பொள்ளாச்சி சந்திப்பு தொடருந்து நிலையம்

(பொள்ளாச்சி தொடருந்து நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பொள்ளாச்சி சந்திப்பு தொடருந்து நிலையம் (Pollachi junction railway station, நிலையக் குறியீடு:POY) இந்தியாவின், தமிழ்நாட்டிலுள்ள, கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் தென்னக இரயில்வே மண்டலத்தின், பாலக்காடு தொடருந்து கோட்டத்தின் கீழ் இயங்குகிறது.

பொள்ளாச்சி
தொடருந்து நிலையம்
பெயர் பலகை
பொது தகவல்கள்
அமைவிடம்இரயில் நிலையம் சாலை, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு
இந்தியா
ஆள்கூறுகள்10°39′10″N 77°00′04″E / 10.6529°N 77.0011°E / 10.6529; 77.0011
ஏற்றம்290 மீட்டர்கள் (950 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
நடைமேடை3
இருப்புப் பாதைகள்5
இணைப்புக்கள்பேருந்து, ஆட்டோ ரிக்சா
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுPOY
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) பாலக்காடு
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது15 அக்டோபர் 1890; 134 ஆண்டுகள் முன்னர் (1890-10-15)
மூடப்பட்டது2009
மறுநிர்மாணம்2015
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
பொள்ளாச்சி is located in தமிழ் நாடு
பொள்ளாச்சி
பொள்ளாச்சி
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
பொள்ளாச்சி is located in இந்தியா
பொள்ளாச்சி
பொள்ளாச்சி
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

வரலாறு

தொகு

பொள்ளாச்சி சந்திப்பானது முதன்முதலில் 1850களில் தொடருந்து நிறுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டது. 1900க்குப் பிறகு, இது பயணிகளுக்கான நிலையமாக பயன்படுத்தப்பட்டது.

முதல் சேவை 1915இல் பொள்ளாச்சி முதல் போத்தனூர் வரை மீட்டர் கேஜ் இரயில் பாதையாக தொடங்கியது. பின்னர் 2008 ஆம் ஆண்டில், திண்டுக்கல் - போத்தனூர் பாதை மாற்றத்திற்காக நிலையம் மூடப்பட்டது.[1]

நவம்பர் 25, 2014 அன்று, பொள்ளாச்சி - பழனி அகல இரயில் பாதையில், இரயில்வே பாதுகாப்பு ஆணையம், ஒரு வேக சோதனை மற்றும் ஆய்வை வெற்றிகரமாக முடித்தது. ஏழு ஆண்டுகள் கட்டுமானத்திற்குப் பிறகு, பொள்ளாச்சி சந்திப்பு - பழனி அகலப்பாதை, வணிக பயன்பாட்டிற்காக 9 சனவரி 2015 அன்று திறக்கப்பட்டது.[2]

1898 முதல் 2008 ஆம் ஆண்டில் மாற்றத்திற்காக மூடப்படும் வரை, பழைய மீட்டர் கேஜ் பாதையாக, 110 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்தது.

6 அக்டோபர் 2015 அன்று, இரயில்வே பாதுகாப்பு ஆணையம் வெற்றிகரமாக பாலக்காடு டவுன் - பொள்ளாச்சி சந்திப்பு வரை அகல இரயில் பாதையில், வேக சோதனை மற்றும் ஆய்வை முடித்தது. இரயில்வே பாதுகாப்பு ஆணையம் செய்த சோதனை ஓட்டத்தில், சிறப்பு தொடருந்து ஆனது, 38 நிமிடங்களில் 54 கி.மீ தூரம் சென்றது. இந்த வழித்தடம் வணிக பயன்பாட்டிற்காக 16 நவம்பர் 2015 அன்று திறக்கப்பட்டது.

24 மார்ச் 2017 அன்று, போத்தனூர் - பொள்ளாச்சி அகல இரயில் பாதையில், இரயில்வே பாதுகாப்பு ஆணையம், ஒரு வேக சோதனை மற்றும் ஆய்வை வெற்றிகரமாக முடித்தது.

வழித்தடங்கள்

தொகு

இந்நிலையத்திலிருந்து மூன்று வழித்தடங்கள் பிரிந்து செல்கின்றன:

திட்டங்கள் மற்றும் மேம்பாடு

தொகு

இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [3][4][5][6][7]

அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் பாலக்காடு கோட்டத்தில் பொள்ளாச்சி சந்திப்பு தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 6.33 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. [8][9][10]

மேற்கோள்கள்

தொகு
  1. V.S. Palaniappan (10 October 2015). "Pollachi Railway Junction on track to cross rare milestone". தி இந்து (கோவை). http://www.thehindu.com/news/cities/Coimbatore/pollachi-railway-junction-on-track-to-cross-rare-milestone/article7745231.ece. பார்த்த நாள்: 4 January 2016. 
  2. "Speed Trial Run Between Pollachi / Palani Section".
  3. "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980. 
  4. https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
  5. https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
  6. https://www.youtube.com/watch?v=2ilIzAsYJVs
  7. https://www.youtube.com/watch?v=mETMtIdiv_E
  8. https://news.railanalysis.com/southern-railway-identifies-90-railway-stations-sanctions-rs-934-crore-for-redevelopment-of-stations-under-amrit-bharat-station-scheme/
  9. https://swarajyamag.com/infrastructure/amrit-bharat-station-scheme-60-suburban-railway-stations-to-get-facelift-in-tamil-nadu
  10. https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-coimbatore/railway-station-is-being-upgraded-under-amrit-bharat-scheme-633-crore-contract-for-work/3294262