்குதல் தரமுடையதாக இருக்கும். ஏனெனில், அவ்வறிஞர்கள் குறிப்பிட்டதக்கமை இருப்பதால் தான் அவ்விட்டத்தினை அத்தளத்தில் எழுதியுள்ளனர். இக்கட்டுரைக்குரிய இதையும் காணவும் பகுதி. இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வறிக்கை வாழிடங்களை உருவாக்கலாமா? உங்களின் எண்ணமறிய ஆவல். த♥உழவன் (உரை) 08:09, 31 மார்ச்சு 2024 (UTC)
- இணைப்பில் உள்ள ஆய்வுக்கட்டுரையில் இப்பகுதி ஒருவாறு வரையறுக்கப்பட்டுள்ளது. தாவரவியல் மட்டுமின்றி வானியல் சார்ந்தும் வடசீனத்தின் கிழக்கு, நடு, மேற்குப் பகுதிகளுக்கிடையே வேறுபாடு உள்ளதாகத் தெரிகிறது. அவ்விதத்தில் குறிப்பிடத்தக்கதன்று என்று கூறிவிடமுடியாது. தமிழ்நாட்டிலும்கூட காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை பகுதிகளின் வானிலைக் கணிப்பை ஆர்வலர்கள் ஒற்றை மண்டலமாக அணுகும் போக்கு உள்ளது. திணைக்கோட்பாட்டின் ஒருவகையான நீட்சியான இவற்றைத் தொகுத்து முறைப்படுத்துவது விக்கிப்பீடியாவின் பங்களிப்பாக இருக்கமுடியும். ~paramatamil Paramatamil (பேச்சு) 09:13, 31 மார்ச்சு 2024 (UTC)
- த♥உழவன் (உரை) 02:34, 1 ஏப்பிரல் 2024 (UTC)
- இத்தலைப்பு தனிக் கட்டுரையாக இருப்பதற்கு ஏற்றதல்ல என்பது என் கருத்து. ஆனால், பன்னாட்டு தாவரவியல் மண்டலங்களில் ஒன்றாகக் கருதப்படுவதால் வடசீனா கட்டுரையில் இதனை ஒரு துணைத் தலைப்பாக சேர்க்கலாம். அத்துணைத்தலைப்பிற்கு வடநடு சீனா என்ற வழிமாற்றை ஏற்படுத்தி தாவரவியல் கட்டுரைகளில் இணைப்பைக் கொடுக்கலாம் என்பது என் பரிந்துரை.--Kanags \உரையாடுக 03:48, 1 ஏப்பிரல் 2024 (UTC)
- நன்றி. இக்கட்டுரையை விரிவாக்க தகவல்களை சேகரிக்கிறேன். த♥உழவன் (உரை) 15:11, 1 ஏப்பிரல் 2024 (UTC)
- எ-கா விரிவாக்க நூல் 1 த♥உழவன் (உரை) 15:13, 1 ஏப்பிரல் 2024 (UTC)
- கனக்சு (Kanags) கருத்துக்கு விருப்பம், அதுவே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். சீன மொழி விக்கிபீடியாவில் ஏதேனும் இதைப் பற்றி கட்டுரை உள்ளதா? நான் அறிந்த வரை இருப்பதாக தெரியவில்லை, எனக்கு சீனம் தெரியாது. [1] (சீன விக்கிபீடியாவில் தேடி பார்த்த போது தனிக்கட்டுரை ஏதும் தோன்றவில்லை, ஆனால் ஆதாரங்களில் இந்த சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது). தமிழ் விக்கிப்பீடியப் பயனர்கள் விரும்பினால் zh:Wikipedia:Guestbook for non-Chinese speakers-க்கு எடுத்து செல்லலாம் ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 03:52, 5 ஏப்பிரல் 2024 (UTC)
- எ-கா விரிவாக்க நூல் 1 த♥உழவன் (உரை) 15:13, 1 ஏப்பிரல் 2024 (UTC)
- நன்றி. இக்கட்டுரையை விரிவாக்க தகவல்களை சேகரிக்கிறேன். த♥உழவன் (உரை) 15:11, 1 ஏப்பிரல் 2024 (UTC)
- @Selvasivagurunathan m: இந்தக் கட்டுரையை வடசீனாவுடன் ஒருங்கிணைத்து உதவும் நன்றி. -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 12:29, 9 ஏப்பிரல் 2024 (UTC)