நீக்கம் செய்யப்பட்ட காரணம் அறிய? தொகு

நான் இன்று பதிவு செய்திருந்த ஆதாரத்துடன் கூடிய தகவல் நீக்கம் செய்யப்பட்ட காரணம் திரு. அருளரசன் அவர்களால் நீக்கப்பட்டது குறித்த விளக்கத்தை வேண்டுகிறேன். 1.38.98.77 17:41, 2 ஏப்ரல் 2023 (UTC)

விக்கிப்பீடியாவில் எவரும் தொகுக்கலாம் என்றபோதிலும், உரிய சான்றுகளை அளிப்பது அவசியம். சான்றுகள் இல்லை என்பதால் அவை மீள்விக்கபட்டன.--கு. அருளரசன் (பேச்சு) 02:12, 4 ஏப்ரல் 2023 (UTC)

இரண்ட சான்றுகள் இணைத்து இருந்தேன். அவைகளை குறிப்பிட்டு அதில் எப்பகுதி சான்றின்மை ஆகிறது என குறிப்பிட்டு ஆதாரம் காட்டவும்.
மேலும், இது ஒரு தரப்பினருக்கு மட்டும் ஆதரவாக பதிவிடும் வண்ணம் எழுதிய கட்டுரையாக தோன்றுகிறது. வன்னியர்களை குறிப்பிடும் போது "ஆதிக்க சாதியினர்" என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளீர்கள். அந்த சொல்லாட்சியை ஒரு குறிப்பிட்ட சமூகத்தை நோக்கி குறிப்பிட காரணம் என்ன?
ஆதிக்க சாதி என்னும் சொல்லின் வரையறைகள் என்ன? என்பதை கட்டுரையாளர் விளக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். Magizhnandhan (பேச்சு) 11:32, 15 ஏப்ரல் 2023 (UTC)

கட்டுரையின் தார்மீகம் குறித்து...? தொகு

இக்கட்டுரை மிக மிக ஐயப்பாடுகள் கொண்ட சங்கதிகளை எழுதப்பட்டதாக தோன்றுகிறது. முழுக்க முழுக்க தலித் தரப்பை மட்டும் ஆதரிக்கும் கட்டுரை ஆசிரியரால் அரசியல் உள் நோக்கத்துடன் உண்மையை சீர்தூக்கி பார்க்கவோ, சான்றுகளை ஆராய்ந்து பார்க்கவோ நேர்மை இல்லாமல், மற்றொரு தரப்பின் EDIT களை உரிய காரணம் இல்லாமல் நீக்கும் போக்கு உள்ளது. இவ்வளவு சாதிய வன்மம் கொண்ட கட்டுரையாளரை விக்கிபீடியா எப்படி அனுமதிக்கிறது. விக்கிபீடியாவில் உள்ள அனைத்தும் 100% உண்மை என நம்பும் இன்றும் உள்ளனர். அவர்களுக்கு இவர்களின் நேர்மை தரம் தான் என்ன? ஊடகங்களை ஆக்ரமித்து வைத்திருப்பதைப் போன்று, இன்று மக்கள் ஊடகமான விக்கிபீடியா போன்ற களஞ்சியங்களையும் ஒரு அரசியல் சித்தாந்த அல்லது அரை வேக்காடு அரசியலாளர்கள் கைப்பற்றிக் கொண்டு பாரபட்சமாய் நடந்து வருவதற்கு இதுவே சாட்சி. Kannanmani1983 (பேச்சு) 08:10, 22 ஏப்ரல் 2023 (UTC)

@Kannanmani1983: நீங்கள் சேர்த்த உள்ளடக்கங்கள் கலைக்களஞ்சிய நடையில் இல்லை. எனவே அவை நீக்கப்பட்டன. இக்கட்டுரையின் தற்போதைய உள்ளடக்கங்கள் சரிபார்க்கப்பட்டு, நடுநிலை நிலைநிறுத்தப்படும். —-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:51, 22 ஏப்ரல் 2023 (UTC)
கலைக்களஞ்சிய நடை என்பதை எனக்கு புரியும்படி விளக்கினால் நன்று சகோதரா? நான் பதிந்து இருந்ததில் இருந்து எதேனும் ஒரு பகுதியை சுட்டிக் காட்டி அதன் தவறு என்ன என்றும், எப்படி இருந்தால் சரியானது என்றும் விளக்கினால் அதை சரி செய்துக் கொள்வேன். Kannanmani1983 (பேச்சு) 10:38, 22 ஏப்ரல் 2023 (UTC)
வணக்கம், உங்களது கருத்துக்களது நன்றி,
//நான்கு தாழ்த்தப்பட்டவர்கள் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது, பானைகள் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து அவர்கள் அறிந்துள்ளனர்.இதையடுத்து, மது போதையில் அவர்கள் மாற்றுக் கட்சியினர் குறித்து திட்டியுள்ளனர்.//
//அதே வாக்குச்சாவடிக்கு மாம்பலம் சின்னத்திற்கு வாக்களிக்கச் சென்ற வீர பாண்டியன் என்பவரை, ஊனமுற்றோர் என்றுகூட பாராமல் வழிமறித்து விசிகவினர் தாக்கியுள்ளனர்.//
//வெற்றி வாய்ப்பு இருந்தும் மோதல் ஏற்படக் கூடாது என்ற காரணத்திற்காக மட்டுமே சிதம்பரம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடவில்லை.//
//இதனை வைத்துப் பார்க்கும் பொழுது பின்புலத்தில் ஸ்டாலின் இருந்து கொண்டு ஆளும் அரசுக்கு கலங்கம் விளைவிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான் இவ்வாறு திட்டமிட்ட செயல்படுகிறார்.//
//திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை நவீன தீண்டாமை, அரசியல் தீண்டாமையுடன் தான் திமுக நடத்திவருகிறது.//
//‘‘சிதம்பரம் தொகுதியில் எங்களின் கட்சி வெற்றி பெற்ற பிறகு, இங்குள்ள பெண்களின் கதி என்ன ஆகப்போகிறது பாருங்கள்’’ என்று மிரட்டியுள்ளனர்.//
//[[சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்]] (செ.வ.ஆ.மை) எனும் கிறிஸ்துவ பின்புலம் கொண்ட அமைப்பு//
இவை எல்லாம் அரசியல் கட்சிகள் மற்ற கட்சிகளை விமர்சிக்கும் போக்கில் உள்ளது. நீங்கள் மேலே குறிப்பிட்ட தகவல்களுக்கு ஆதாரங்கள் இல்லையே? சான்றுகளுடன் உங்களது தகவல்களைச் சேருங்கள். சாதிச் சண்டைகளுக்கான தளம் இதுவல்ல.விக்கிப்பீடியா அனைத்து மக்களுக்கானது. நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 02:34, 23 ஏப்ரல் 2023 (UTC)
அவை அனைத்தும் ஒரு சொல்கூட மாறாமல் நான் அளித்திருந்த citation attachment லிங்கில் இருந்தது. அவை நக்கீரன், பிபிசி உள்ளிட்ட நிறுவனங்களிலN பிரசுரமான செய்திகள்.
சாதி சண்டைகளுக்கான தளம் எதுவுமே இல்லை. ஆனால், நீங்களேஇக்கட்டுரையை படித்து பாருங்கள். அவை ஒரு சாதி சார்பு கொண்டு, மிக மோசமான சொற்களை சுட்டி எழுதப்பட்டுள்ளது.
இக்கட்டுரையில், "அப்பகுதியில் மது விற்பனை செய்து வரும் பா.ம.க நபர்" என்று ஒரு வாக்கியம் வருகிறது. அதற்கு என்ன ஆதாரம் என்று கட்டுரை ஆசிரியரை சான்று கொடுக்க சொல்லுங்கள் நண்பரே Magizhnandhan (பேச்சு) 15:21, 25 ஏப்ரல் 2023 (UTC)
நண்பருக்கு வணக்கம்,//நான் அளித்திருந்த citation attachment லிங்கில் இருந்தது// இங்கு நீங்கள் சேர்த்த தகவல்களில் எந்த சான்றுகளும் தரப்படவில்லை.
//அப்பகுதியில் மது விற்பனை செய்து வரும் பா.ம.க நபர்// இப்படி ஒரு வரி இல்லை.
//சாதி சண்டைகளுக்கான தளம் எதுவுமே இல்லை.// புரிதலுக்கு நன்றி. விக்கிப்பீடியாவில் ஆக்கபூர்வமாகப் பங்களிப்பீர்கள் என நம்புகிறேன். எந்த சந்தேகம் என்றாலும் தயங்காது கேளுங்கள். எந்தக் கட்டுரையில் தவறான தகவல்கள் இருந்தாலும் தயங்காது ஆதாரங்களுடன் கூறுங்கள் . சரிசெய்யக் காத்திருக்கிறோம்.நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 17:14, 25 ஏப்ரல் 2023 (UTC)
"இப்பகுதியில் மது விற்பனை செய்து வந்த மாற்றுத்திறனாளி வன்னியர் ஒருவரை தலித் இளைஞர் ஒருவர் தாக்கியதாக வதந்தி பரப்பப்பட்டதாக பா.ம.க மீது செ.வ.ஆ.மை குற்றம் சாட்டியது"
இவை கட்டுரையில் இடம்பெற்றுள்ள வாக்கியம். அந்த மாற்று திறனாளி மது விற்பனை செய்ததாக சொல்லப்படுவதற்கு சான்று? Magizhnandhan (பேச்சு) 12:07, 26 ஏப்ரல் 2023 (UTC)
நான் சேர்த்த தகவல்கள் அனைத்தையும் பகிரவும். அனைத்தையும் அழித்து விட்டு, ஆதாரம் இணைக்கவில்லை என சொல்வது சரியா? ஏன் மற்றொரு தரப்பினரின் சான்றுகள் மறுக்கப்படுகின்றன.? இதன் உள்நோக்கம் என்ன?
https://tamil.news18.com/news/tamil-nadu/pmk-advocate-balu-meets-press-to-clarify-on-ponparappi-violence-vi-145051.html
https://www.nakkheeran.in/24-by-7-news/politics/ponparappi-incident-police-focus
இவைகள் நான் பகிர்ந்த சான்றுகள். இதை மறுப்பதற்கான காரணம்? Magizhnandhan (பேச்சு) 12:15, 26 ஏப்ரல் 2023 (UTC)
ஆம். ஆதாரம் இணைத்துள்ளீர்கள்.
//இப்பகுதியில் மது விற்பனை செய்து வந்த மாற்றுத்திறனாளி வன்னியர்// இதற்கு சான்று இருந்தது. ஆனால் அந்த இணைப்பில் அவ்வாற்றான தகவல் இல்லை என்பதால் அந்த வரி நீக்கப்படது.
விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு இந்தப் பக்கத்தினையும் பாருங்கள். மேலும், இந்தக் கட்டுரையில் தவறான தகவல்கள் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் அதனைக் குறிப்பிட்டு ஆதாரத்தோடு கூறினால் தகவல்களை நீக்கலாம். நன்றி
. ஸ்ரீதர். ஞா (✉) 13:29, 26 ஏப்ரல் 2023 (UTC)
இப்பொழுது இருக்கும் கட்டுரையில் தான் நான் சொன்ன "இப்பகுதியில் மது விற்பனை செய்து வந்த மாற்றுத்திறனாளி வன்னிய" எனும் வரி உள்ளது. அதை எழுதியவரி்டம் கேட்கிறேன். அதன் ஆதாரம் என்ன என்று? Kannanmani1983 (பேச்சு) 04:15, 27 ஏப்ரல் 2023 (UTC)
தற்போது இடம் பெற்றுள்ள கட்டுரை நடுநிலை நோக்கோடு இருக்கிறது என மனசாட்சியுடன் சொல்லுங்கள் பார்க்கலாம்? Kannanmani1983 (பேச்சு) 04:17, 27 ஏப்ரல் 2023 (UTC)
என்னங்க ஒரு விளக்கும் கூட கொடுக்காமல் தட்டிக் கழிக்க பார்க்கிறீர்கள் Magizhnandhan (பேச்சு) 11:28, 30 ஏப்ரல் 2023 (UTC)
ஏற்கனவே நான் கூறியது தான் //இந்தக் கட்டுரையில் தவறான தகவல்கள் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் அதனைக் குறிப்பிட்டு ஆதாரத்தோடு கூறினால் தகவல்களை நீக்கலாம். நன்றி// ஸ்ரீதர். ஞா (✉) 03:08, 1 மே 2023 (UTC)Reply
ஆதாரம் இல்லாத தகவலை சொல்லி இருக்கிறார்கள். அதனை தான் நான் நீக்க சொல்கிறேன் அல்லது அதற்கான ஆதாரத்தை கொடுக்கவும்.
"இப்பகுதியில் மது விற்பனை செய்து வந்த மாற்றுத்திறனாளி வன்னிய"
இதுதான் கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் வரி. இதற்கு ஆதாரம் கொடுக்காமல் வன்னியர் மது விற்பனை செய்து வந்ததாக பொய்யான உள்நோக்கம் கொண்ட ஒரு குற்றச்சாட்டைகூறினால் எப்படி? முதலில் அவ்வரியை நீக்கவும் அல்லது அதற்கான ஆதாரத்தை கொடுக்கவும். Magizhnandhan (பேச்சு) 05:46, 1 மே 2023 (UTC)Reply
தேவையான இடத்தில் {{சான்று தேவை}} வார்ப்புரு இடவும். ஸ்ரீதர். ஞா (✉) 07:45, 1 மே 2023 (UTC)Reply

தொடர்ந்து நான் இடும் தொகுப்பை நீக்கி வருவது தொடர்பாக தொகு

இரண்டு நாட்கள் முன்னர் கூட நான் ஆதாரத்துடன் தகவலை இணைத்து கட்டுரையில் சேர்த்து இருந்தேன். இருப்பினும் அது நீக்கபபட்டு உள்ளது. என்ன காரணத்தால் நீக்கப்பட்டது என சொல்லாமல் தவிர்ப்பதும், ஏற்கனவே கட்டுரையில் இருக்கும் பாரபட்ச தொனியும் பல சந்தேகங்களுக்கு இடம் அளிக்கிறது Kannanmani1983 (பேச்சு) 17:14, 7 மே 2023 (UTC)Reply

Return to "2019 பொன்பரப்பி வன்முறை" page.