போல் கொலிங்வுட்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

பால் டேவிட் கோலிங்வுட் MBE (Paul David Collingwood பிறப்பு 26 மே 1976) ஒரு முன்னாள் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார்.இவர் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய துடுப்பாட்ட வடிவங்களில் விளையாடியுள்ளார். கோலிங்வுட் டர்ஹாம் கவுண்டி துடுப்பாட்ட சங்கத்திற்காக விளையாடினார் மற்றும் 2010 ஐசிசி உலக இருபதுக்கு 20 வென்ற இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் தலைவராக இருந்தார். அவர் இங்கிலாந்து தேர்வுத் துடுப்பாட்ட அணியின் பன்முக வீரராகவும், ஒருநாள் சர்வதேச (ஒருநாள்) அணியின் (2007-2008) தலைவராகவும் இருந்தார். அவர் இங்கிலாந்துக்கான முதல் இ20 போட்டியின் தலைவராக இருந்தார்..

போல் கொலிங்வுட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்போல் டேவிட் கொலிங்வுட்
பட்டப்பெயர்கோலி
உயரம்5 அடி 11 அங் (1.80 m)
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகம்
பங்குசகலதுறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 622)திசம்பர் 2 2003 எ. இலங்கை
கடைசித் தேர்வுசனவரி 3 2011 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 162)சூன் 7 2001 எ. பாக்கிஸ்தான்
கடைசி ஒநாபசனவரி 30 2011 எ. ஆத்திரேலியா
ஒநாப சட்டை எண்5 (prev. 50)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 68 193 197 363
ஓட்டங்கள் 4,259 5,031 11,310 9,522
மட்டையாட்ட சராசரி 40.56 35.68 36.48 33.88
100கள்/50கள் 10/20 5/26 24/58 8/54
அதியுயர் ஓட்டம் 206 120* 206 120*
வீசிய பந்துகள் 1,905 5,048 10,024 9,594
வீழ்த்தல்கள் 17 110 128 225
பந்துவீச்சு சராசரி 59.88 37.98 39.58 34.37
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 1 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 3/23 6/31 5/52 6/31
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
96/– 107/– 228/– 184/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, பிப்ரவரி 2 2011

தனது துடுப்பாட்ட வாழ்க்கையின் இறுதிகாலங்களில் இவர் டர்ஹாம் கவுண்டி துடுப்பாட்ட சங்கத்தின் தலைவராக இருந்தார். [1] இவரது காலத்தின் மிகச்சிறந்த களத்தடுப்பு வீரர்களில் ஒருவராகவும் கருதப்பட்டார். இவர் இங்கிலாந்துக்கு இழப்புக் கவனிப்பாளராக விளையாடினார். [1] [2] [3] [4]

1996 ஆம் ஆண்டில் தனது முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 2001 ஆம் ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 2003 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்ப்பாட்டப் போட்டிகளிலும் இவர் அறிமுகமானார்.[5][6][7] இரண்டு ஆண்டுகள் இவர் சில தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் மட்டுமே விளையாடினார். பின்னர் 2005 ஆம் ஆண்டிற்கான ஆஷஸ் துடுப்பாட்டத் தொடருக்குப் பிறகு தான் இவருக்கு இங்கிலாந்து அணியில் நிலையான இடம் கிடைத்தது. 2006 ஆம் ஆண்டிற்கான ஆஷஸ் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் 206 ஓட்டங்கள் எடுத்தார். ஆத்திரேலிய மண்ணில் 78 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் இருநூறு ஓட்டங்கள் எடுத்த இங்கிலாந்து வீரர் எனும் சாதனை படைத்தார். ஆனால் இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி தோற்றது. ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக போட்டிகளுக்குத் தலைமை தாங்கியவர் எனும் சாதனை படைத்திருந்தார். பின்னர் இயன் பெல் இந்தச் சாதனையினை முறியடித்தார்.[8][9]

2010–11 ஆஷஸ் தொடரின் 5 வது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் போது, ஜனவரி 2011 இல் தேர்வுத் துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். [10] ஆஸ்திரேலியாவில் 24 ஆண்டுகளில் முதல் முறையாக இங்கிலாந்து ஒரு தொடரை வென்று சாதனை படைத்தது. இதில் மூன்று போட்டிகளிலும் ஆட்டப் பகுதியோடு வெற்றிகளைப் பெற்றிருந்தது.

கோலிங்வுட் செப்டம்பர் 2018 இல் முதல் தரத் துடுப்பாட்டம் மற்றும் பட்டியல் அ துடுப்பாட்டங்களில் இருந்தும் ஓய்வு பெற்றார். [11]

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

கோலிங்வுட், கவுண்டி டர்ஹாமின் கான்செட்டுக்கு அருகிலுள்ள ஷாட்லி பிரிட்ஜில் பிறந்தார், இவரது பெற்றோர் டேவிட் மற்றும் ஜேனட் ஆவார். [12] [13] அவரது மூத்த சகோதரர் பீட்டருடன் சேர்ந்து, பிளாக்ஃபைன் காம்பிரிஹென்சிவ் பள்ளியில் கல்வி பயின்றார், இப்போது கான்செட் அகாடமி என்று அழைக்கப்படுகிறது. [14] தனது ஒன்பதாம் வயதில் இவர் பள்ளி அணியின் தலைவராக இருந்தார். [15] [16]

துடுப்பாட்ட வாழ்க்கை

தொகு

இவர் 2003 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்ப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். இவர் மொத்தமாக 4,259 ஓட்டங்களை எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 2006 ஆம் ஆண்டிற்கான ஆஷஸ் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் 206 ஓட்டங்கள் எடுத்தார். ஆத்திரேலிய மண்ணில் 78 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் இருநூறு ஓட்டங்கள் எடுத்த இங்கிலாந்து வீரர் எனும் சாதனை படைத்தார்.

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 "Paul Collingwood player profile". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 February 2007.
  2. "Paul Collingwood player profile". Cricket Web. பார்க்கப்பட்ட நாள் 15 February 2007.
  3. BT Sport (2017-11-30), Cricket Masterclass: Slip catching | The Ashes on BT Sport, பார்க்கப்பட்ட நாள் 2017-12-01
  4. cricket.com.au (2017-05-21), Ponting's Top Five fielders of all time, பார்க்கப்பட்ட நாள் 2017-11-27
  5. Professional Cricketers' Association. "Player archive – Paul Collingwood". Archived from the original on 2007-10-01. பார்க்கப்பட்ட நாள் 17 February 2007.
  6. Cricinfo. "NatWest Series 2001 squads". பார்க்கப்பட்ட நாள் 17 February 2007.
  7. Cricinfo. "England in Sri Lanka Test Series – 1st Test". பார்க்கப்பட்ட நாள் 16 February 2007.
  8. "Paul Collingwood praises Ian Bell after losing his ODI batting record". https://www.bbc.co.uk/sport/0/cricket/30958481. பார்த்த நாள்: 13 February 2015. 
  9. [1], Cricinfo Statsguru, Retrieved on 25 June 2010.
  10. "Paul Collingwood calls time on Test career". BBC Sport. 3 December 2010. http://news.bbc.co.uk/sport1/hi/cricket/england/9342658.stm. பார்த்த நாள்: 3 December 2010. 
  11. "Former England captain Paul Collingwood announces retirement". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 13 September 2018.
  12. England and Wales Cricket Board. "ECB Stats – Paul Collingwood". Archived from the original on 9 March 2007. பார்க்கப்பட்ட நாள் 16 February 2007.
  13. "Parents' pride at Test 200". The Northern Echo. 4 December 2006. Archived from the original on 2007-09-29. பார்க்கப்பட்ட நாள் 22 February 2007.
  14. "Paul Collingwood player profile". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 February 2007.
  15. The Northern Echo. "Saturday Spotlight: Collingwood still denied star status". பார்க்கப்பட்ட நாள் 21 February 2007.
  16. The Northern Echo (17 February 2007). "Collingwood has namesake's admirable qualities". பார்க்கப்பட்ட நாள் 21 February 2007.

புற இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=போல்_கொலிங்வுட்&oldid=3006948" இலிருந்து மீள்விக்கப்பட்டது