பேய்க் கோபுரம்
பேய்க் கோபுரம் (Devils Tower, லகோட்டா மொழி: Matȟó Thípila ("கரடி வீடு") அல்லது Ptehé Ǧí ("கறுப்பு எருமைக் கொம்பு") (அரபாகோ மொழி: Wox Niiinon [5]) என்பது தென்கிழக்கு வயோமிங்கின் குறூக் கவுண்டியில் அமைந்துள்ள ஒரு தீப்பாறை குவிவளை முகடு ஆகும். இது 1,267 அடி (386 மீ) உயரத்திற்கு சூழவுள்ள நிலப்பிரதேசத்திலிருந்து உயர்ந்தும், கடல் மட்டத்திலிருந்து இதன் சிகரம் 5,114 அடி (1,559 மீ) உயரத்திலும் உள்ளது.
பேய்க் கோபுரம் Devils Tower | |
---|---|
Matȟó Thípila (லகோட்டா மொழி) | |
பேய்க் கோபுரம், 2005 | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 5,114 அடி (1,559 m) NAVD 88[1] |
புவியியல் | |
அமைவிடம் | குறூக் கவுண்டி, அமெரிக்கா 44°35′26″N 104°42′55″W / 44.59056°N 104.71528°W |
மூலத் தொடர் | கறுப்புக் குன்று |
அமைப்பியல் வரைபடம் | ஐ.அ.நி.அ பேய்க் கோபுரம் |
நிலவியல் | |
மலையின் வகை | குவிவளை முகடு |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | வில்லியம் ரோஜர், வில்லியம் ரிப்லி, சூலை 4, 1893 |
எளிய வழி | டுரன்ஸ் பாதை |
பேய்க் கோபுர தேசிய நினைவுச்சின்னம் | |
---|---|
ஐயுசிஎன் வகை III (இயற்கை நினைவகம்) | |
அருகாமை நகரம் | குல்லெட் |
பரப்பளவு | 1,346 ஏக்கர்கள் (545 ha)[3] |
நிறுவப்பட்டது | செப்டம்பர் 24, 1906 |
வருகையாளர்கள் | 395,203 (in 2011)[4] |
நிருவாக அமைப்பு | தேசிய பூங்கா சேவை |
பேய்க் கோபுரம் முதன் முதலில் ஐக்கிய அமெரிக்கா தேசிய நினைவுச்சின்னமாக அந்நாட்டதிபர் தியொடோர் ரோசவெல்ட்டினால் செப்டம்பர் 24, 1906 அன்று அறிவிக்கப்பட்டது. இந்நினைவுச்சின்னத்தின் எல்லை 1,347 ஏக்கர் (545 கெ) பரப்பைக் கொண்டது.
கடந்த வருடங்களில், இதன் வருடாந்த 400,000 வருகையாளர்களின் கிட்டத்தட்ட 1% பேர் இதன்மீது பாரம்பரிய மலையேற்ற நுட்பத்தினைப் பயன்படுத்தி ஏறினர்.[6]
உசாத்துணை
தொகு- ↑ "Devils Tower, Wyoming". Peakbagger.com. பார்க்கப்பட்ட நாள் 2012-12-14.
- ↑ Geographic Names Information System. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை, United States Department of the Interior.
- ↑ "Listing of acreage as of December 31, 2011". Land Resource Division, National Park Service. பார்க்கப்பட்ட நாள் 2012-05-13.
- ↑ "Five Year Annual Recreation Visits Report". Public Use Statistic Office, National Park Service. பார்க்கப்பட்ட நாள் 2011-06-30.
- ↑ "English–Arapaho dictionary". பார்க்கப்பட்ட நாள் 2012-05-23.
- ↑ Devils Tower NM – Final Climbing Management Plan National Park Service, page 4, February 1995, accessed March 13, 2009
வெளி இணைப்புக்கள்
தொகு- Devils Tower National Monument. National Park Service
- The short film Tower of Stone is available for free download at the Internet Archive [more] - public domain, produced by National Park Service.
- 450 megapixel high-resolution photo of Devils Tower