பொலிகண்டி

இலங்கையில் உள்ள நகரம்

பொலிகண்டி (Polikandy) என்பது இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊராகும். இதன் அருகே பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, கரணவாய் ஆகிய நகரங்கள் அமைந்துள்ளன. இது பொலிகண்டி கிழக்கு, பொலிகண்டி மேற்கு, பொலிகண்டி தெற்கு என மூன்று கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

பொலிகண்டி
Polikandy
கிராமம்
மேலிருந்து மணிக்கூட்டு திசையில்: கந்தவனக் கடவை முருகன் கோவில்; பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை; பொலிகண்டி கடற்கரையில் கட்டுமரம்; பொலிகண்டியில் மீன் பிடித்தல் செயற்பாடு; பத்திரகாளி அம்மன் கோவில்
மேலிருந்து மணிக்கூட்டு திசையில்: கந்தவனக் கடவை முருகன் கோவில்; பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை; பொலிகண்டி கடற்கரையில் கட்டுமரம்; பொலிகண்டியில் மீன் பிடித்தல் செயற்பாடு; பத்திரகாளி அம்மன் கோவில்
பொலிகண்டி is located in Northern Province
பொலிகண்டி
பொலிகண்டி
ஆள்கூறுகள்: 9°49′25″N 80°11′15″E / 9.82361°N 80.18750°E / 9.82361; 80.18750
நாடுஇலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்யாழ்ப்பாணம்
பி.செ. பிரிவுவடமராட்சி வடக்கு
மக்கள்தொகை
 • மொத்தம்5,843
 [1]
நேர வலயம்இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30)

இவ்வூர் மக்களின் முக்கிய தொழில் வேளாண்மை, மற்றும் மீன் பிடித்தல் ஆகும்.

1990 இற்கும் 2005 இற்கு இடையில் புலிகளுக்கும் இலங்கைப் படைத்துறையினருக்கும் இடையே பல சமர்கள் பொலிகண்டியில் நிகழ்ந்துள்ளன. ஈழப்போரின் போது, 1990-1995 காலப்பகுதியில், வலிகாமம் வடக்குப் பகுதியில் - குறிப்பாக பலாலி, காங்கேசன்துறை, மயிலிட்டி, தெல்லிப்பழை, கீரிமலை போன்ற இடங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பொலிகண்டியில் தங்கியிருந்தனர்.

இங்குள்ள கோவில்கள் தொகு

பொலிகண்டியில் உள்ள பல சைவக் கோவில்களுக்கு நூற்றாண்டுக்கும் மேலான வரலாறு உண்டு. இவற்றில் சில:

  • பொலிகண்டி கந்தவனக் கடவை கந்தசாமி கோயில்
  • இலுப்பைமூலைப் பிள்ளையார் கோவில்
  • குளத்தடி வைரவர் கோவில்
  • பத்திரகாளி அம்மன் கோவில்

பாடசாலைகள் தொகு

  • பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை
  • அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை

இவ்வூரைச் சேர்ந்தவர்கள் தொகு

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Sri Lanka: largest cities and towns and statistics of their population". World Gazetteer. 2011-09-02 அன்று மூலம் பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொலிகண்டி&oldid=3102269" இருந்து மீள்விக்கப்பட்டது