மகரிசி வால்மீகி சமசுகிருத பல்கலைக்கழகம்

அரியானாவில் உள்ள பல்கலைக்கழகம்

மகரிசி வால்மீகி சமசுகிருத பல்கலைக்கழகம் (Maharishi Valmiki Sanskrit University) என்பது 2018ஆம் ஆண்டில் அரியானா அரசாங்கத்தால் இந்தியாவின் கைத்தல் மாவட்டத்தில் உள்ள முந்திரி கிராமத்தில் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம் ஆகும். இது கைத்தலிலிருந்து 12 கி. மீ. தொலைவில் கிழக்குப் பகுதியில் உள்ளது. தலைநகர் சண்டிகரிலிருந்து111 கி. மீ. தொலைவிலும், ஹிசாரில் இருந்து 145 கி. மீ. தொலைவிலும் தேசிய தலைநகர் வலயத்திலிருந்து (புது தில்லி) 164 கி. மீ. தொலைவிலும் உள்ளது.

மகரிசி வால்மீகி சமசுகிருத பல்கலைக்கழகம்
வகைஅரசு பல்கலைக்கழகம்
உருவாக்கம்15 மார்ச் 2018
வேந்தர்அரியான ஆளுஞர்
துணை வேந்தர்இராஜ் குமார் மித்தல்
பதிவாளர்யசுவீர் சிங்
அமைவிடம், ,
India

29°46′48″N 76°29′49″E / 29.7800782°N 76.4968371°E / 29.7800782; 76.4968371
வளாகம்முந்திரி
சுருக்கப் பெயர்MVSU
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

வரலாறு

தொகு

2018 மார்ச் மாதத்தில் இந்தப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான சட்டம் அரியானா சட்டமன்றத்தில்நிறைவேற்றப்பட்டது.[1] இந்த பல்கலைக்கழகத்தினை நிறுவுவதற்கான யோசனையினை 2015-ல் அன்றைய அரியான முதல்வர் மனோகர் லால் கட்டார் முன்மொழிந்தார்.[2][3] இது அரியானா சட்டம் எண். 20 ஓஎப் 2018 மூலம் நிறுவப்பட்டது.[1][4] இது இராமாயணத்தினை (கிமு 500 முதல் கிமு 100 வரை),[5][6][7] இயற்றிய இராமரின் சமகாலத்தவர் எனப் போற்றப்பட்ட இந்து முனிவர், புகழ்பெற்ற சமசுகிருத இலக்கிய ஆசிரியர் வால்மீகி[3] நினைவாகப் பெயரிடப்பட்டது. வால்மீகி ஆதி கவி, முதல் கவிஞர், இராமாயணத்தின் ஆசிரியர், என்ற பெருமையினைப் பெறுகிறார்.

அரியானா மாநிலத்தில் 24க்கும் மேற்பட்ட சமசுகிருத கல்லூரிகள் இளங்கலை பட்டத்திற்குச் சமமான கல்வியை வழங்குகின்றன. கூடுதலாக முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களை சமசுகிருதத்தில் குருக்ஷேத்ரா பல்கலைக்கழகம் மற்றும் மகரிஷி தயானந்த பல்கலைக்கழகம் வழங்குகின்றன.[8]

பல்கலைக்கழகம்

தொகு

நோக்கங்கள்

தொகு

சமசுகிருதம், சமசுகிருதப் புத்துயிர்ப்பு, வேதம், இந்திய மொழிகள், இந்தியாவின் பண்பாடு மற்றும் இந்திய மெய்யியல் ஆகியவற்றில் ஆராய்ச்சிக்காகக் கற்பித்தல் மற்றும் இணைவுப் பல்கலைக்கழகமாக இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது.[1]

ஆகஸ்ட் 2018-ல் மீண்டும் பொறுப்பேற்ற பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரான முனைவர் சிரேயான்ஷ் திவேதி, அரியானாவில் உள்ள அனைத்து 70 குருகுலங்களும் சமசுகிருத படிப்புகளைக் கற்பிப்பதற்காகப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்படும் என்று கூறினார்.[9]

வளாகம்

தொகு

பல்கலைக்கழகம் தற்போது கைத்தலில் உள்ள பி. ஆர். அம்பேத்கர் அரசு கல்லூரியில் உள்ள தற்காலிக வளாகத்திலிருந்து செயல்படுகிறது. இப்பல்கலைக்கழகத்திற்கான கட்டடங்கள் அதன் வளாகம் முந்திரி கிராமத்தில் கட்டப்பட்டு வருகிறது.[9]

மாணவர் சேர்க்கை

தொகு

2019-20 கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கைத் தொடங்கியது.[9]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Maharishi Valmiki Sanskrit University to be set up at Kaithal, Business Standard, 15 Mar 2018.
  2. Sanskrit University to be set up in Kaithal: Manohar Lal Khattar, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 21 Feb 2017.
  3. 3.0 3.1 Khattar announces scholarships, Sanskrit university for SCs, தி இந்து, 24 Oct 2015
  4. -Haryana announces Sanskrit university[தொடர்பிழந்த இணைப்பு], Jagranjosh.
  5. "Sri Aurobindo on the Indian Epic Ramayana" (PDF). uwf.edu. University of West Florida. p. 2. பார்க்கப்பட்ட நாள் 27 April 2015. read end paragraph of page 2
  6. "harking back : Myths and facts of the beginnings of Lahore".
  7. Goldman, Robert P., The Ramayana of Valmiki: An Epic of Ancient India pp. 23
  8. Haryana in Sanskrit Studies In India, Rashtriya Sanskrit Sansthan.
  9. 9.0 9.1 9.2 Sanskrit University set up in Kaithal, Uni India, Aug 2018.