2019 பொன்பரப்பி வன்முறை
2019 பொன்பரப்பி வன்முறை (2019 Ponparappi violence), 2019 இந்தியப் பொதுத் தேர்தலின் வாக்குப்பதிவு நாளான 2019, ஏப்ரல், 18 அன்று தமிழ்நாட்டின் பொன்பரப்பி கிராமத்தில் நடந்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) ஆதரவாளர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) உறுப்பினர்களுக்கும் இந்து முன்னணி உறுப்பினர்களுக்கும் இடையே கைகலப்பு மற்றும் ஆர்பாட்டமாக வன்முறை தொடங்கியது. இது தலித் குடியிருப்பில் பா.ம.க.வினரின் வன்முறைக்கு வழிவகுத்ததாக கூறப்படுகிறது. வன்முறையின் போது 60 முதல் 115 தலித் வீடுகள் சேதமடைந்ததுடன் தலித்துகளும் தாக்கப்பட்டனர்.
2019 பொன்பரப்பி வன்முறை | |
---|---|
தமிழ்நாட்டின் பொன்பரப்பியில் தலித் சமூகத்திற்கு எதிரான வன்முறை | |
தேதி | 18 ஏப்ரல் 2019 |
அமைவிடம் | |
காரணம் | சாதி பதற்றம், அரசியல் பதற்றம் |
முறைகள் | கலவரம் விளைவித்தல், திடீர்தாக்குதல் |
உயிரிழப்புகள் | |
காயமுற்றோர் | 18 |
சேதம் |
|
2019 இந்தியப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது பதற்றம் தொடங்கியது, அங்கு இந்து முன்னணியைச் சேர்ந்த சிலர் வி.சி.கவின் தேர்தல் சின்னமான பானையை உடைத்ததாகவும், பா.ம.கவின் சில உறுப்பினர்கள் வயதான தலித் நபரை தேர்தலில் வாக்களிக்க விடாமல் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த பதற்றம் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு மற்றும் கல் வீச்சுக்கு வழிவகுத்தது. பின்னர் பா.ம.க.வை சேர்ந்த 100 பேர் கொண்ட கும்பல் தலித் குடியிருப்பில் தலித்களின் வீடுகள், வீட்டு உபயோக பொருட்கள், வாகனங்களை போன்றவற்றை சேதப்படுத்தியது. மேலும் பெண்கள், குழந்தைகள் உட்பட தலித் மக்களை தாக்கியது. தலித் பெண்கள் மீது பாலியல் அத்துமீறல் நடந்ததாகவும் செய்திகள் வெளியாகின. [1]
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (செ.வ.ஆ.மை) நடத்திய ஆய்வில், வன்முறைக்கு இந்து முன்னணி மற்றும் பா.ம.க மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் "முன்கூட்டியே திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டது" என்றும் செ.வ.ஆ.மை தெரிவித்தது.
பின்னணி
பொன்பரப்பி கிராமம் இந்திய ஒன்றியம் தமிழ்நாட்டின், அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 300 குடும்பங்களும், வன்னியர் சாதியைச் சேர்ந்த 1000 குடும்பங்களும் வசித்து வந்தன. தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் போன்ற திட்டங்களுக்காக தலித்துகள், வன்னியர்கள் வாழும் பகுதிக்கு செல்ல வேண்டியிருந்தது. [2]
இந்து முன்னணி என்ற இந்துத்துவா அமைப்பானது, பட்டியல் சாதி மக்களிடையே கிறிஸ்தவர்கள் இருப்பதால் ஆதிக்க சாதி வன்னியர்களிடையே பிரபலமடைந்தது. [3]
தேர்தல் விதிமீறல்கள்
மாநிலத்தின் பல பகுதிகளில் வாக்குப்பதிவு நாளில் அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நடந்தன. கள்ள வாக்குப் பதிவு, வாக்காளர்களின் பெயர்களை பெருமளவில் நீக்குவது போன்ற நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டன. [சான்று தேவை]
தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள நத்தமேடு கிராமத்தில், பா.ம.க.,வைச் சேர்ந்தவர்கள், கள்ள வாக்கு செலுத்தியதாக கூறப்படுகிறது. வேலூரில் உள்ள கீழ்விஷாரத்தில் கைகலப்பில் ஈடுபட்ட இரு கட்சி உறுப்பினர்களை கலைக்க மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.[4]
பதட்டங்கள்
வன்னியர் சாதியைச் சேர்ந்த சிலர் ஒரு முதியவரை வாக்களிக்க விடாமல் தடுக்க முயன்றதால், அந்த நபர் காவல்துறையினரின் உதவியுடன் வாக்களித்ததாகவும், இந்து முன்னணியினர் குடிபோதையில் ஊராட்சி அலுவலகம் முன்பு இருந்த மண் பானையை உடைத்ததாகவும் கூறப்படுகிறது. 2019 இந்தியப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் சின்னமாக மண் பானை இருந்தது. [1] இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் வலுத்ததால், கைகலப்பு, கல்வீச்சு நடந்தன. இதில் சாலையோரத்தில் இருந்த விசிக கட்சி கொடிக்கம்பம் சேதப்படுத்தபட்டது. [3] [5] [4]
தாக்குதல்கள்
2019 ஆம் ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தலின் வாக்குப்பதிவு நாளில் அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டாளியான பா.ம.கவைச் சேர்ந்த சுமார் 100 ஆதிக்க சாதி உறுப்பினர்களைக் கொண்ட கும்பல் தலித் குடியிருப்புக்குள் நுழைந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட தலித்துகளைத் தாக்கி விசையுந்துகளை சேதப்படுத்தினர். [6] ஒரு மணி நேரம் நீடித்த இந்த வன்முறையில் 2 வன்னியர்கள் மற்றும் 16 தலித்துகள் காயமடைந்தனர். முதற்கட்ட தகவல்களின்படி, கிட்டத்தட்ட 65 வீடுகள் மற்றும் 12 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளன. [7] [8]
தாக்குதலின் விளைவாக நூறுக்கும் மேற்பட்டோர் வாக்களிக்கவில்லை. மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற சில தலித் மாணவர்கள் தங்கள் பள்ளிகள் வன்னியர் பகுதியில் அமைந்துள்ளதால் சான்றிதழ்களைப் பெறச் செல்லவில்லை.[2]
விசாரணைகள்
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (செ.வ.ஆ.மை) ஏப்ரல் 25 அன்று நடத்திய ஆய்வில், இந்தத் தாக்குதல்களுக்கு பாமகவும், இந்து முன்னணியும்தான் காரணம் என்று அறிக்கை அளித்தது. தலித் பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும், தாக்குதல் நடத்தியவர்களால் வாய்மொழியாகவும் பாலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் குழு தெரிவித்தது. பெண்கள் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கெஞ்சியபோது, தாக்குதல் நடத்தியவர்கள் பெண்களை அவதூறு செய்தனர். [1] இந்தக் குழு, இந்த வன்முறை "முன்கூட்டிய திட்டமிட்ட தாக்குதல்" என்றும் குறிப்பிட்டது. [2]
மதுரையைச் சேர்ந்த உரிமைகள் அமைப்பு, நிகழ்விடத்திலேயே மதிப்பீடு செய்து, 115 வீடுகள் சேதமடைந்ததாகவும், அதில் 25 வீடுகள் முற்றிலும் சேதமடைந்ததாகவும், 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பலரின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கை அளித்தது. தாக்குதல் நடத்தியவர்கள் பெண்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை இழிவான வார்த்தைகளால் திட்டியதாகவும் அந்த அமைப்பு தெரிவித்தது. தலித் குடியிருப்பில் வசிப்பவர்கள் வி.சி.கவுக்கு அதிகளவில் வாக்களித்ததாக அந்த அமைப்பின் நிறுவனர் கதிர் தெரிவித்தார், இது பா.ம.கவை கோபப்படுத்தியது, வன்முறைக்கு வழிவகுத்தது எனக் கூறினார். [4] வன்முறையை விசாரிக்க காவல்துறையை அனுமதிப்பதற்குப் பதிலாக இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை அழைக்கவும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. [9]
கைதுகள்
2016 அரியலூர் கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்து முன்னணியைச் சேர்ந்தவர் உள்ளிட்ட இந்து முன்னணியைச் சேர்ந்தர்கள் மற்றும் பாமக உறுப்பினர்கள் மீது காவல்துறையால் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தலித்துகள் மீது 24 வழக்குகளை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். [2] [10]. வன்முறைக்குப் பிறகு, வன்முறை தொடர்பான தாக்குதல் ஒலிக்கோப்பை பரப்பியதற்காக விசிகவைச் சேர்ந்த 9 பேரும் கைது செய்யப்பட்டனர். [8]
அரசியல் எதிர்வினைகள்
தலித்துகள் மற்றும் அவர்களின் சொத்துக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதால், காவல்துறை அதிகாரிகள் வெறும் பார்வையாளர்களாக இருந்ததாக காங்கிரஸ் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவின் தமிழ்நாட்டு பிரிவின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்தது. [11] வன்முறைக்கு பாமகவும், இந்து முன்னணியும்தான் காரணம் என்றும் அவர்கள் கூறினர். [12] அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே. ஜெயக்குமார் கூறியதாவது: பாமக பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில்தான் வன்முறை நடக்கிறது. [13]
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டி. டி. வி. தினகரன் தாக்குதலை தடுக்க தவறியதாக காவல்துறை மீது குற்றம் சாட்டினார். [14]
வாக்குப்பதிவு நாளில் ஏற்பட்ட மோதலை, பா.ம.க. மீது அவப் பெயரை ஏற்படுத்த வி.சி.கவே, நடத்தியது என்று பா.ம.க. கூறியது. [12] [15]
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு. க. ஸ்டாலின், வன்முறைக்கு கண்டனம் தெரிவித்ததுடன், மக்களிடையே சகோதரத்துவத்தை வளர்க்க நடவடிக்கை எடுக்குமாறு தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் டிஜிபி ஆகியோரை வலியுறுத்தியுள்ளார்.[16] [17]
இந்த வன்முறைக்கு பா.ம.க.வும், இந்து முன்னணியும் தான் காரணம் என வி.சி.க., பொதுச் செயலர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியதுடன், தமிழகத்தில் தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்ற அச்சத்தில் அதிமுகவும், பாஜகவும் பல்வேறு இடங்களில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டதாக கூறினார். குறிப்பாக பாமக தேர்தலில் வெற்றி பெற சாதிக் கலவரத்தை தூண்டி வருகிறது என்றார்.[18] மேலும், அங்கு மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்று கூறிய அவர், வன்முறையின் போது 150 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் கூறினார்.[19] [5]
வன்முறைக்கு கண்டனம் தெரிவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வைகோ, வன்முறையை தடுக்கத் தவறிய காவல்துறையினரையும் குற்றம் சாட்டினார்.[20]
கமல்ஹாசன் 300 ஆண்டுகளுக்கு முந்தைய சாதி வன்முறையைப் பற்றி பேசும் தனது தாமதமான மருதநாயகம் படத்துடன் வன்முறையை ஒப்பிட்டார்.[21] இந்த வன்முறை ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கே அவமானம் என்றும் அவர் கூறினார்.[22]
மேலும் பார்க்கவும்
குறிப்புகள்
- ↑ 1.0 1.1 1.2 "Fact-finding team blames PMK for Ponparappi violence". dtNext.in (in ஆங்கிலம்). 2019-05-10. Archived from the original on 2021-11-22. பார்க்கப்பட்ட நாள் 2020-09-06.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Attack on Dalits in Ponparappi was preconceived and murderous: MIDS study". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-09-06.
- ↑ 3.0 3.1 "Simmering animosity led to attack on SCs in Ponparappi: fact finding team" (in en-IN). The Hindu. 2019-04-25. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/simmering-animosity-led-to-attack-on-scs-in-ponparappi-fact-finding-team/article26943497.ece.
- ↑ 4.0 4.1 4.2 Rajasekaran, Ilangovan. "Dalits in Tamil Nadu village attacked for voting in election". Frontline - The Hindu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-06.
- ↑ 5.0 5.1 "Police security beefed up in Ponparappi, but Dalits fear escalation of tension". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-09-06.
- ↑ "20 Dalit Homes Allegedly Attacked by PMK Workers in Ariyalur". NewsClick (in ஆங்கிலம்). 2019-04-19. பார்க்கப்பட்ட நாள் 2020-09-06.
- ↑ Ravishankar, Sandhya. "How WhatsApp Facilitated Serial Caste Clashes In Tamil Nadu". The Lede (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-06.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 8.0 8.1 "Police arrest 9 men for circulating offensive audio related to Ponparappi violence". The News Minute. பார்க்கப்பட்ட நாள் 2020-09-06.
- ↑ TNN. "Call for NHRC probe into poll day violence against dalits | Trichy News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-06.
- ↑ Venkatesh, M. R. (2019-04-22). "Post-poll scene in Tamil Nadu, a mirror to recurring caste-based violence". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-06.
- ↑ TNN (Apr 25, 2019). "Police were mute witness to Ponparappi incident: Congress | Trichy News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-06.
- ↑ 12.0 12.1 "Congress fact-finding team blames PMK for Ponparappi clash" (in en-IN). 2019-04-24. https://www.thehindu.com/news/national/tamil-nadu/congress-fact-finding-team-blames-pmk-for-ponparappi-clash/article26926227.ece.
- ↑ "பாமகவினர் அதிகம் உள்ள இடங்களில்தான் வன்முறை நடக்கிறது - கே.ஜெயக்குமார் காட்டம்!!". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2020-09-06.
- ↑ "Cong, CPM, TTV blame police for Ariyalur violence". dtNext.in (in ஆங்கிலம்). 2019-04-21. Archived from the original on 2020-11-12. பார்க்கப்பட்ட நாள் 2020-09-06.
- ↑ "VCK fearing defeat blaming us, says PMK". dtNext.in (in ஆங்கிலம்). 2019-04-24. Archived from the original on 2021-09-27. பார்க்கப்பட்ட நாள் 2020-09-06.
- ↑ "MK Stalin condemns attack, other incidents on election day". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-09-06.
- ↑ "வீடுகளை உடைக்கும் பழக்கத்திற்கு மீண்டும் தூபம்-பொன்பரப்பி சம்பவத்திற்கு ஸ்டாலின் கண்டனம்". Kalaignar Seithigal. பார்க்கப்பட்ட நாள் 2020-09-06.
- ↑ Hemavandhana (2019-04-19). "பாமக போல சாதி கட்சிகள் இருந்தால் சமூக ஒற்றுமை எப்படி ஏற்படும்.. திருமா கேள்வி". OneIndia. பார்க்கப்பட்ட நாள் 2020-09-06.
- ↑ Kolappan, B. (2019-04-22). "It is my duty to liberate Vanniyars from PMK’s clutches: VCK leader" (in en-IN). https://www.thehindu.com/news/national/tamil-nadu/it-is-my-duty-to-liberate-vanniyars-from-pmks-clutches-vck-leader/article26906273.ece.
- ↑ "பொன்பரப்பி வன்முறை சம்பவம்: டாக்டர் ராமதாஸ், வைகோ கண்டனம்". Dailythanthi.com. 2019-04-20. பார்க்கப்பட்ட நாள் 2020-09-06.
- ↑ "Kamal Haasan tweet points to shameful caste violence". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2019-04-21. பார்க்கப்பட்ட நாள் 2020-09-06.
- ↑ Veerakumar (2019-04-20). "பொன்பரப்பி சம்பவங்கள், தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம். கமல்ஹாசன் கடும் கோபம்". OneIndia. பார்க்கப்பட்ட நாள் 2020-09-06.