மகாலெட்சுமி கோயில், மும்பை
மகாலெட்சுமி கோயில் (Mahalaxmi Temple), இந்து சமயத்தின் பெண் தெய்வமான இலக்குமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். இக்கோயிலை தெற்கு மும்பையில் உள்ள பூலாபாய் தேசாய் மார்க், மகாலெட்சுமி மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலை 1831ல் தாக்ஜி தாதாஜி என்பவரால் நிறுவப்பட்டது. இக்கோயிலை மகாலெட்சுமி கோயில் அறக்கட்டளையினர் நிர்வாகம் செய்கின்றனர். இக்கோயிலில் உப-தெய்வங்களான மகாகாளி, சரசுவதி சன்னதிகள் உள்ளது. இக்கோயிலின் முக்கிய நாட்கள் லட்சுமி பூஜை, நவராத்திரி, தீபாவளி, குடீ பாடவா ஆகும்.
மகாலெட்சுமி கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | மகாராட்டிரம் |
மாவட்டம்: | தெற்கு மும்பை |
அமைவு: | பூலாபாய் தேசாய் மார்க், மகாலெட்சுமி மேற்கு, கும்பல்லா குன்று |
ஆள்கூறுகள்: | 18°58′39″N 72°48′23″E / 18.9774°N 72.8065°E |
கோயில் தகவல்கள் | |
வரலாறு | |
அமைத்தவர்: | தாக்ஜி தாதாஜி |
கோயில் அறக்கட்டளை: | மகாலெட்சுமி கோயில் அறக்கட்டளை |
இணையதளம்: | mahalakshmi-temple |