பைசல்பைடு (Bisulfide) என்பது HS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் எதிர்மின் அயனியாகும். SH என்ற மூலக்கூற்று வாய்ப்பாடும் பயன்படுத்தப்படுகிறது. பைசல்பைடு உப்புகளுக்கு இது எந்த நிறத்தையும் அளிப்பதில்லை. மேலும் பைசல்பைடு உப்புகள் தனித்துவமான ஓர் அழுகிய வாசனையைக் கொண்டிருக்கும். ஒரு வலிமையான காரமான இதன் கரைசல்கள் அரிக்கும் தன்மையும் தோலில் காயத்தையும் உண்டாக்கும் தன்மையும் கொண்டவையாகும்.

பைசல்பைடு
Wireframe structural formula of bisulfide with the explicit hydrogen added
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
அரிதாக சல்பேனைடு
வேறு பெயர்கள்
ஐதரோசல்பைடு
இனங்காட்டிகள்
15035-72-0
ChEBI CHEBI:29919
ChEMBL ChEMBL38703
ChemSpider 4224877
Gmelin Reference
24766
InChI
  • InChI=1S/H2S/h1H2/p-1
    Key: RWSOTUBLDIXVET-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5047209
  • [SH-]
பண்புகள்
HS
வாய்ப்பாட்டு எடை 33.07 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

வேதியியலில் பைசல்பைடு என்பது ஒரு முக்கியமான வினையாக்கியாகவும் மற்றும் தொழில்துறை இரசாயனமாகவும் கருதப்படுகிறது. முக்கியமாக காகிதம் தயாரிப்பில் கிராப்ட் செயல்முறையிலும், நெசவுத் தொழிலில் செயற்கை மணம், வண்ணம் பூசுதல் பித்தளைகள் மற்றும் இரும்பு கட்டுப்பாடு ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

பண்புகள்

தொகு

சோடியம் ஐதரோசல்பைடு மற்றும் பொட்டாசியம் ஐதரோசல்பைடு உட்பட பல்வேறு பைசல்பைடு உப்புகள் அறியப்படுகின்றன.

துர்நாற்றம் வீசும் குண்டுகளின் உட்கூறாக காணப்படும் அம்மோனியம் ஐதரோசல்பைடு ஒரு தூய திண்மப் பொருளாக இதுவரை தனித்துப் பிரிக்கப்படவில்லை. சல்பைடு ஈரெதிர்மின் அயனி உப்புகள் என விவரிக்கப்படும் சில சேர்மங்கள் முதன்மையாக ஐதரோசல்பைடைக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக நீரேறிய சோடியம் சல்பைடின் மூலக்கூறு வாய்ப்பாடு பெயரளவில் Na2S • 9H2O என்றாலும் NaSH • NaOH • 8H2O என்று குறிப்பிடுவது சரியாக இருக்கும்.

 
மூன்று வெவ்வேறு தளங்களில் இருந்து செப்டிக் கழிவுநீரின் புற ஊதா கதிரின் கட்புலனாகும் பகுதி. பைசல்பைடின் ஈர்ப்பு ஒவ்வொரு நிலையிலும் சுமார் 230 நானோ மீட்டராக உள்ளது.

நீரிய பைசல்பைடு புற ஊதாக் கதிரின்[1] and in sewage.[2] கட்புல நிறமாலையின் சுமார் 230 நானோ மீட்டரில் ஒளியை உறிஞ்சுகிறது.

இந்த அணுகுமுறையைப் பயன்படுத்தி கடலிலும்[3][4] கழிவுநீரிலும்[5] பைசல்பைடு இருப்பது கண்டறியப்பட்டது. பைசல்பைடும் (HS)டைசல்பைடும் (S2−2, அல்லது −S–S−) வெவ்வேறானவை என்பதை கவனிக்க வேண்டும்.

காரத்தன்மை

தொகு

பைசல்பைடு எதிர்மின் அயனி ஒரு புரோட்டானை ஏற்றுக்கொள்ளும்:

HS +  H+ → H2S

புரோட்டானை (H+) ஏற்றுக்கொள்ளும் தன்மையைக் கொண்டிருப்பதால் பைசல்பைடு என்பது ஒரு காரத்தின் தன்மையைப் பெற்றுள்ளது எனலாம். நீரிய கரைசலில் இதன் காடித்தன்மை எண் மதிப்பு 6.9 ஆகும். பைசல்பைடின் இணை அமிலம் ஐதரசன் சல்பைடு (H2S) ஆகும். இருப்பினும், பைசல்பைடின் காரத்தன்மையானது ஓர் அர்ரீனியசு காரமாக அதன் நடத்தையிலிருந்து உருவாகிறது.

பார்வையாளராக மட்டும் உள்ள எதிர்மின் அயனிகளைக் கொண்ட ஒரு கரைசல் காரத்தினுடையை காரகாடித்தன்மை சுட்டெண்ணை பெற்றிருக்கும். பின்வரும் அமில-கார வினையின் சமன்பாடு இதற்கான மூலமாகும்.

வேதி வினைகள்

தொகு

ஒர் அமிலத்துடன் சேர்த்து சூடுபடுத்துகையில் பைசல்பைடு ஐதரசன் சல்பைடாக மாறுகிறது. வலுவான அமிலங்களுடன் இது இரட்டிப்பாக புரோட்டானேற்றம் செய்யப்பட்டு H3S+ ஆக மாறுகிறது. பைசல்பைடை ஆக்சிசனேற்றம் செய்தால் சல்பேட்டு உப்பு கிடைக்கும். கடுமையாக சூடாக்கப்படும் போது பைசல்பைடு உப்புகள் சிதைந்து சல்பைடு உப்புகளும் ஐதரசன் சல்பைடும் உருவாகின்றன.

உயிர் வேதியியல்

தொகு

உடலியலில் ஐதரசன் சல்பைடு பொதுவாக பைசல்பைடாக (HS) முழுமையாக அயனியாக்கம் செய்யப்படுகிறது. எனவே, உயிர்வேதியியல் அமைப்புகளில் ஐதரசன் சல்பைடு எனப்படுவது பெரும்பாலும் பைசல்பைடு என்று பொருள்படும். நைட்ரிக் ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு ஆகியவற்றுடன் ஐதரோசல்பைடு மூன்றாவது வாயுக்கடத்தியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.[6]

பிற வழிப்பெறுதிகள்

தொகு

SH என்பது ஒரு மென்மையான எதிர்மின் ஈந்தணைவி ஆகும். இது பெரும்பாலான உலோக அயனிகளுடன் ஒருங்கிணைவுச் சேர்மங்களை உருவாக்குகிறது. எடுத்துக்காட்டுகளில் அடங்கும் [Au(SH)2] மற்றும் (C5H5)2Ti(SH)2 ஆகிய ஒருங்கிணைவுச் சேர்மங்கள் முறையே தங்கம்(I) குளோரைடு மற்றும் தைட்டானோசீன் டைகுளோரைடு ஆகியவற்றிலிருந்து பெறப்படுகிறது.

பாதுகாப்பு

தொகு

பைசல்பைடு உப்புகள் அரிக்கும் தன்மை கொண்டவை, வலுவான காரத்தன்மை கொண்டவையான இவை அமிலமயமாக்கலின் போது நச்சு ஐதரசன் சல்பைடை வெளியிடுகின்றன.

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Goldhaber, M.B.; Kaplan, I.R. (1975), "Apparent dissociation constants of hydrogen sulfide in chloride solutions", Marine Chemistry, 3 (1): 83–104, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/0304-4203(75)90016-X
  2. Sutherland-Stacey, L.; Corrie, S.; Neethling, A.; Johnson, I.; Gutierrez, O.; Dexter, R.; Yuan, Z.; Keller, J.; Hamilton, G. (2007), "Continuous measurement of dissolved sulfide in sewer systems", Water Science and Technology
  3. Johnson, K.S.; Coletti, L.S. (2001), "In situ ultraviolet spectrophotometry for high resolution and long-term monitoring of nitrate, bromide and bisulfide in the ocean.", Deep-Sea Research, 49: 1291–1305, Bibcode:2002DSRI...49.1291J, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/s0967-0637(02)00020-1
  4. Guenther, E.A.; Johnson, K.S.; Coale, K.H. (2001), "Direct ultraviolet spectrophotometric determination of total sulfide and iodide in natural waters", Analytical Chemistry, 73 (14): 3481–3487, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1021/ac0013812, PMID 11476251
  5. Sutherland-Stacey, L.; Corrie, S.; Neethling, A.; Johnson, I.; Gutierrez, O.; Dexter, R.; Yuan, Z.; Keller, J.; Hamilton, G. (2007), "Continuous measurement of dissolved sulfide in sewer systems", Water Science and Technology
  6. J. W. Pavlik, B. C. Noll, A. G. Oliver, C. E. Schulz, W. R. Scheidt, “Hydrosulfide (HS) Coordination in Iron Porphyrinates”, Inorganic Chemistry, 2010, vol. 49(3), 1017-1026.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைசல்பைடு&oldid=3323841" இலிருந்து மீள்விக்கப்பட்டது