போர்னியோ சீகாரப் பூங்குருவி
போர்னியோ சீகாரப் பூங்குருவி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | மை. போர்னியன்சிசு
|
இருசொற் பெயரீடு | |
மையோபோனசு போர்னியன்சிசு சிலேட்டர், 1885 |
போர்னியோ சீகாரப் பூங்குருவி (Bornean whistling thrush) என்பது முயூசிகாபிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும்.
வாழிடம்
தொகுஇது இந்தோனேசியாவிலும் மலேசியாவிலும் காணப்படுகிறது. இங்கு இது போர்னியோ தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[2] இதன் இயற்கையான வாழிடம் மிதவெப்ப மண்டல அல்லது வெப்ப மண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
இனப்பெருக்கம்
தொகுசராசரியாக, போர்னியோ சீகாரப் பூங்குருவி சுமார் 2 முட்டைகளை இடுகின்றன. இவை சுமார் 18 நாட்களுக்கு அடைகாக்கின்றன.[3] கூடு கட்டும் காலம் 24 நாட்கள் ஆகும்.[3]
இவை பருவநிலை மாற்றத்தால், குறிப்பாக வறட்சியால் அச்சுறுத்தப்படுகின்றன.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Myophonus borneensis". IUCN Red List of Threatened Species 2016: e.T22732973A95053418. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22732973A95053418.en. https://www.iucnredlist.org/species/22732973/95053418. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Phillipps, Quentin & Phillipps, Karen (2011). Phillipps’ Field Guide to the Birds of Borneo. Oxford, UK: John Beaufoy Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-906780-56-2.
- ↑ 3.0 3.1 3.2 Zarri, Elise C.; Martin, Thomas E. (2022). "A comparison of the breeding biology of the Bornean Whistling-Thrush (Myophonus borneensis) and White-crowned Forktail (Enicurus leschenaulti borneensis)". Journal of Field Ornithology 93 (3). doi:10.5751/jfo-00133-930303. பன்னாட்டுத் தர தொடர் எண்:1557-9263. http://dx.doi.org/10.5751/jfo-00133-930303.