போர்த்துக்கேய மொழி நாடுகள் சமூகம்
போர்த்துக்கேய மொழி நாடுகளின் சமூகம் (Community of Portuguese Language Countries) அல்லது போர்த்துக்கேயம் பேசும் நாடுகளின் குமுகம்[1] (போர்த்துக்கேய மொழி: Comunidade dos Países de Língua Portuguesa, ஆங்கிலச் சுருக்கம்: சிபிஎல்பி) போர்த்துக்கேய மொழி அலுவல் மொழியாக உள்ள நாடுகளுக்கிடையே நட்புறவு பேணும் அரசுகளுக்கிடை அமைப்பாகும்.
கம்யூனிடேடு டோசு பைசேசு டி லிங்குவா போர்த்துகேசா (போர்த்துக்கேய மொழி நாடுகளின் சமூகம்) | |
---|---|
கொடி | |
தலைமையகம் | பெனாபில் குறுமன்னர்களின் அரண்மனை லிஸ்பன், போர்த்துகல் |
அலுவல் மொழி | போர்த்துக்கேயம் |
அங்கத்துவம் | |
தலைவர்கள் | |
• செயல் செயலாளர் | முராடெ ஐசாக் முரார்கெ |
• மாநாட்டுத் தலைமை | மொசாம்பிக் |
• | சூலை 17, 1996 |
மக்கள் தொகை | |
• மதிப்பிடு | ~ 240 மில்லியன் |
உருவாக்கமும் உறுப்பினர் நாடுகளும்
தொகுபோர்த்துக்கேய மொழி நாடுகளின் சமூகம் அல்லது சிபிஎல்பி சூலை 17, 1996 அன்று ஏழு நாடுகளுடன் தொடங்கப்பட்டது: போர்த்துகல், பிரேசில், அங்கோலா, கேப் வர்டி, கினி-பிசாவு, மொசாம்பிக், சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி. 2002இல் தனக்கு விடுதலை பெற்ற பிறகு கிழக்குத் திமோர் இதில் இணைந்தது.
2005இல் லுவாண்டாவில் கூடிய இந்த எட்டு நாடுகளின் பண்பாட்டு அமைச்சர்கள் மே 5ஆம் நாளை போர்த்துக்கேயம் பேசுவோர் (லூசோபோன்) பண்பாட்டு நாளாக (போர்த்துக்கேயத்தில் டயா ட கல்ச்சுரா லூசோபோனா") கொண்டாட முடிவு செய்தனர்.
சூலை 2006, பிசாவு மாநாட்டில், எக்குவடோரியல் கினியும் மொரிசியசும் இணை நோக்காளர்களாக சேர்க்கப்பட்டனர்.[2] தவிர 17 பன்னாட்டு சங்கங்களும் அமைப்புகளும் கலந்தாய்வு நோக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சூன் 2010இல், எக்குவடோரியல் கினி முழுமையான உறுப்பினராக விருப்பம் தெரிவித்தது. சூலை 2010இல் லுவாண்டாவில் நடந்த எட்டாவது மாநாட்டில் எக்குவடோரியல் கினியை உறுப்பினராக ஏற்றுக் கொள்ள முறையான முன் உரையாடல் துவங்கப்பட்டது.[3]
2008இல், செனிகல் இணை நோக்காளராக அனுமதிக்கப்பட்டது.[4] மே 4 2014 அன்று சப்பான் அலுவல்முறை நோக்காளரானது.[5]
உச்சி மாநாடுகள்
தொகுமாநாடு | நடத்திய நாடு | நடத்திய நகரம் | ஆண்டு |
---|---|---|---|
I | போர்த்துகல் | லிஸ்பன் | 1996 |
II | கேப் வர்டி | பிரையா | 1998 |
III | மொசாம்பிக் | மபூட்டோ | 2000 |
IV | பிரேசில் | பிரசிலியா | 2002 |
V | சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி | சாவோ தோமே | 2004 |
VI | கினி-பிசாவு | பிசாவு | 2006 |
VII | போர்த்துகல் | லிஸ்பன் | 2008 |
VIII | அங்கோலா | லுவாண்டா | 2010 |
IX | மொசாம்பிக் | மபூட்டோ | 2012 |
X | பிரேசில் | மனௌசு | 2014 |
மேற்சான்றுகள்
தொகு- ↑ Republic of Mauritius. Prime Minister's Office. Cabinet Decisions taken on 21 July 2006, http://www.gov.mu/portal/site/pmosite/menuitem.4ca0efdee47462e7440a600248a521ca/?content_id=0aad636fa35bc010VgnVCM1000000a04a8c0RCRD பரணிடப்பட்டது 2013-10-18 at the வந்தவழி இயந்திரம்
- ↑ CPLP Associate Observers in CPLP பரணிடப்பட்டது 2008-05-14 at the வந்தவழி இயந்திரம் Official website
- ↑ "Nota informativa: Missão da CPLP à Guiné Equatorial". CPLP. 3 May 2011. பார்க்கப்பட்ட நாள் 27 March 2012.
- ↑ Comunidade dos Países de Língua Portuguesa - Observadores Associados. CPLP. Retrieved on 2013-08-09.
- ↑ http://www.japantimes.co.jp/news/2014/05/03/national/politics-diplomacy/japan-portugal-agree-team-piracy-seek-fta-eu/