பேராக் மலாய் மொழி

மலேசிய மலாய் பேச்சுவழக்கு

பேராக் மலாய் மொழி (ஆங்கிலம்: Perak Malay; மலாய்: Bahasa Melayu Perak; ஜாவி: بهاس ملايو ڤيراق ; பேராக் மலாய்: Bahase Peghok; Ngelabun Peghok) என்பது ஆஸ்திரனேசிய மொழிக் குடும்பத்தின் மலாய-பொலினீசிய மொழிகள் துணைக் குடும்பத்தைச் சார்ந்த ஒரு மொழியாகும்.

பேராக் மலாய் மொழி
Perak Malay
Bahasa Melayu Perak
بهاس ملايو ڤيراق
Bahase Peghok; Ngelabun Peghok
நாடு(கள்) மலேசியா
பிராந்தியம் பேராக்
இனம்பேராக் மலாய் மக்கள்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
1.360 மில்லியன்  (2010)
ஆஸ்திரோனீசிய
பேச்சு வழக்கு
Kuala Kangsar
Perak Tengah
இலத்தீன் எழுத்துகள், அராபிய எழுத்துகள், மலாய் எழுத்துகள்
சாவி எழுத்துமுறை
கங்கா மலாய் எழுத்துமுறை[1]
மொழிக் குறியீடுகள்
ISO 639-3
மொழிக் குறிப்புNone

மலேசியாவின் பேராக் மாநிலத்தில் பேசப்படும் மலாய் மொழிப் பேச்சுவழக்குகளில் ஒன்றாகும்.

பொது

தொகு

பேராக் மலாய் மொழி, பேராக் மாநிலத்தின் சிறப்புரிமை பெற்ற மொழி அல்ல; பேச்சுவழக்கும் அல்ல. ஆனால் பேராக் மாநிலத்தின் அடையாளத்தைப் பேணுவதில் அந்த மொழி முக்கியப் பங்கு வகிக்கிறது.

பேராக்கில் ஐந்து முக்கிய பேச்சுவழக்குகள் உள்ளன.[2][3] பேராக் மலாய் மட்டும் ஒரே ஒரு பேச்சுவழக்கு ஆகும். பேராக் மலாய் மொழியை இரண்டு துணைப் பேச்சுவழக்குகளாகப் பிரிக்கலாம். முதலாவது கோலா கங்சார் பேச்சுவழக்கு; அடுத்தது பேராக் தெங்கா பேச்சுவழக்கு. அவை பேசப்படும் மாவட்டங்களின் பெயரால் அழைக்கப்படுகின்றன.[4]

மஞ்சோங் மாவட்டம்

தொகு

பேராக்கின் வடமேற்கு மாவட்டங்களான கிரியான் மாவட்டம்; லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் பேராக் மலாய் மொழி பேசப்படுவது இல்லை. அவற்றைத் தவிர, மாநிலம் முழுவதும் பேராக் மலாய் மொழி பேசப்படுகிறது.[5][6]

அத்துடன் பேராக்கின் கீழ்பகுதியில் உள்ள மஞ்சோங் மாவட்டத்தின் பங்கோர் தீவு; மற்றும் சில இடங்களிலும் பேராக் மலாய் மொழிபேசப்படுவது இல்லை.[7][4]

வரலாறு

தொகு

பேராக்கின் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த உலு பேராக் மாவட்டம், லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம் மற்றும் கிரியான் மாவட்டத்தின் சில பகுதிகளிலும், மலாய் மக்கள் மலாய் மொழியைப் பேசுகிறார்கள். அந்த மொழி கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழியுடன் (Kelantan-Pattani Malay) நெருங்கிய தொடர்புடையது.

உலு பேராக் மாவட்டம் ஒரு காலத்தில் ரெமான் இராச்சியத்தால் (Kingdom of Reman) ஆளப்பட்டது. 1810-இல் பட்டாணி இராச்சியத்தில் இருந்து விடுதலை பெறுவதற்கு முன்பு ரெமான் இராச்சியம் வரலாற்று அடிப்படையில், பட்டாணி மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்தப் பகுதி தற்போது தாய்லாந்தின் ஒரு மாநிலமாக உள்ளது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Pandey, Anshuman (2011-05-02). "Proposal to Encode the Gangga Malayu Script in ISO/IEC 10646" (PDF). Unicode. பார்க்கப்பட்ட நாள் 11 March 2024.
  2. Ismail Harun 1973
  3. Asmah 1985
  4. 4.0 4.1 Ajid Che Kob 1997, ப. 39
  5. Zaharani 1991
  6. McNair 1972
  7. Andaya 1979

நூல்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேராக்_மலாய்_மொழி&oldid=4087403" இலிருந்து மீள்விக்கப்பட்டது