போயிங் இசுடார்லைனர்

போயிங் இசுடார்லைனர் (Boeing Starliner) அல்லது சிஎசுடி-100 (CST-100)[b] என்பது அனைத்துலக விண்வெளி நிலையம், பிற குறைந்த-புவி சுற்றுப்பாதை இடங்களுக்குப் பணியாளர்களைக் கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட பகுதியளவில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கலங்களின் ஒரு வகையாகும்.[6][7][8] இது நாசாவின் வணிகக் மாந்தத் திட்டத்தின் முன்னணி வாடிக்கையாளரான போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.[9] இவ்விண்கலம் பத்துப் பயணங்கள் வரை மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஒரு மாந்த விண்பெட்டகத்தையும், செலவழிக்கக்கூடிய சேவைத் தொகுதியையும் கொண்டுள்ளது.[10]

போயிங் இசுடார்லைனர்
Boeing Starliner
"போயிங் இசுடார்லைனர் விண்கலம் 2" அனைத்துலக விண்வெளி நிலையத்தை 2022 மே மாதத்தில் அணுகியது.
தயாரிப்பாளர்போயிங் டிஃபென்சு, இசுபேசு, செக்கியூரிட்டி
நாடுஐக்கிய அமெரிக்கா
இயக்கம்Boeing Defense, Space & Security
செயற்பாடுகள்அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு மாந்தரையும் சரக்குகளையும் அனுப்பல்
விவரக்கூற்று
விண்கல வகைமாந்த விண்பெட்டகம்
வடிவமைப்பு வாழ்நாள்
  • 60 மணி (பறப்பு)[1]
  • 210 நாட்கள் (தளத்தில்)[2]
ஏவு திணிவு13,000 கிகி
தாங்குசுமைத் திறன்அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு: 4 பேர், 100 கிகி சரக்கு[3][a]
பணிக்குழு திறன்7 பேர் வரை
கொள்ளளவு11 m3 (390 cu ft)[5]
சுற்றுப்பாதை முறைமைபூமியின் தாழ் வட்டப்பாதை
தயாரிப்பு
நிகழ்நிலைசெயலில்
கட்டமைப்பு3
ஏவப்பட்டது2
நீக்கம்1
முதல் ஏவல்திசம்பர் 20, 2019, 11:36:43 ஒசநே (ஆட்களற்று)
கடைசி ஏவல்சூன் 5, 2024, 14:52:14 ஒசநே

விண்பெட்டகம் 15 அடி (4.56 மீ) விட்டம் கொண்டது, அப்பல்லோ கட்டளைத் தொகுதி அல்லது எசுபேசுஎக்சு மாந்த டிராகனை விட சற்றுப் பெரியது, ஆர்ட்டெமிசு ஒராயன் விண்பெட்டகத்தை விட சிறியது.[11] இசுடார்லைனர் ஏழு பேர் கொண்ட ஒரு குழுவை வைத்திருக்க முடியும் அத்துடன் ஏழு மாதங்கள் வரை விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்க முடியும். இசுடார்லைனர் விண்கலம் அட்லஸ் 5 என்22 இல் புளோரிடாவில் உள்ள கேப் கேனவரல் விண்வெளி ஏவுதள வளாகம் 41-இல் இருந்து ஏவப்பட்டது.

2010 ஆம் ஆண்டு தொடங்கி வணிகரீதியாக மாந்தரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் பல சுற்றுப் போட்டி மேம்பாட்டு ஒப்பந்தங்களுக்குப் பிறகு, இசுபேசுஎக்சு க்ரூ டிராகனுடன் இணைந்து இசுடார்லைனரை நாசா தேர்ந்தெடுத்தது.[12][13][14][15] 2017 ஆம் ஆண்டு முதலாவது மாந்த சோதனைப் பறப்பு நடத்தத் திட்டமிடப்பட்டது.[15]

இருப்பினும், முதல் ஆளில்லா சுற்றுப்பாதை பறப்புச் சோதனை 2019 திசம்பர் 20 வரை நடைபெறவில்லை, மேலும் இது ஒரு பகுதித் தோல்வியாகக் கருதப்பட்டது. மேலும் பல தாமதங்களுக்குப் பிறகு, 2024 சூன் 5 அன்று மனிதப் பறப்புச் சோதனை வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டது.[16][17]

பல தாமதங்கள் காரணமாக, போயிங் நிறுவனம் இத்திட்டத்தில் $1.5 பில்லியனுக்கும் அதிகமாக இழந்துள்ளது. இவ்விழப்பு நாசாவின் ஆய்வுக்கு உட்பட்டது, இந்த ஆய்வின்படி விண்கலத்திற்கான ஒரு இருக்கைக்கான செலவு $90 மில்லியன் என மதிப்பிட்டுள்ளது, இது க்ரூ டிராகனின் $55 மில்லியனை விட 60% அதிகமாகும்.[18]

குறிப்புகள்

தொகு
  1. முதலாவது போயிங் மாந்தருடனான பறப்புச் சோதனைத் திட்டத்தில் 2 பேரும் 344 கிகி சரக்கும் செல்லும்.[4]
  2. CST - Crew Space Transportation (மாந்த விண்வெளிப் போக்குவரத்து).

மேற்கோள்கள்

தொகு
  1. (2011) "AIAA SPACE 2011 Conference & Exposition". {{{booktitle}}}. DOI:10.2514/6.2011-7101.
  2. Carreau, Mark (July 24, 2013). "Boeing Refines CST-100 Commercial Crew Capsule Approach". Aviation Week இம் மூலத்தில் இருந்து May 12, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140512224455/http://aviationweek.com/awin/boeing-refines-cst-100-commercial-crew-capsule-approach. 
  3. "Commercial Crew Program Press it". NASA. October 1, 2015 இம் மூலத்தில் இருந்து March 26, 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240326185648/https://www.nasa.gov/wp-content/uploads/2015/10/commercial_crew_press_kit_2.pdf?emrc=d5924a. 
  4. "Packing Starliner cargo is a balancing act". Boeing. February 28, 2024 இம் மூலத்தில் இருந்து March 28, 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240328140136/https://www.boeing.com/features/2024/02/packing-starliner-cargo-is-a-balancing-act. 
  5. Krebs, Gunther (April 2017). "Starliner (CST-100)". Gunther's Space Page. Archived from the original on May 3, 2017. பார்க்கப்பட்ட நாள் April 11, 2017.
  6. Boeing(September 23, 2009). "Boeing Submits Proposal for NASA Commercial Crew Transport System". செய்திக் குறிப்பு.
  7. "Boeing's New CST-100 'Starliner' Processing Facility Taking Shape at KSC". September 4, 2015. Archived from the original on April 23, 2021. பார்க்கப்பட்ட நாள் April 23, 2021.
  8. "NASA.gov". Archived from the original on May 25, 2020.
  9. "CST-100 Starliner – Customers". Boeing. Archived from the original on January 19, 2020. பார்க்கப்பட்ட நாள் January 19, 2020.
  10. "Boeing: Crew Space Transportation (CST) System". Boeing. Archived from the original on January 18, 2017. பார்க்கப்பட்ட நாள் January 25, 2016.
  11. Burghardt, Mike (August 2011). "Boeing CST-100: Commercial Crew Transportation System" (PDF). Boeing. Archived from the original (PDF) on May 1, 2013. பார்க்கப்பட்ட நாள் May 8, 2014.
  12. Boeing(February 2, 2010). "NASA Selects Boeing for American Recovery and Reinvestment Act Award to Study Crew Capsule-based Design". செய்திக் குறிப்பு.
  13. Morring, Jr., Frank (April 25, 2011). "Five Vehicles Vie For Future Of U.S. Human Spaceflight". Aviation Week இம் மூலத்தில் இருந்து May 9, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140509041748/http://aviationweek.com/awin/five-vehicles-vie-future-us-human-spaceflight. ""the CCDev-2 awards... went to Blue Origin, Boeing, Sierra Nevada Corp. and Space Exploration Technologies Inc. (SpaceX)" 
  14. "Boeing, SpaceX and Sierra Nevada Win CCiCAP Awards". SpaceNews. August 3, 2012 இம் மூலத்தில் இருந்து January 4, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130104234510/http://spacenews.com/civil/120803-boeing-spacex-sierra-ccicap.html. 
  15. 15.0 15.1 "Boeing and SpaceX Selected to Build America's New Crew Space Transportation System". NASA. September 16, 2014 இம் மூலத்தில் இருந்து May 22, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170522164333/https://blogs.nasa.gov/commercialcrew/2014/09/16/boeing-and-spacex-selected-to-build-americas-new-crew-space-transportation-system/. 
  16. Niles-Carnes, Elyna (June 1, 2024). "NASA, Mission Partners Forgo June 2 Launch of Crew Flight Test". NASA. Archived from the original on June 1, 2024. பார்க்கப்பட்ட நாள் June 1, 2024.
  17. Sheetz, Michael (2024-06-05). "Boeing Starliner launches for the first time carrying NASA astronauts to the ISS". CNBC (in ஆங்கிலம்). Archived from the original on June 5, 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
  18. Roulette, Joey (May 3, 2024). "Boeing sending first astronaut crew to space after years of delay". ராய்ட்டர்ஸ். https://www.reuters.com/science/boeing-sending-first-astronaut-crew-space-after-years-delay-2024-05-03/. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=போயிங்_இசுடார்லைனர்&oldid=4000146" இலிருந்து மீள்விக்கப்பட்டது