பொட்டாசியம் சிலிக்கேட்டு

பொட்டாசியம் சிலிக்கேட்டு (Potassium silicate) என்பது K2SiO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தண்ணீரின் அளவுக்கு ஏற்ப இச்சிலிக்கேட்டின் மாதிரிகள் மாறுபடுகின்றன. பொதுவாக இவை வெண்மை நிறத்தில் திண்மங்களாகவோ அல்லது நிறமற்ற கரைசலாகவோ காணப்படுகின்றன[1].

பொட்டாசியம் சிலிக்கேட்டு
K2SiO3idealized.png
Sodium-metasilicate-chain-from-xtal-3D-balls.png
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் மெட்டா சிலிக்கேட்டு
வேறு பெயர்கள்
திரவக் கண்ணாடி
நீர்க்கண்ணாடி
இனங்காட்டிகள்
1312-76-1 N
ChemSpider 59585 Yes check.svgY
EC number 233-001-1
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 66200
பண்புகள்
K2O3Si
வாய்ப்பாட்டு எடை 154.28 g·mol−1
தோற்றம் வெண்ணிற படிகங்கள்
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு Corrosive (C), Irritant (Xi)
R-சொற்றொடர்கள் R34, R37
S-சொற்றொடர்கள் (S1/2), S13, S24/25, S36/37/39, S45
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பொட்டாசியம் கார்பனேட்டு
பொட்டாசியம் செருமானேட்டு
பொட்டாசியம் சிடானேட்டு
பொட்டாசியம் பிளம்பேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் சிலிக்கேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

தயாரிப்பு, அமைப்பு, வினைகள்தொகு

சிலிக்காவுடன் பொட்டாசியம் ஐதராக்சைடு சேர்த்து சூடுபடுத்துவதால் பொட்டாசியம் சிலிக்கேட்டு தொகுப்பு முறையில் தயாரிக்கப்படுகிறது.

nSio2 + 2KOH --> K2O + nSiO2 + H2O

இக்கரைசல்கள் அதிக காரத்தன்மையுடன் காணப்படுகின்றன. இவற்றுடன் அமிலங்களைச் சேர்த்தால் சிலிக்கா மீண்டும் உருவாகிறது.

ஒன்றுடன் ஒன்று உள்ளிணைப்புப் பெற்ற SiO3]]2- ஒருபடிகளால் ஆன சங்கிலி அல்லது வட்ட அமைப்பை பொட்டாசியம் சிலிக்கேட்டு பெற்றுள்ளது. ஒவ்வொரு Si அணுவும் நான்முக வடிவில் காணப்படுகின்றன.

பயன்கள்தொகு

மரச்சாமான்கள் பாதுகாப்புதொகு

பொட்டாசியம் சிலிக்கேட்டு கரைசலைக் கொண்டு மரப்பலகையை செறிவூட்டுவதன் மூலம் வீடுகளில் உள்ள மரவேலை பொருட்கள் எளிதில் தீப்பற்றுவதை தடுக்க முடியும். முதலில் மரச்சாமான்கள் பொட்டாசியம் சிலிக்கேட்டின், கிட்டத்தட்ட நடுநிலையான நீர்த்த கரைசலால் செறிவூட்டப்படுகின்றன. இக்கரைசல் உலர்ந்த பின்னார் ஒன்று அல்லது இரு முறை அடர் பொட்டாசியம் சிலிக்கேட்டு கரைசல் பூசப்படுகிறது[2]

தோட்டக்கலையில் பயன்தொகு

பொட்டாசியம் மற்றும் சிலிக்கன் தனிமங்களின் கரையக்கூடிய மூலமாக தோட்டக்கலையில் பொட்டாசியம் சிலிக்கேட்டு பயன்படுத்தப்படுகிறது. வளர்ச்சி ஊடகத்தை இச்சிலிக்கேட்டு மேலும் காரத்தன்மை உடையதாக்குகிறது.

வழக்கமாக பயன்படுத்துடன் உரத்துடன் ஒரு இணைப்பாகவும் பொட்டாசியம் சிலிக்கேட்டு பயன்படுத்தப்படுகிறது. இதனால் சிலிக்கன் சேர்மங்களால் கிடைக்கும் எண்ணற்ற பயன்கள் விளைகின்றன. சிலிக்கன் சேர்மங்கள் தாவரங்களுக்கு இன்றியமையாதனவாகவும் ஆதரவாகவும் இருக்கின்றன. தண்டுகளை கெட்டியாக்குதல். வறட்சியைத் தாங்கும் இயல்பை செடிகளுக்கு அளித்தல், பயிர்கள் வாடுவதை தடுத்து நிறுத்தல், பெரிய இலைகளும் பழங்களும் வளர உதவுதல் முதலான பல பலன்கள் சிலிக்கன் சேர்மங்களால் தாவரங்களுக்குக் கிடைக்கின்றன.

தொழிற்துறை பயன்கள்தொகு

உலோகங்களைத் தூய்மைப்படுத்தும் சில உருவாக்கங்களில் பொட்டாசியம் சிலிக்கேட்டு பயன்படுகிறது. தவிர அரிமாணத்தை தடுக்கும் வேதிப்பொருளாகவும் பயனாகிறது[3]. அழகு சாதனப் பொருட்கள் மற்றும் பற்ற வைக்கும் கம்பிகளை வனைதலிலும் இச்சிலிக்கேட்டு பயன்படுத்தப்படுகிறது.

பாதுகாப்புதொகு

பொட்டாசியம் சிலிக்கேட்டு ஒரு வலிமையான காரமாக இருப்பதால் எச்சரிக்கையுடன் கையாளவேண்டும்

மேற்கோள்கள்தொகு

  1. Gerard Lagaly, Werner Tufar, A. Minihan, A. Lovell "Silicates" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, 2005. எஆசு:10.1002/14356007.a23_661
  2. Cobleigh, Rolfe (1909). Handy farm devices and how to make them. Part II: Worth knowing to render wood fireproof. New York: Orange Judd. http://www.journeytoforever.org/farm_library/device/devicesToC.html. 
  3. Elmore AR (2005). "Final report on the safety assessment of potassium silicate, sodium metasilicate, and sodium silicate". Int. J. Toxicol. 24 (Suppl 1): 103–17. doi:10.1080/10915810590918643. பப்மெட்:15981734. http://ijt.sagepub.com/cgi/content/abstract/24/1_suppl/103. பார்த்த நாள்: 2016-06-28.