மகாராஜாதிராஜ் உதய் சந்த் மகளிர் கல்லூரி
மஹாராஜாதிராஜ் உதய் சந்த் மகளிர் கல்லூரி, அல்லது எம் யு சி (MUC) மகளிர் கல்லூரி என அழைக்கப்படும் இக்கல்லூரி 1955 ஆம் ஆண்டு ஜூலை 28 ல் வர்த்தமானில் நிறுவப்பட்ட, [1] ஒரு பெண்கள் கல்லூரி ஆகும்.
வகை | இளங்கலைக்கான பொதுக்கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1955 |
சார்பு | பர்த்வான் பல்கலைக்கழகம் |
முதல்வர் | முனைவர் பனிப்ரதா கோஸ்வாமி |
அமைவிடம் | , , 713104 , 23°14′21″N 87°51′06″E / 23.2390778°N 87.8515389°E |
வளாகம் | நகர்ப்புறம் |
மொழி | வங்காளம் |
இணையதளம் | கல்லூரி இணையதளம் |
படிமம்:Maharajadhiraj Uday Chand Women's College logo.png |
கலை மற்றும் அறிவியலில் இளங்கலை படிப்புகளும் ஆங்கிலத்தில் முதுகலை படிப்புகளும் வழங்கும் இக்கல்லூரி, முதலில் கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. பின்னர் 1960 ஆம் ஆண்டில் பர்த்வான் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டபோது, இக்கல்லூரியும் புதிதாக நிறுவப்பட்ட பர்த்வான் பல்கலைக்கழகத்தோடு இணைந்த கல்லூரிகளில் ஒன்றாக மாறியது. பின்னர், 2005 ஆம் ஆண்டு கல்லூரியில் ஆங்கிலத்தில் முதுகலை படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டபோது, அது பர்த்வான் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான கல்லூரியாக மாறியது. [2]
வரலாறு
தொகுஇந்த கல்லூரிக்கு தேவையான நிலத்தை பரிசளித்ததோடு அதற்காக மகாராஜாதிராஜ் உதய் சந்த் மஹாதாப் தனது அரண்மனையையும் கொடுத்துள்ளார். மேலும் அரண்மனையுடன் இணைந்து அஞ்சுமன் கச்சாரியின் ஒரு பகுதியும் கல்லூரிக்கு பரிசாக வழங்கப்பட்டது. இதற்கு நன்றி செலுத்தும் வண்ணமாகவே இக்கல்வி நிறுவனத்திற்கு பர்த்வானின் முன்னாள் ராஜா, மஹாராஜாதிராஜ் உதய் சந்த் மஹாதாப்பின் பெயரிடப்பட்டுள்ளது.
துறைகள்
தொகுதற்போது கல்லூரியில் கீழ்க்கண்ட பாடப்பிரிவுகள் கற்பிக்கப்படுகின்றன
அறிவியல் பிரிவு
தொகு- வேதியியல் கௌரவப்பட்டம்
- இயற்பியல் கௌரவப்பட்டம்
- கணிதம் கௌரவப்பட்டம்
- தாவரவியல் கௌரவப்பட்டம்
- விலங்கியல் கௌரவப்பட்டம்
- கணினி அறிவியல்
- மைக்ரோபயாலஜி கௌரவப்பட்டம்
- ஊட்டச்சத்து கௌரவப்பட்டம்
- இளங்கலை பொது (தூய & உயிரியல்)
கலைப்பிரிவு
தொகு- பெங்காலி கௌரவப்பட்டம்
- ஆங்கில கௌரவப்பட்டம்
- சமஸ்கிருத கௌரவப்பட்டம்
- வரலாறு கௌரவப்பட்டம்
- புவியியல் கௌரவப்பட்டம்
- அரசியல் அறிவியல் கௌரவப்பட்டம்
- தத்துவம் கௌரவப்பட்டம்
- பொருளாதாரம் கௌரவப்பட்டம்
- பிஏ ஜெனரல்
2015 இல் கல்லூரி இளங்கலை மேலாண்மை படிப்பிற்கான இணைப்பையும் பெற்றுள்ளது 2016-17 கல்வி அமர்வில் இருந்து அறிவியல் பாடத்திலும் முதுகலை படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. 2004-05 இல் கல்லூரி தனது பொன்விழாவையும், வைர விழா 2014-15 ஆம் ஆண்டிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது.
அங்கீகாரம்
தொகுஇந்த கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [1] மட்டுமல்லாமல் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலால் (NAAC) இருமுறை மறு அங்கீகாரம் பெற்றதோடு B + தரம் வழங்கப்பட்டுள்ளது.[3] பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் ஒவ்வொரு ஆண்டும் இக்கல்லூரி மாணவர்களின் பெயர் முதன்மையாக இடம் பெற்றுவருகிறது.
ராஷ்ட்ரிய உச்சதர் ஷிக்ஷா அபியான் (RUSA) கீழ் நிதியுதவி பெற தகுதியுடைய மேற்குவங்கத்தின் கல்லூரிகளில் இந்தக் கல்லூரியும் ஒன்றாகும். தற்போது உள்ள முழுநேர ஆசிரியர்களாக 55 (இரண்டு நூலகர்கள் உட்பட) பேரும், பகுதிநேர ஆசிரியர்களாக 14 பேரும், 30 பேருக்கு மேல் அலுவலகப்பணியாளர்களும், 7 விடுதி பணியாளர்கள் மற்றும் 12க்கும் மேற்பட்டோர் தற்காலிக அடிப்படையில் பணிபுரிகின்றனர். வங்காளப் பெண் கல்வியின் மூன்று முக்கியமானவர்களான ரோகியா, ஸ்வர்ணகுமாரி மற்றும் சரளா ஆகியோரின் பெயரால் இக்கல்லூரி விடுதிகளுக்கு பெயரிடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 [தொடர்பிழந்த இணைப்பு] Colleges in West Bengal, University Grants Commission
- ↑ "Affiliated College of University of Burdwan". Archived from the original on 2021-01-25. பார்க்கப்பட்ட நாள் 2024-02-07.
- ↑ "Institutions Accredited/ Re- accredited by NAAC whose accreditation validity period is over" இம் மூலத்தில் இருந்து 12 May 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120512054834/http://www.naac.gov.in/sites/naac.gov.in/files/Validity_expired_institutions.pdf.