மகப்பேறுக்குப் பின் பாலுறவு
மகப்பேறுக்குப் பின் பாலுறவு (Sex after pregnancy); பெரும்பாலும் மகப்பேறுக்குப் பின் பல வாரங்கள் அல்லது மாதங்கள் தாமதமாக வைத்துக்கொள்ளும் பாலுறவாகும். ஆனால் அவ்வாறில்லாமல் குறுகிய காலத்தில் வைத்துக் கொள்ளும் பாலுறவானது பெண்களுக்கு கடினமாகவும் வேதனையாகவும் இருக்கலாம். குழந்தை பிறப்பின் போது மூலாதாரத்தில் காயங்கள் அல்லது அறுவை சிகிச்சை வெட்டுக்களோ ஏற்பட்டிருப்பின் அது பாலியல் செயலிழப்பை ஏற்படுத்தக்கூடும். உடலுறவு தவிர்த்த பாலியல் செயல்பாடுகள் குழந்தை பிறப்புக்குப் பின்னான காலத்தில் விரைவில் சாத்தியமாகும். ஆனால் சில பெண்கள் மகப்பேறுக்குப் பிறகு ஏற்படும் மன அழுத்தம் காரணமாக குழந்தை பிறந்த பின், பாலியல் தொடர்பான எந்தக் குறிப்பையும் இழக்கிறார்கள். பொதுவான பிரச்சினைகளாக குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்கும் மேலாக நீடிக்கும் இக்காலத்தில் பெண்ணை விட ஆணுக்கு அதிக பாலியல் விருப்பம் இருக்கும். இது பெண்ணின் உடல்நிலையை மோசமாக்கும்.[1][2]
பிறப்பு முறை மற்றும் காயங்கள்
தொகுமகபேறின் பொழுது தங்கள் மூலாதாரத்தில் சேதம் அல்லது கசிவு உள்ள பெண்கள் ஒரு பழுது படாத பெரினியம் கொண்ட பெண்களைக் காட்டிலும் தாமதமாக உடலுறவைத் தொடங்குகிறார்கள்.[3] மேலும் மூலாதாரத்தில் அறுவைசிகிச்சை வெட்டு ஏற்பட்ட பெண்கள் குறைந்த பாலியல் உறவுகளைக் கொண்டுள்ளனர்.[4] மூலாதாரத்தில் ஏற்படும் சேதாமானது வலிமிகு உடலுறவுடன் தொடர்புடையது.[5] குதக் கசிவு கொண்ட பெண்கள் ஆறு மாதங்கள் [6] அல்லது ஒரு வருடத்துக்குப் [7] பிறகு மீண்டும் உடலுறவு கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு, ஆனால் 18 மாதங்களுக்குப் பிறகு அவர்களுக்கு சாதாரண பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.[8]
வலிமிகு பாலுறவின் அதிர்வெண் அல்லது தீவிரத்தன்மை அதிகரித்தல் என்பது உறிஞ்சுதல் அல்லது ஆயுதம் பயன்படுத்தி யோனி வழி செய்யப்படும் பிரசவத்துடன் தொடர்புடையதாகும்.[5] இதனால் உடலுறவை மீண்டும் தொடங்குவதில் தாமதமும் , சில பாலியல் பிரச்சினைகளும் ஏற்படும். அறுவைசிகிச்சை மகப்பேறு முதல் 3 மாதங்களில் குறைவான வலிமிகுந்த உடலுறவை ஏற்படுத்தக்கூடும்,[9] அல்லது எந்த வித்தியாசமும் இல்லாமலும் இருக்கலாம்,[10] மேலும் ஆறு மாதங்களுக்குள் பாலியல் செயல்பாடு அல்லது அறிகுறிகளில் எந்த வித்தியாசமும் இருப்பதில்லை,[11][12] அறுவைசிகிச்சை மூலம் பிரசவித்த பெண்கள் ஆறு வருடங்கள் வரையிலும் கூட யோனி வழிப் பாலியல் செயல்பாடுகளில் அதிக திருப்தியைக் கொண்டிருக்கின்றனர்.[13]
உடலுறவை மீண்டும் தொடங்குவதற்கு முன் தாமதம்
தொகுபல மருத்துவர்கள் , கருப்பை வாய் மூடவும், இரத்தப்போக்கு ( லோச்சியா என அழைக்கப்படுகிறது) நிறுத்தவும், கசிவு குணமடையவும் நான்கு முதல் ஆறு வாரங்கள் காத்திருந்து உடலுறவை மீண்டும் தொடங்குவதற்குப் பரிந்துரைக்கின்றனர்.[14]
துருக்கியில் பெண்களைப் பற்றிய ஒரு ஆய்வில், பெற்றெடுத்த ஆறு வாரங்களுக்குள் 42% பேர் மீண்டும் உடலுறவைத் தொடங்கினர்.[15] அமெரிக்க மற்றும் பிரித்தானிய ஆய்வுகள் ஆறு வாரங்களில், 57% பெண்கள் மீண்டும் உடலுறவைத் தொடங்கினர்.[16] 82–85% பேர் மூன்று மாதங்களிலும்,[4] மேலும் 89-90% பேர் ஆறு மாதங்களுக்குள்ளும் உடலுறவைத் தொடங்கினர்.[6][9] மற்றொரு அமெரிக்க ஆய்வில், யோனி வழிப் பாலுறவை விட சுயஇன்பம் (74%) வாய்வழிப் பாலுறவு (58%) ஆகியவை (34%) ஆறு வாரங்களுக்குள் அடிக்கடி தொடங்குகின்றன. மூன்றில் இரண்டு பங்கு உகாண்டா பெண்களால் பிரசவத்தின் ஆறு மாதங்களுக்குள் உடலுறவு மீண்டும் தொடங்கப்பட்டது,[17] சீன பெண்களில் 52% பேர் இரண்டு மாதங்களாலும், 95% பேர் ஆறு மாதங்களாலும் உடலுறவைத் தொடங்கினர்.[12]
பாலியல் செயலிழப்பு
தொகுஒரு பிரித்தானிய ஆய்வில் பிரசவத்திற்கு எட்டு மாதங்களுக்குப் பிறகு ஆண்களும் பெண்களும் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் பாலியல் வாழ்க்கையை ' மோசமானது’ அல்லது 'மிகவும் நல்லதல்ல' என்று விவரித்தனர்,[18] மற்றொரு ஆய்வில் குழந்தை பிறப்புக்குப் பின்னான காலத்தில் அவர்களின் பாலியல் வாழ்க்கையில் 70% பிரித்தானியப் பெண்களும் 89% தைவானிய பெண்களும் உடலுறவில் திருப்தியடைந்துள்ளனர்.[19] பெற்றெடுத்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, அமெரிக்கப் பெண்களில் கால் பகுதியினர் தங்களுக்கு குறைந்த பாலியல் உணர்வு, திருப்தி மற்றும் புணர்ச்சியை அடையும் திறன் இருப்பதாகக் கூறினர், மேலும் 22% பேர் பாலுறவின்போது வலி என்று கூறினர். கர்ப்பத்திற்கு முந்தைய பாலுறவுச் செயல்பாடு நிலை 38% உடன் ஒப்பிடும்போது 80% க்கும் மேற்பட்ட பிரித்தானிய பெண்கள் பிரசவத்திற்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு பாலியல் பிரச்சினைகளை அனுபவித்தனர்.[9] மேலும் பெற்றெடுத்த ஆறு மாதங்களுக்குள் மீண்டும் உடலுறவைத் தொடங்கிய கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு,உகாண்டா பெண்கள் யோனி வலியை அனுபவித்தது, மூன்றில் ஒரு பகுதியினருக்கு யோனிக் கசிவு வெளியேற்றம் அல்லது இரத்தப்போக்கு ஏற்பட்டது.[17]
மகப்பேறுக்குப்பின் இயக்குநீர் மாற்றங்கள் காரணமாக சுமார் மூன்று மாதங்கள் யோனி வறட்சி ஏற்படலாம். ஈஸ்ட்ரோஜனின் அளவைக் குறைத்தல் போன்ற ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் வலிமிகுந்த உடலுறவைக் கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது [5][9][16] அத்துடன் குறைவான லிபிடோ.[20] பெரிய மகப்பேறு அதிர்ச்சி ஏற்பட்ட பெண்கள் தங்கள் இணையரால் அல்லது உடலுறவுக் கூட்டாளியால், பிடிக்கப்படவோ, தொடவோ அல்லது தாட்டப்படவோ கூட விரும்புவதில்லை என்று தெரிவித்தனர்.[4]
இடர்கள்
தொகுமகப்பேறுக்குப் பின் நஞ்சுக்கொடி படுக்கை குணமாகும் முன்பே, குறுகிய காலத்தில் பாலுறவு கொண்டால், இரத்த ஓட்டத்தில் காற்று நுழையும் பொழுது இரத்தக் குழாய்களில் ஒரு தீவிரமான காற்றடைப்பு ஏற்படலாம். குறிப்பாக, உடலுறவின் பொழுது பெண்ணின் முழங்கால் அவரது மார்பு எதிராக அழுத்தப்படும் பொழுது இது ஏற்படலாம். ஆனால் இந்த நிகழ்வு அரிதான ஒன்றாகும்.[21] மகப்பேறின் பின்னர் மிகக் குறுகிய காலத்திலேயே உடலுறவில் ஈடுபடும் பொழுது கருப்பையில் தொற்று, கசிவு, கீறல்கள் ஏற்படுவது பொதுவான சிக்கல்களாக உள்ளன.
குறைந்த பாலியல் விருப்பம்
தொகுபெண்களுக்கு முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட மகப்பேறு, குறைந்த பாலியல் விருப்பத்துடன் தொடர்புடையது.[22] முதல் முறையாக மகப்பேறடைந்த தாய்மார்களில் மூன்றில் ஒரு பங்கினர் எட்டு மாதங்களில் பாலியல் விருப்ப இழப்பைக் கொண்டுள்ளனர். இருப்பினும் அனுபவம் வாய்ந்த தாய்மார்களில் ஏழு பேரில் ஒருவருக்கு மட்டுமே பாலியல் விருப்ப இழப்பு உள்ளது.[18] பெண்கள் பெரும்பாலும் பிரசவத்திற்குப் பிறகு மோசமான உடல்நிலையை அடைகின்றனர்.[2][23] பெண்கள் பெரும்பாலும் மகப்பேறுக்குப் பின்னர் அவர்களின் உடல் மாற்றங்களால் சங்கடப்படுகிறார்கள். மேலும் பெரும்பாலும் தூக்கத்தை விரும்புகிறார்கள் அல்லது தங்களுக்கு நேரம் ஒதுக்கிக்கொள்ள விரும்புகிறார்கள், இது மாற்றப்பட்ட பாலியல் முறைக்கு வழிவகுக்கிறது. தங்கள் துணையுடன் பாலியல் விருப்பத்தின் முரண்பாடு அடிக்கடி நிகழ்கிறது.[19] குறைந்த பாலியல் விருப்பத்திற்கான மற்றொரு சாத்தியமான காரணம் மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு ஆகும். மனச்சோர்வடைந்த பெண்கள் ஆறு மாதங்களில் மீண்டும் உடலுறவு கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு. மேலும் அதிகமான பாலியல் சுகாதார பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பு அதிகம்.[24]
குழந்தை பிறப்புக்குப் பின்னான காலத்திற்கும் குறைவான உடலுறவு கொள்ளுதல், பெண்களின் வயது முதிர்வு ஆகியவற்றின் காரணமாகவும் பிரசவத்திற்கு ஒரு வருடம் கழித்து பாலியல் உறவில் அதிருப்திஏற்படக்கூடும். ஆனால் கர்ப்பம் அல்லது பிறப்பு தொடர்பான காரணிகளுடன் அல்ல.[7]
கூட்டாளர்களில்
தொகுகூட்டாளிகளின் பாலியல் விருப்பம் தொடர்பான ஒரு ஆய்வில், தந்தை,, தாய்மார்களின்(மாற்றுப் பாலினக் கூட்டாளிகளிலும்) பாலியல் விருப்பம் தொடர்ந்து குறைவாகவே உள்ளது: "இந்த நேரத்தில் இணை பெற்றோர்களிடையே அதிக பாலியல் விருப்பம் பாலியல் ஆர்வத்தால் மட்டுமல்ல, நெருக்கமான உணர்வுகளாலும் பாதிக்கப்பட்டது. குறைந்த விருப்பம் என்பது கூட்டாளியின் ஆர்வமின்மை அல்லது தாய்ப்பால் கொடுக்கும் நிலை ஆகியவற்றால் பாதிக்கப்படவில்லை, ஆனால் பொதுவாக மன அழுத்தம், சோர்வின் காரணமாக குறைந்த பாலியல் விருப்பம் ஏற்படுகிறது " [25]
சிகிச்சை
தொகுபிரசவத்திற்கு முந்தைய பாலியல் பிரச்சினை கொண்ட லண்டன் பெண்களில் 15% மட்டுமே ஒரு சுகாதார நிபுணருடன் கலந்துரையாடியதாகக் கூறினர்,[9] அதேசமயம் 59.4% உகாண்டா பெண்கள் மீண்டும் உடலுறவைத் தொடங்கி பாலியல் பிரச்சினையை சந்தித்தவர்கள் மருத்துவ உதவியை நாடினர்.[17] இடுப்புப் பகுதி தசை உடற்பயிற்சி செய்வது பாலியல் செயல்பாட்டை மேம்படுத்துவதாக தோன்றுகிறது,[13] வலிமிகுந்த பாலுறவு ,யோனி வறட்சி ஆகியவற்றை வெவ்வேறு பாலியல் நிலைகள் மற்றும் மசகு எண்ணெய் பயன்படுத்தி குறைக்க முடியும்.[14] பிரித்தானியப் பெண்களில் 83% மற்றும் தைவானிய பெண்களில் 60% பெண்கள் பிரசவத்திற்கு முந்தைய காலத்தில் பாலியல் பற்றி போதுமான தகவல்களை கொண்டிருப்பதாக நினைத்தனர்.[19]
குறிப்புகள்
தொகு- ↑ Pastore, L; Owens A; Raymond C (2007). "Postpartum sexuality concerns among first-time parents from one U.S. academic hospital". J Sex Med (Wiley-Blackwell/International Society for Sexual Medicine) 4 (1): 115–23. doi:10.1111/j.1743-6109.2006.00379.x. பப்மெட்:17087807. http://www3.interscience.wiley.com/journal/118496050/abstract.
- ↑ 2.0 2.1 Olsson, Ann; Martina Lundqvist; Elisabeth Faxelid; Eva Nissen (2005). "Women's thoughts about sexual life after childbirth: focus group discussions with women after childbirth". Scandinavian Journal of Caring Sciences (Wiley-Blackwell/Nordic College of Caring Science) 19 (4): 381–7. doi:10.1111/j.1471-6712.2005.00357.x. பப்மெட்:16324063. http://www3.interscience.wiley.com/journal/118652876/abstract.
- ↑ Williams, A; Herron-Marx S; Carolyn H (2007). "The prevalence of enduring postnatal perineal morbidity and its relationship to perineal trauma". Midwifery (Elsevier) 23 (4): 392–403. doi:10.1016/j.midw.2005.12.006. பப்மெட்:17196714. https://archive.org/details/sim_midwifery_2007-12_23_4/page/392.
- ↑ 4.0 4.1 4.2 Rogers, RG; Borders N; Leeman LM; Albers LL (2009). "Does spontaneous genital tract trauma impact postpartum sexual function?". J Midwifery Women's Health (Elsevier) 54 (2): 98–103. doi:10.1016/j.jmwh.2008.09.001. பப்மெட்:19249654.
- ↑ 5.0 5.1 5.2 Signorello, LB; Harlow BL; Chekos AK; Repke JT (2001). "Postpartum sexual functioning and its relationship to perineal trauma: a retrospective cohort study of primiparous women". Am J Obstet Gynecol 184 (5): 881–8. doi:10.1067/mob.2001.113855. பப்மெட்:11303195. https://archive.org/details/sim_american-journal-of-obstetrics-and-gynecology_2001-04_184_5/page/881.
- ↑ 6.0 6.1 "Sexual Function 6 Months After First Delivery". Obstet Gynecol 111 (5): 1040–4. 2008. doi:10.1097/AOG.0b013e318169cdee. பப்மெட்:18448733.
- ↑ 7.0 7.1 van Brummen, HJ; Bruinse HW; van de Pol G; Heintz AP; van der Vaart CH (2006). "Which factors determine the sexual function 1 year after childbirth?". BJOG (Wiley-Blackwell/Royal College of Obstetricians and Gynaecologists) 113 (8): 914–8. doi:10.1111/j.1471-0528.2006.01017.x. பப்மெட்:16907937. http://www3.interscience.wiley.com/journal/118613454/abstract.
- ↑ Otero, M; Boulvain M; Bianchi-Demicheli F; Floris LA; Sangalli MR; Weil A; Irion O; Faltin DL. (2006). "Women's health 18 years after rupture of the anal sphincter during childbirth: II. Urinary incontinence, sexual function, and physical and mental health". Am J Obstet Gynecol (Elsevier) 194 (5): 1260–5. doi:10.1016/j.ajog.2005.10.796. பப்மெட்:16579926. https://archive.org/details/sim_american-journal-of-obstetrics-and-gynecology_2006-05_194_5/page/1260.
- ↑ 9.0 9.1 9.2 9.3 9.4 Barrett, G; Pendry E; Peacock J; Victor C; Thakar R; Manyonda I (2000). "Women's sexual health after childbirth". BJOG (Wiley-Blackwell/Royal College of Obstetricians and Gynaecologists) 107 (2): 186–95. doi:10.1111/j.1471-0528.2000.tb11689.x. பப்மெட்:10688502. http://www3.interscience.wiley.com/journal/119051596/abstract.
- ↑ Hicks, TL; Goodall SF; Quattrone EM; Lydon-Rochelle MT (2004). "Postpartum sexual functioning and method of delivery: summary of the evidence". J Midwifery Women's Health (Elsevier/American College of Nurse-Midwives) 49 (5): 430–6. doi:10.1016/j.jmwh.2004.04.007. பப்மெட்:15351333.
- ↑ Barrett, G; Peacock J; Victor CR; Manyonda I (2005). "Cesarean section and postnatal sexual health". Birth (Wiley Periodicals, Inc.) 32 (4): 306–11. doi:10.1111/j.0730-7659.2005.00388.x. பப்மெட்:16336372. http://www3.interscience.wiley.com/journal/118656128/abstract.
- ↑ 12.0 12.1 Wang, Huan-ying; Xiao-yang Xu; Zhen-wei Yao; Qin Zhou (2003). "Impact of Delivery Types on Women's Postpartum Sexual Health". Reproduction & Contraception 14 (4): 237–242. http://www.randc.cn/e200304/Wang%20Huanying.pdf. பார்த்த நாள்: 2009-08-07.
- ↑ 13.0 13.1 Dean, N; Wilson D; Herbison P; Glazener C; Aung T; Macarthur C (2008). "Sexual function, delivery mode history, pelvic floor muscle exercises and incontinence: a cross-sectional study six years post-partum". Aust N Z J Obstet Gynaecol (Wiley-Blackwell/The Royal Australian and New Zealand College of Obstetricians and Gynaecologists) 48 (3): 302–11. doi:10.1111/j.1479-828X.2008.00854.x. பப்மெட்:18532963. http://www3.interscience.wiley.com/journal/120082441/abstract.
- ↑ 14.0 14.1 "Sex after pregnancy: Let your body set the pace". Mayo Clinic. 30 May 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-08-07.
- ↑ Geçkil, E; Sahin T; Ege E (2009). "Traditional postpartum practices of women and infants and the factors influencing such practices in South Eastern Turkey". Midwifery (Elsevier) 25 (1): 62–71. doi:10.1016/j.midw.2006.12.007. பப்மெட்:17335945. https://archive.org/details/sim_midwifery_2009-02_25_1/page/62.
- ↑ 16.0 16.1 Connolly, AnnaMarie; John Thorp; Laurie Pahel (2005). "Effects of pregnancy and childbirth on postpartum sexual function: a longitudinal prospective study". International Urogynecology Journal (Springer London) 16 (4): 263–7. doi:10.1007/s00192-005-1293-6. பன்னாட்டுத் தர தொடர் எண்:1433-3023. பப்மெட்:15838587.
- ↑ 17.0 17.1 17.2 Odar, E; Wandabwa J; Kiondo P (2003). "Sexual practices of women within six months of childbirth in Mulago hospital, Uganda". Afr Health Sci 3 (3): 117–23. பப்மெட்:14676716.
- ↑ 18.0 18.1 Dixon, M; Booth N; Powell R (2000). "Sex and relationships following childbirth: a first report from general practice of 131 couples". British Journal of General Practice 50 (452): 223–4. பப்மெட்:10750236.
- ↑ 19.0 19.1 19.2 Huang, Y.C.; Mathers, N. J. (2006). "A comparison of sexual satisfaction and post-natal depression in the UK and Taiwan". International Nursing Review (Blackwell Publishing Ltd.) 53 (3): 197–204. doi:10.1111/j.1466-7657.2006.00459.x. பப்மெட்:16879182. https://archive.org/details/sim_international-nursing-review_2006-09_53_3/page/197.
- ↑ LaMarre, Amanda K.; Laurel Q. Paterson; Boris B. Gorzalka (2003). "Breastfeeding and postpartum maternal sexual functioning: A review". The Canadian Journal of Human Sexuality 12 (3–4): 151–168. https://www.questia.com/googleScholar.qst;jsessionid=K76JGz5V9tyQWKBhTQQRNCJwXZb5pwbbc7PmQPGNJp7L3yvpnyWL!1308280416!-868027653?docId=5006703262.
- ↑ Batman, PA; Thomlinson J; Moore VC; Sykes R (1998). "Death due to air embolism during sexual intercourse in the puerperium". Postgrad Med J 74 (876): 612–3. doi:10.1136/pgmj.74.876.612. பப்மெட்:10211360.
- ↑ Mitchell, KR; Mercer CH; Wellings K; Johnson AM (2009). "Prevalence of Low Sexual Desire among Women in Britain: Associated Factors". J Sex Med (Wiley-Blackwell/International Society for Sexual Medicine) 6 (9): 2434–44. doi:10.1111/j.1743-6109.2009.01368.x. பப்மெட்:19549088. http://www3.interscience.wiley.com/journal/122463030/abstract?CRETRY=1&SRETRY=0.
- ↑ Pauls, RN; Occhino JA; Dryfhout VL (2008). "Effects of pregnancy on female sexual function and body image: a prospective study". J Sex Med (Wiley-Blackwell/International Society for Sexual Medicine) 5 (8): 1915–22. doi:10.1111/j.1743-6109.2008.00884.x. பப்மெட்:18547388. http://www3.interscience.wiley.com/journal/120126356/abstract.
- ↑ Morof, D; Barrett G; Peacock J; Victor CR; Manyonda I (2003). "Postnatal depression and sexual health after childbirth". Obstet Gynecol (Elsevier) 102 (6): 1318–25. doi:10.1016/j.obstetgynecol.2003.08.020. பப்மெட்:14662221. https://archive.org/details/sim_obstetrics-and-gynecology_2003-12_102_6/page/1318.
- ↑ Thompson, Dennis (August 1, 2013). "New Dads' Interest in Sex Often Drops: Study". HealthDay News. https://www.webmd.com/men/news/20130801/new-dads-interest-in-sex-often-drops-after-childbirth-study.
வெளி இணைப்புகள்
தொகு- Delvin, David; Christine Webber (18 November 2008). "Sex after giving birth". netdoctor. பார்க்கப்பட்ட நாள் 2009-08-06.
- "Info Centre – Sex after pregnancy". National Childbirth Trust. 2008. Archived from the original on 2009-07-03. பார்க்கப்பட்ட நாள் 2009-08-07.
- Hodges, Felicia. "Sex after baby". PregnancyToday. Archived from the original on 2009-06-06. பார்க்கப்பட்ட நாள் 2009-08-06.
- "Video: What men think about sex after birth". askamum.co.uk. Archived from the original on 2009-08-19. பார்க்கப்பட்ட நாள் 2009-08-06.
- "Video: Sex problems after child birth". askamum.co.uk. Archived from the original on 2009-08-17. பார்க்கப்பட்ட நாள் 2009-08-06.
- Williams, Sally (30 September 1996). "Why different sex might mean better sex". The Independent. https://www.independent.co.uk/life-style/why-different-sex-might-mean-better-sex-1365732.html. பார்த்த நாள்: 2009-08-06.