போர்ட் ஜேக்சன் சுறா

ஒரு சுறா இனம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Heterodontus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

போர்ட் ஜேக்சன் சுறா (Port Jackson shark) என்பது போர்ட் ஜேக்சன் நீர் பகுதி உட்பட, தெற்கு ஆத்திரேலியா கடலோரப் பகுதியில் காணப்படும், ஒரு இரவாடியும், [1] முட்டை இடும் வகையினதான குரங்கன் சுறா குடும்ப சுறா மீன் ஆகும். இந்த சுறாவுக்கு பெரிய, மொண்ணையான தலை உண்டு. தலையின் கண் பகுதிக்கு மேல் முகடு போன்று புடைத்து இருக்கும். இந்த சுறாவின் நிறம் சாம்பல்-பழுப்பு. இச்சுறாவின் மீது அடர் பழுப்பு நிற சேணக் குறிகள் காணப்படும். இவை 1.65 மீட்டர்கள் (5.5 அடி) வரை வளரக்கூடியன. [2] இவை குரங்கன் சுறாகுடும்பத்தில் மிகப்பெரியவை. [3]

போர்ட் ஜேக்சன் சுறா
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Heterodontus
இனம்:
இருசொற் பெயரீடு
Heterodontus portusjacksoni
(F. A. A. Meyer, 1793)
Range of Port Jackson shark (in blue)

போர்ட் ஜாக்சன் சுறா ஒரு இடம்பெயரும் இனமாகும். இது கோடையில் தெற்கு நோக்கி இடம்பெயரும், குளிர்காலத்தில் இனப்பெருக்கம் செய்ய வடக்கு நோக்கி திரும்புகிறது. இது கடின ஓடுடைய சிப்பி போன்ற மெல்லுடலிகள், ஓட்டுடைய கணுக்காலிகள், கடல் முள்ளெலிகள், மீன்கள் போன்றவற்றை உணவாக கொள்கிறது. இந்த இனத்தின் தனி அடையாளமாக சேணக் குறிகள் காணப்படுகின்றன. இந்த சோணக் குறிகள் சுறாவின் கண்களை மூடியபடி, துடுப்புகளைத் தொட்டு, இந்த இருண்ட பட்டைகள் உடல் முழுவதும் ஓடும். இவை இந்த மீனை தனித்து அடையாளம் காண உதவுகின்றது.

பரவலும், வாழ்விடமும்

தொகு

போர்ட் ஜேக்ஸன் சுறா தெற்கு ஆஸ்திரேலியாவைச் சுற்றியுள்ள மிதவெப்ப மண்டல கடல் பகுதியில் காணப்படும் ஒரு அகணிய உயிரி ஆகும். மேலும் இது தெற்கு குயின்ஸ்லாந்து, டாஸ்மேனியாவின் தெற்கில், மேற்கு ஆஸ்திரேலியாவின் மத்திய கடற்கரை வரை காணப்படுகிறது. மேற்கு ஆஸ்திரேலியாவின் யார்க் சவுண்ட் வரை வடக்கே பிடிக்கப்பட்டதாக ஐயத்திற்குரிய அறிக்கைகள் உள்ளன. இந்த இனத்தின் ஒற்றை மாதிரி 1954 ஆம் ஆண்டில் வெலிங்டனில் உள்ள மக்காராவில் ஒரு வலையில் பிடிபட்டது. நியூசிலாந்திலிருந்து வந்ததாகக் கூறப்படும் மேலும் இரண்டு சுறாக்கள் பிரித்தானிய அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டன, இருப்பினும் இந்த கூற்றை உறுதிப்படுத்த அவை பிடிபட்ட இடம் குறித்து எந்த தகவலும் இல்லை. [4] மரபணு ஆய்வுகள் இரண்டு ஆத்திரேலிய குழுக்களைக் குறிப்பிடுகின்றன, ஒன்று வடகிழக்கு விக்டோரியாவிலிருந்து மேற்கு ஆஸ்திரேலியாவிலும், இரண்டாவது தெற்கு குயின்ஸ்லாந்தில் இருந்து நியூ சவுத் வேல்ஸிலும் காணப்படுகிறது. இந்த இனம் தென்னாப்பிரிக்காவின் கடற்கரையில் எங்கோ தோன்றியதாக நம்பப்படுகிறது. இது பொதுவாக 100 மீட்டர்கள் (330 அடி) ஆழத்திற்கும் குறைவான பகுதியில் வாழ்கிறது. ஆனால் (330 275 மீட்டர்கள் (902 அடி) ஆழம் வரை அறியப்படுகிறது . [5]

இந்த சுறாக்களானது பொதுவாக கடலடித் தரைப்பகுதியில் அல்லது அதை ஒட்டி உள்ளது, அப்பகுதியே இதன் உணவுண்ணும் பகுதியாகும் . [6] இதன் வாழ்விடமாக பாறைகள் நிறைந்த கடலடியே இதன் பொதுவான வாழ்விடமாகும். இருப்பினும் மணல் மற்றும் சேறும் சகதியும் கடற்புற்கள் உள்ள கடல் தரையிலும் சில நேரங்களில் காணப்படும். [5] பகலில் இது பொதுவாக நடமாடாது அப்போது இவை கடல் குகைகள், [7] அல்லது பாறைப் பகுதிகள் போன்ற பகுதிகளில் தங்கி இருக்கும் சில சமயம் தட்டையான பகுதிகளில் இதைக் காணலாம்.

இயக்கமும், இடப்பெயர்வும்

தொகு

போர்ட் ஜாக்சன் சுறா ஒரு இரவுவாடியாகும். இதன் இயக்கம் மாலை நேரத்திற்குப் பிறகு துவங்கி நள்ளிரவில் உச்சத்தை அடைகிறது. சூரிய உதயத்திற்கு முன் செயல்பாடு குறைகிறது. [1] பிடித்து வளர்க்கபட்ட சுறாவும், கடலில் வாழும் சுறாவும் இதே இயக்க முறைகளில் இயங்கின. மேலும் இந்த சுறாக்களின் இயக்கத்தில் நாள், பாலினம் போன்றவை இடம்பெயர்வு நடத்தையில் தாக்கத்தை ஏற்படுத்தவுதாக ஒரு ஆய்வு சுட்டுகிறது. [1]

தோற்றம்

தொகு
 
ஒரு போர்ட் ஜாக்சன் சுறாவின் வாய் பல் தோற்றம்
 
இரண்டு போர்ட் ஜாக்சன் சுறாக்களின், "சேணம்" அம்த்தின் தோற்றம்

போர்ட் ஜாக்சன் சுறாக்கள் 1.65 மீட்டர்கள் (5.5 அடி) நீளம்வரை வளரக்கூடியவை. [2] இதற்கு மெண்ணையான பெரிய தலை உண்டு. இதன் கண்களுக்கு மேலே முகடுகள் உண்டு. இந்த சுறாக்களைத் தனித்து அடையாளம் காட்டக்கூடியதாக இவற்றின் பற்கள் மற்றும் உடல் நீளத்தின் பெரும்பகுதியில் ஓடும் சேணக் குறிகள் போன்றவை இவற்றை எளிதில் அடையாளம் காணக்கூடியவையாக உள்ளன. இந்த சோணக் குறிகளான கரும்பட்டைகள் இவற்றின் கண்களிலிருந்து முதுகுத் துடுப்பு வரையிலும், பின்னர் அவர்களின் உடலின் மற்ற பகுதிகளிலும் ஓடுகின்றன. முதுகில் ஒரே அளவான இரண்டு துடுப்புகள் உண்டு. இந்த துடுப்புகளின் முன்புறம் கொம்பு போன்ற அமைப்பு உண்டு. இந்த துடுப்பு கொம்புகளில் நஞ்சு இருப்பதாக ஒரு வதந்தி பரப்பப்படுகிறது. [5] இவற்றை வேறுபடுத்தி காட்ட உதவும் பிற அம்சங்களாக அவற்றின் சிறிய வாய்கள் மற்றும் அவற்றின் நாசி, அவை வாயுடன் ஒட்டி உள்ளன. [7]

இச்சுறாக்களின் உடல் சாம்பல்-பழுப்பு நிறத்தைக் கொண்டுள்ளன. உடல் கருப்பு பட்டைகளைக் கொண்டிருகும். அந்தப் பட்டைகள் இவற்றின் பக்கங்களிலும் பின்புறத்தின் பெரும் பகுதியில் நிறைந்திருக்கும். இந்த பட்டைகளில் ஒன்று முகத்தில் இருந்து சுறாவின் கண்களின் மேலே செல்கிறது. போர்ட் ஜாக்சன் சுறாக்களின் முதுகில் மெல்லிய, இருண்ட கோடுகள் உள்ளன. இவை வால் துடுப்பிலிருந்து முதல் முதுகுத் துடுப்பு வரை செல்கின்றன. [7]

பற்கள்

தொகு

போர்ட் ஜாக்சன் சுறாவின் பற்கள் ஒரு தனித்துவமான அம்சம் ஆகும். மற்ற சுறாக்களைப் போலல்லாமல், இதற்கு இருவேறு பல் வரிசைகள் உள்ளன. முன் வரிசை பற்கள் சிறியவை, கூர்மையானவை இரை தப்பிச் செல்லாமல் கவ்விப் பிடிக்கூடியவை. பின் வரிசை பற்கள் பெரியவை கடவாய் பற்கள் போல தட்டையானவை. இந்த பற்கள் இந்த இனங்களின் உணவான மொல்லுடலிகளின் மற்றும் முட்தோலிகளை கவ்வி அவற்றை பாதுகாக்கும் ஓடுகளை கடித்து உடைத்து உண்ணப் பயன்படுகின்றன. இந்த இனத்தின் இளம் மீன்களுக்கு கூர்மையான பற்கள் உள்ளன. அவற்றின் உணவில் பெரிய மீன்கள் உப்பதைவிட மென்மையான இரைகளையே அதிக விகிதத்தில் உண்கின்றன. [5]

சுவாச அமைப்பு

தொகு

போர்ட் ஜாக்சன் சுறாக்களுக்கு ஐந்து செவுள்கள் உள்ளன. இந்த செவுக்ளில் உள்ள மூச்சுத் துளைகள் இவற்றின் வாயுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் இவற்றால் ஒரே நேரத்தில் உண்ணவும் மூச்செடுக்கவும் முடியும்.

இனப்பெருக்கம்

தொகு

ஜாக்சன் சுறாக்களில் ஆண் சுறாக்கள் 8 முதல் 10 வயதிற்குளும் பெண் சுறாக்கள் 11 முதல் 14 வயதிலும் பாலியல் முதிர்ச்சியடைகின்றன. இந்த இனத்தின் வருடாந்திர இனப்பெருக்க சுழற்சி ஆகத்து மாத இறுதியில் தொடங்கி நவம்பர் நடுப்பகுதி வரை தொடர்கிறது. இந்த நேரத்தில், பெண் சுறா ஒவ்வொரு 8-17 நாட்களுக்கும் இரு முட்டைகளை இடுகிறது. [8] இந்த காலகட்டத்தில் எட்டு முறை இரண்டு இரண்டாக முட்டை இடும். முட்டைகள் 10-11 மாதங்களில் முதிர்ச்சியடைகின்றன. இந்த முட்டைகள் திருகு பொதியுறை முட்டைகளாகும். ஒரு முட்டையில் இருந்து ஒரு குஞ்சு வெளியேறும் காப்ஸ்யூலில் இருந்து வெளியேறும். இந்தக் குஞ்சுகளில் 89.1% பிற உயிர்களின் வேட்டைக்கு இரையாகிவிடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. [7]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Kadar, Julianna; Ladds, Monique; Mourier, Johann; Day, Joanna; Brown, Culum (2019). "Acoustic accelerometry reveals diel activity patterns in premigratory Port Jackson sharks" (in en). Ecology and Evolution 9 (16): 8933–8944. doi:10.1002/ece3.5323. பன்னாட்டுத் தர தொடர் எண்:2045-7758. பப்மெட்:31462992. 
  2. 2.0 2.1 Carpenter, Kent E.; Luna, Susan M. (2019). Froese, R; Pauly, D. (eds.). "Heterodontus portusjacksoni (Meyer, 1793)". Fishbase. பார்க்கப்பட்ட நாள் 31 January 2019.
  3. https://animaldiversity.org/accounts/Heterodontus_portusjacksoni/
  4. Roberts, Clive; Stewart, A. L.; Struthers, Carl D.; Barker, Jeremy; Kortet, Salme; Freeborn, Michelle (2015). The fishes of New Zealand. Vol. 2. Wellington, New Zealand: Te Papa Press. p. 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780994104168. இணையக் கணினி நூலக மைய எண் 908128805.
  5. 5.0 5.1 5.2 5.3 M. McGrouther (October 2006). "Port Jackson Shark". Australian Museum. Archived from the original on 13 March 2009. பார்க்கப்பட்ட நாள் March 26, 2009. பிழை காட்டு: Invalid <ref> tag; name "McGrouther" defined multiple times with different content
  6. Dianne J. Bray, 2011, Port Jackson Shark, Heterodontus portusjacksoni, in Fishes of Australia, accessed 26 Aug 2014, http://www.fishesofaustralia.net.au/home/species/1982 பரணிடப்பட்டது 2021-04-18 at the வந்தவழி இயந்திரம்
  7. 7.0 7.1 7.2 7.3 Rebecca Sarah Thaler. "Port Jackson Shark". Florida Museum of Natural History. Archived from the original on அக்டோபர் 7, 2012. பார்க்கப்பட்ட நாள் March 27, 2009. பிழை காட்டு: Invalid <ref> tag; name "Florida" defined multiple times with different content
  8. "HETERODONTIFORMES:", Sharks of the World, Princeton University Press, pp. 247–257, 2021-07-20, பார்க்கப்பட்ட நாள் 2021-09-11
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்ட்_ஜேக்சன்_சுறா&oldid=3777701" இலிருந்து மீள்விக்கப்பட்டது