பேச்சு:விவேகானந்தர்
அடைமொழி
தொகுசுவாமி என்ற அடைமொழி தேவையா? அது ஏற்கப்பட்டதா? சர்ச்சைக்காக அல்ல சந்தேகத்திற்காகத்தான். சுவாமி என்ற அடைமொழி த.வியில் பயன்படுத்துவதில்லை பிறரும் பயன்படுத்துவார்களே. மக்கள் ஏற்படுத்திய அடைமொழிதானே? --செல்வம் தமிழ் 17:09, 5 ஜூன் 2009 (UTC)
- செல்வம், நீங்கள் கூறுவது சரி. இங்கு தலைப்பில் சுவாமி தேவையற்றது. "விவேகானந்தர்" என்றே தரலாம்.--Kanags \பேச்சு 21:48, 5 ஜூன் 2009 (UTC)
இங்கு கொடுக்கப்பட்டுள்ள பொன்மொழிகள் ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவும் தவிர்க்கப்படவேண்டிய ஒன்று. ஆங்கிலத்தை மேற்கோளில் கொடுக்கலாமே--செல்வம் தமிழ் 18:59, 5 ஜூன் 2009 (UTC)
- அடைமொழியுடன் தான் நிறைய நூல்களில், மொழிகளில் அழைக்கின்றனர். உள்ளதை உள்ளபடியே பேணுவதில், தமிழ்விக்கிப்பீடியா ஒரு முன்னோடியாக விளங்க வேண்டும். அதற்கு பல விதிவிலக்குகள் அவசியம். ஒருமையில் தான் தலைப்பு இருக்க வேண்டும் என்பது பொது விதி. விதிவிலக்காக நாயன்மார்கள், ஆழ்வார்கள் என்று அமைத்துள்ளோம். பிரபலம் அடைந்த ஒரு பெயரை தலைப்பாக அமைக்கும் போது, இந்த விதிவிலக்கு அவசியம் என்பதே என் எண்ணம்.≈07:12, 8 சூலை 2011 (UTC)த♥உழவன்+உரை..மகாத்மா காந்தி
தலைப்பில் "Swami Vivekananda" என்றே ஆ.வி யில் பயனில் உள்ளது. தமிழிலும் அவ்வாறே பயன்படுத்துதல் பொருத்தமாக இருக்கும் என்றே கருதுகின்றேன். மேலும் துறவிகளுக்கு வழங்கப்படும் சுவாமி எனும் சொல்லுக்கும் மக்களால் பொதுவாக வழங்கப்படும் சொல்லுக்கும் வித்தியாசம் உள்ளது என்றே கருதுகின்றேன். ஏதேனும் குறிப்பிடத்தக்க வழிமுறை அனைத்து மதத்திற்கும் பொதுவாக வரையறுக்கப்பட வேண்டும். குழப்பத்தைத் தவிர்க்க அது உதவும்- Kuzhali.india (பேச்சு) 08:22, 13 திசம்பர் 2014 (UTC)
- ஆளுமைகளின் பட்டங்கள் / பெயர்கள் தொடர்பான மாற்றுக் கருத்துகள் எந்தெந்த கட்டுரைகளில் உள்ளது என்பைதப் பின்தொடர்வதற்காக பெயர் மாற்ற வார்ப்புரு சேர்த்துள்ளேன். இதனை என் தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் சேர்க்கவில்லை.--இரவி (பேச்சு) 19:58, 6 ஏப்ரல் 2015 (UTC)
பிறப்பு
தொகுநரேந்திர தத்தர் அவரது பெற்றோருக்கு முதல் மகனாகப் பிறந்தார் என்பது உண்மையே. ஆனால் புதிதாகப் படிப்பவர்களுக்கு அவர் தான் பெற்றோருக்கு முதல் பிள்ளை என தவறாக நினைக்க வாய்ப்புள்ளது. தத்தருடைய மூத்த சகோதரி(கள்){எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை} பற்றிய குறிப்பையும் இணைத்தல் நலம்.--ஏர்னஸ்டோ பாலாஜி 16:14, 19 திசம்பர் 2011 (UTC)
இவற்றையும் பார்க்க
தொகுஉலகில் மதவெறியால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் புகலிடம் அளித்த நாட்டிலிருந்து வந்தவன் என்றுதான் தன்னை முதல் நாள் பேச்சில் விவேகானந்தர் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
"எங்கெங்கோ தோன்றும் ஓடைகள் அனைத்தும் இறுதியில் கடலில் சங்கமிப்பதைப் போல அனைத்து மதங்களும் இறைவனிடம் சென்று சேர்கின்றன' என்ற பொருள் தரும்பாடலை, சபையில் விவேகானந்தர் பாடியபோது, அந்த சபையே ஸ்தம்பித்து விட்டது [1].
குறிப்பு
தொகுஜனவரி 12. 1863-ம் ஆண்டில் பிறந்த விவேகானந்தர் இளமையிலேயே பகுத்தறிவும், ஆராய்ச்சி மனப்பான்மையும் கொண்டவராக விளங்கினார். கடவுளைக் காண வேண்டும் என்ற தேடல் இறுதியில் குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடராக அவரை ஆக்கியது. இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் படும் துயரங்களை நேரில் கண்ட விவேகானந்தர், அவர்களது துயர் தீர்ப்பதையே தமது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டார். அதற்காகவே உழைத்தார். தமது வாழ்க்கை முழுவதையும் தேச நலனுக்காகவே அர்ப்பணித்தார். அமெரிக்க நாட்டுக்குப் பயணம் செய்து சர்வ சமய மகாநாட்டில் கலந்து கொண்டார். தனது பேச்சால் அங்குள்ளவர்களைக் கவர்ந்தார். அதன் பின் ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து, இந்தியாவின் புகழைப் பரப்பினார். ராமகிருஷ்ண மடத்தை நிறுவி அதன் மூலம் மக்கள் தொண்டாற்றினார். 1902 ம் வருடம், ஜூலை மாதம் நான்காம் தேதி விவேகானந்தர் மகா சமாதி ஆனார் என்றாலும் அவர் விட்டுச் சென்ற சிந்தனைகள் என்றும் நினைவு கூரத் தக்கவை.
சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் கொண்டாடப்படும் இந்த மாதத்தில் (ஜனவரி 12) அவரது சிந்தனைகள் சிலவற்றைப் பார்ப்போமா?
ஏழைகளும் வறியவர்களும் படும் துன்பத்தையும் துயரத்தையும் கண்டு யார் உள்ளம் கசிந்து உருகுகிறதோ, யாருக்கு அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடனடியாக ஏற்படுகிறதோ அவர்களே உண்மையான தேச பக்தர்கள். தேச சேவை செய்வதற்குத் தகுதியானவர்கள். அவர்களே மகாத்மாக்கள்.
கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் இருக்கிறார். இதைத் தவிட தனியாக வேறு ஒரு கடவுள் இல்லை. மக்களுக்கு ஒருவன் செய்யும் சேவை அந்த மகேசனுக்கே செய்யும் சேவையாகும். இதுவே உண்மை.
யார் ஒருவர் எதைப் பெறுவதற்கு தகுதியாக இருக்கிறாரோ அதை அடையவிடாமல் தடுப்பதற்கு, பிரபஞ்சத்தில் உள்ள எந்த சக்தியாலும் முடியாது.
உண்மை, தூய்மை, சுயநலமின்மை இது மூன்றும் யாரிடமெல்லாம் இருக்கிறதோ அவர்களை நசுக்கக் கூடிய சக்தி விண்ணுலகு, மண்ணுலகு என எந்த உலகிலும் இல்லை. ஏன் பிரபஞ்சமே எதிர்த்து நின்றாலும் கூட அவர்களை வெல்ல முடியாது.
உங்கள் வாழ்க்கை சிறந்ததாகவும், தூய்மை உள்ளதாகவும் இருந்தால் மட்டுமே நீங்கள் வாழும் சமுதாயம் தூய்மை உடையதாக இருக்கும். ஆகவே முதலில் உங்களை நீங்கள் எண்ணத்தாலும் செயலாலும் தூய்மைப் படுத்திக் கொள்வது அவசியம்.
சிந்தித்து செயலாற்றத் தெரிந்தவன் அதன் வழிச் செல்கிறான். மற்றவன் விதியைக் குறை சொல்கிறான். நம் விதியை நாமே தான் வகுத்துக் கொள்கிறோம். ஆகவே அதற்குப் பிறரைத் தூற்றுவதில் பயனில்லை. நீ கடவுள் நம்பிக்கை உடையவனோ, அல்லது இறைப்பற்று இல்லாத நாத்திகனோ, எதுவாக இருந்தாலும் சரி, உன் சுக துக்கங்களையும் சுயநலத்தையும் மறந்து உன் கடமைகளை நீ சரிவரச் செய்து வந்தால் போதும். அதுவே மிகப் பெரிய தேச சேவையாகும். இல்லறமோ துறவறமோ எதை வேண்டுமானாலும் நீ தேர்ந்தெடு. ஆனால் இல்லறத்தில் இருக்கும் போது பிறருக்காக வாழ். துறவியாகிவிட்டால் பணம், பந்தம், புகழ், பதவி என அனைத்திலிருந்தும் விலகி இரு.
துன்பங்களைக் கண்டு அஞ்சாதே. பெரிய மரத்தின் மீது புயல் காற்று மோதத் தான் செய்யும். கிளறி விடுவதால் நெருப்பு நன்கு எறியத் தான் செய்யும். தலையில் அடிபட்ட பாம்பு முன்னிலும் வேகமாக படமெடுக்கத் தான் செய்யும். ஆகவே துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல், உறுதியாய் எதிர்த்து நில். உன்னால் எதுவும் முடியும்.
எப்பொழுதும் விரிந்து மலர்ந்து கொண்டிருப்பது தான் வாழ்க்கை. மாறாக சுருங்கி, மடங்கிக் கொண்டிருப்பதே மரணமாகும். தன்னுடைய சுயநலத்தை மட்டும் கவனித்துக் கொண்டு, சுக போகத்துடன் வாழும் ஒருவனுக்கு நரகத்திலும் இடம் கிடைக்காது.
மற்றவர்களுக்கு நன்மை செய்வதே தர்மம். தீமை செய்வதே பாவம். வலிமையும் ஆண்மையுமே வீரம். பலவீனமும் கோழைத்தனமுமே மரணம். மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவதே புண்ணியம். பிறரை வெறுத்து ஒதுக்குவதே பாவம்.
(புகுபதியாத பயனர் விட்டுச்சென்ற குறிப்பு)
- ↑ http://www.vikatan.com/news/miscellaneous/37276.html ஜனவரி 12... விவேகானந்தர் பிறந்த தின சிறப்பு பகிர்வு...