பொட்டாசியம் பைரோசல்பேட்டு

பொட்டாசியம் பைரோசல்பேட்டு (Potassium pyrosulfate) என்பது K2S2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியம் டைசல்பேட்டு அல்லது பொட்டாசியம் இருசல்பேட்டு என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது.

பொட்டாசியம் பைரோசல்பேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டைபொட்டாசியம்(சல்போனாடோவாக்சி)சல்போனேட்டு
வேறு பெயர்கள்
பொட்டாசியம் பைரோசல்பேட்டு; பொட்டாசியம் டைசல்பேட்டு
இனங்காட்டிகள்
7790-62-7 Y
ChemSpider 56432 N
InChI
  • InChI=1S/2K.H2O7S2/c;;1-8(2,3)7-9(4,5)6/h;;(H,1,2,3)(H,4,5,6)/q2*+1;/p-2 N
    Key: KAQHZJVQFBJKCK-UHFFFAOYSA-L N
  • InChI=1/2K.H2O7S2/c;;1-8(2,3)7-9(4,5)6/h;;(H,1,2,3)(H,4,5,6)/q2*+1;/p-2
    Key: KAQHZJVQFBJKCK-NUQVWONBAQ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 62681
SMILES
  • [O-]S(=O)(=O)OS(=O)(=O)[O-].[K+].[K+]
பண்புகள்
K2O7S2
வாய்ப்பாட்டு எடை 254.31 g·mol−1
அடர்த்தி 2.28 கி/செ.மீ3
உருகுநிலை 325 °C (617 °F; 598 K)
கரையும்
தீங்குகள்
R-சொற்றொடர்கள் R36 R38
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

தயாரிப்பு தொகு

பிற உப்புகளை வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தி பொட்டாசியம் பைரோசல்பேட்டு தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக பொட்டாசியம் பைசல்பேட்டை நேரடியாகச் சிதைத்து இச்சேர்மம் தயாரிக்கப்படுகிறது:[1]

2 KHSO4 → K2S2O7 + H2O.

600 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் பொட்டாசியம் பைரோசல்பேட்டு சிதைவடைந்து பொட்டாசியம் சல்பேட்டு மற்றும் கந்தக மூவாக்சைடு முதலியன உருவாகின்றன:[2]

K2S2O7 → K2SO4 + SO3.

பொட்டாசியம் முச்சல்பேட்டு[3] போன்ற பிற உப்புகளும் சிதைவடைந்து பொட்டாசியம் பைரோசல்பேட்டு உருவாகிறது.

வேதியியல் கட்டமைப்பு தொகு

பொட்டாசியம் பைரோசல்பேட்டு, இருகுரோமேட்டு போன்ற கட்டமைப்புடைய பைரோசல்பேட்டு எதிர்மின் அயனியைக் கொண்டுள்ளது. SO4 எதிர்மின் அயனிகளுடன் பகிர்ந்து கொண்டுள்ள இருமுனைகள் மற்றும் நடுவில் பாலம் அமைத்துள்ள ஆக்சிசன் அணு அகியனவற்றால் ஆன நான்முக அமைப்பாக இச்சேர்மத்தின் வடிவியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது[4] . பைரோசல்பேட்டு எதிர்மின் அயனியின் உறுதிப்படுத்தாத ஆகும் அமைப்பு வாய்ப்பாடு O3SOSO32− ஆகும். பைரோசல்பேட்டில் கந்தகம் +6 என்ற ஆக்சிசனேற்ற எண் மதிப்பைக் கொண்டுள்ளது.

பயன்கள் தொகு

பொட்டாசியம் பைரோசல்பேட்டு பகுப்பாய்வு வேதியியலில் பயன்படுத்தப்படுகிறது; ஆய்வு செய்யப்பட வேண்டிய மாதிரிகள் பொட்டாசியம் பைரோசல்பேட்டுடன் பிணைக்கப்பட்டு அளவறி பகுப்பாய்வுக்கு முன்னதாக முழுமையான முறிவை உறுதி செய்து கொள்ள பயன்படுத்தப்படுகிறது. பொட்டாசியம் பைரோ சல்பேட்டு மற்றும் பொட்டாசியம் புளோரைடு கலைவையும் இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது[5][6].

தொழிற்சாலைகளில் கந்தக மூவாக்சைடு தயாரிக்கையில் வனேடியம்(V) ஆக்சைடுடன் இணைக்கப்பட்டு வினையூக்கியாகவும் பொட்டாசியம் பைரோசல்பேட்டு பயன்படுத்தப்படுகிறது[7]

மேற்கோள்கள் தொகு

  1. Washington Wiley, Harvey (1895). Principles and Practice of Agricultural Analysis: Fertilizers. Easton, PA.: Chemical Publishing Co. p. 218. பார்க்கப்பட்ட நாள் 31 December 2015.
  2. Iredelle Dillard Hinds, John (1908). Inorganic Chemistry: With the Elements of Physical and Theoretical Chemistry. New York: John Wiley & Sons. p. 547. பார்க்கப்பட்ட நாள் 31 December 2015.
  3. Brauer, Georg (1963). Handbook of Preparative Inorganic Chemistry Vol. 2, 2nd Ed. Newyork: Academic Press. p. 1716. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780323161299.
  4. Ståhl, K.; Balic-Zunic, T.; da Silva, F.; Eriksen, K. M.; Berg, R. W.; Fehrmann, R. (2005). "The crystal structure determination and refinements of K2S2O7, KNaS2O7 and Na2S2O7 from X-ray powder and single crystal diffraction data". Journal of Solid State Chemistry 178 (5): 1697–1704. doi:10.1016/j.jssc.2005.03.022. Bibcode: 2005JSSCh.178.1697S. 
  5. Trostbl, L. J.; Wynne, D. J. (1940). "Determination of quartz (free silica) in refractory clays". Journal of the American Ceramic Society 23 (1): 18–22. doi:10.1111/j.1151-2916.1940.tb14187.x. 
  6. Sill, C. W. (1980). "Determination of gross alpha, plutonium, neptunium, and/or uranium by gross alpha counting on barium sulphate". Analytical Chemistry 52 (9): 1452–1459. doi:10.1021/ac50059a018. 
  7. Burkhardt, Donald (1965). "Sulfur trioxide production, US3362786A". Google Patents. பார்க்கப்பட்ட நாள் 31 December 2015. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)