பொட்டாசியம் அலுமினியம் புளோரைடு

பொட்டாசியம் அலுமினியம் புளோரைடு (Potassium aluminium fluoride) என்பது KAlF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

பொட்டாசியம் அலுமினியம் புளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் டெட்ராபுளோரிடோ அலுமினேட்டு
வேறு பெயர்கள்
பொட்டாசியம் நான்குபுளோரோ அலுமினேட்டு
இனங்காட்டிகள்
14484-69-6 Y
EC number 238-485-8
பண்புகள்
KAlF4
வாய்ப்பாட்டு எடை 142
தோற்றம் வெண்மைநிறத் திண்மம்
அடர்த்தி 2.9 g/cm3
உருகுநிலை > 600 °C (1,112 °F; 873 K)
2 கி/லி
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Solvay MSDS
ஈயூ வகைப்பாடு எரிச்சலூட்டும் (Xi)
S-சொற்றொடர்கள் S22 S25
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

இரண்டாம்நிலை அலுமினியத்தை உருக்கிப் பிரிக்கும் செயல்முறையில் பொட்டாசியம் அலுமினியம் புளோரைடு இளக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. உருகலில் உள்ள மக்னீசியத்தை நீக்கவும் அல்லது அதன் அளவைக் குறைக்கவும் இது உதவுகிறது. வினைபுரியும் பொழுது புளோரைடு வாயுக்களை உற்பத்தி செய்வதுதான் இச்சேர்மத்தைப் பயன்படுத்துவதில் உள்ள முக்கிய சுற்றுச் சூழல் பிரச்சினை ஆகும். கால்சியம் ஐதராக்சைடைப் பயன்படுத்தி புளோரைடு உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டாலும் பெரும்பாலான நேரங்களில் போதுமான அளவுக்கு அதை நீக்க முடியவில்லை.

உலோகத் தொழிற்சாலைகளில் பொட்டாசியம் அலுமினியம் புளோரைடு பல்வேறு வகையானப் கூட்டுப்பொருட்களில் இளக்கும் முகவராகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு பூச்சிக் கொல்லி மருந்தாகவும் இது பயன்படுத்தப்படுகிறது [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "potassium aluminium fluoride". AccessScience.  பரணிடப்பட்டது 2011-05-18 at the வந்தவழி இயந்திரம்