பைட்டு அல்லது பைட் அல்லது பைற் (Byte) என்பது தகவல் தொழில்நுட்பத்தில் 8 பிட்டுகள் கொண்ட ஓர் அலகு ஆகும். கணினியின் ஆரம்பகாலம் முதல் பைட்டு ஒரு தனி எழுத்தை குறி ஏற்ற பயன்பட்டு வருகிறது. இதனால் கணினி கட்டுமான அடிப்படை பதிவகத்தின் அடிப்படை அலகாக இது பயன்பட்டு வருகிறது.[1][2][3]

பைட்டுக்களின் பெருக்கம்
SI இரும முன்னொட்டு இரும
பாவனை
IEC இரும முன்னொட்டு
பெயர்
(குறியீடு)
பெறுமானம் பெயர்
(குறியீடு))
பெறுமானம்
கிலோபைட்டு (KB) 103 210 கிபிபைட்டு (KiB) 210
மெகாபைட்டு (MB) 106 220 மெபிபைட்டு (MiB) 220
கிகாபைட்டு (GB) 109 230 கிபீபைட்டு (GiB) 230
டெராபைட்டு (TB) 1012 240 டெபிபைட்டு (TiB) 240
பீட்டாபைட்டு (PB) 1015 250 பெபிபைட்டு (PiB) 250
எக்சாபைட்டு (EB) 1018 260 எக்ஸ்பிபைட்டு (EiB) 260
செட்டாபைட்டு (ZB) 1021 270 செபிபைட்டு (ZiB) 270
யொட்டாபைட்டு (YB) 1024 280 யொபிபைட்டு (YiB) 280

பைட்டு ஆனது எப்பொதுமே கணினி வன்பொருளின் மீது தங்கி உள்ளது, இதற்கென ஒரு வரையறுக்கப்பட்ட ஓர் அளவு இல்லை. பயன்பாட்டுக்கு இலகுவாக 8 பிட்டுக்களை ஒரு பைட்டு ஆக கொள்வதனால், இரண்டின் அடுக்குகளான 0 இலிருந்து 255 வரை பைட்டாக கொள்ளக்கூடியதாக உள்ளது. நுண்செயலக வடிவமைப்பளர்கள் பைட்டிலுள்ள பிட்டுக்களின் எண்ணிக்கையை தத்தமது கணினி கட்டுமானத்திற்கேற்ப வடிவமைத்து வந்தாலும் பெரும்பாலான பிரபல்யமான கணினி கட்டுமானங்கள் 8 பிட்டுக்களையே பைட்டுக்களாக பாவித்து வருகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Knuth, Donald (1997) [1968]. The Art of Computer Programming: Volume 1: Fundamental Algorithms (3rd ed.). Boston: Addison-Wesley. p. 125. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-201-89683-1.
  2. Prefixes for Binary Multiples பரணிடப்பட்டது 2007-08-08 at the வந்தவழி இயந்திரம் — The NIST Reference on Constants, Units, and Uncertainty
  3. Matsuoka, Satoshi; Sato, Hitoshi; Tatebe, Osamu; Koibuchi, Michihiro; Fujiwara, Ikki; Suzuki, Shuji; Kakuta, Masanori; Ishida, Takashi et al. (2014-09-15). "Extreme Big Data (EBD): Next Generation Big Data Infrastructure Technologies Towards Yottabyte/Year" (in en). Supercomputing Frontiers and Innovations 1 (2): 89–107. doi:10.14529/jsfi140206. பன்னாட்டுத் தர தொடர் எண்:2313-8734. https://superfri.org/index.php/superfri/article/view/24. பார்த்த நாள்: 2022-05-27. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைட்டு&oldid=4066550" இலிருந்து மீள்விக்கப்பட்டது