பொதியம் (பல்துறை)
பொதியம் (ஆங்கிலம்:Package)என்பது, கீழ்க்கண்ட வழிமுறைகளில், ஏதேனும் ஒன்றினைக் குறிப்பிடலாம்.
- மின்னணுப் பொதியம் - தொகுச்சுற்றுகள் அடங்கிய மின்னணுப் பொருட்கள் பல்வேறு வகைகளில் உள்ளன. அதற்கொப்ப அது விற்பனைக்கு வரும்போது, வேறுபட்ட, தனித்துவத்துடனான, மிகச்சிறப்பானப் பொதியத்துடன் வருகிறது. அப்பொதியமே அந்த மின்னணுப் பொருட்களைப் பாதுகாக்கிறது.
- சுற்றுலா பொதியம் - எடுத்துக்காட்டு; நவக்கிரகத் தலங்கள் மட்டும் அடங்கிய சுற்றுலாத் திட்டம்.
- விற்பனைப் பொதியம் - பொங்கல், தீபாவளி, இரமலான், கிறித்துவத் திருநாள், புத்தாண்டு போன்ற திருவிழாக் கொண்டாட்டங்களின் போது, கடைகளில் விற்பனையாகும் விற்பனைப் பொதி. (எ.கா. ) 1 தொலைக்காட்சிப் பெட்டி + 1 துணி துவைப்பி + 1 குளிர்சாதனப் பெட்டி என ஒரு பொதியமாக வாங்கினால், தனித்தனியாக வாங்குதலைவிட விலைக் குறைவாகப் பெறலாம்.
- பொதியமிடுதல் - அறிவியல், தொழினுட்பம், கலை ஆகியவற்றைக் கொண்டு, ஒரு பொருளைப் பாதுகாப்பாக, எதிர்காலப் பயன்பாட்டிற்கும், விற்பனைக்கும் ஏற்றவாறு உள்ளிட்டு பேணுதலைக் குறிக்கும்.
- பொதியச் சோதனை - ஒரு பொருளைப் பொதியமிட பல்வேறு உறைகள் இருக்கலாம். அதில் தேவையானவைகளை ஆராய்ந்து, சிறப்பான, பொருத்தமா ஒன்றினைத் தேர்ந்தெடுத்து, அக்குறிப்பிட்டப் பொருளை பாதுகாப்பதற்குத் தேவையான சோதனைகளைக் குறிக்கிறது. இந்த தேர்ந்தெடுத்தல் சோதனைகளே, ஒரு பொருள் தயாரிப்பு இடத்திலிருந்து, இறுதிப் பயன்பாட்டிற்கு, எந்த இழப்பும் இல்லாமல், நிறைவாகச் செல்ல பெரிதும் பயன்படுகிறது.
- அஞ்சல் - ஒரு கடிதத்தை விட பெரியவற்றினைக் குறிக்கிறது.
கணித்தல்
தொகு- கணித்தலில், பொதியம் என்பது விகற்பம் (Module) என்பதையும் குறிக்கிறது. ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்யும் நிரலாக்கத்தலுடன் இணைந்து அமைகின்ற, குறிப்பிட்ட மென்பொருள் பகுதியைக் குறிக்கிறது.
- யாவாப் பொதியம்(Java package) என்பது யாவாப் பிரிவுகளை(Java class), ஒழுங்கமைக்கும் ஒரு இயங்குமுறை ஆகும்.
- பொதிய மேலாண்மைக் கட்டகம் (package management system) என்பது ஒரு செயலியை அல்லது அதன் நூலகத்தை நிறுவப் பயன்படும் ஒரு கோப்பினைக் குறிக்கிறது.
- ஆப்பிள் (OS X) கணிமையில் இது அடைவு களின், மேலடுக்கு அமைப்பு முறையைக் குறிக்கிறது.
- ஒருங்கு மாதிரியாக்க மொழியின் சூழமைவுவில், இது கூறுகளைக் குழுமமாக்கப் பயனாகிறது.