மும்பையின் காலக்கோடுகள்

மும்பையின் காலக்கோடுகள் (Time lines of Mumbai), மும்பையின் வரலாறு கிமு 600 ஆண்டுகள் முதல் அறியப்படுகிறது.

18ஆம் நூற்றாண்டு வரை

தொகு

19ஆம் நூற்றான்டு

தொகு
 
1888ல் மும்பை
 
1890ல் மும்பை
  • 1801 – பிரபாதேவி பகுதியில் சித்தி விநாயகர் கோயில் நிறுவப்பட்டது.
  • 1803 – மும்பையில் நெருப்பு பிடித்தது.[3]
  • 19 சூன் 1810 – எச் எம் எஸ் மிந்தேன் போர்க்கப்பல் மும்பையில் கட்டப்பட்டது.[4]
  • 1822 – குஜராத்தி மொழியில் பம்பாய் சமாச்சார் எனும் நாளிதழ் வெளியிடப்பட்டது.
  • 1838 – முதல் வணிக இதழான மும்பை டைம்ஸ் வெளியானது.
  • 1845 – பெரிய மருத்துவக் கல்லூரி மற்றும் ஜாம்செட்ஜி-ஜீஜீபாய் குழும மருத்துவமனைகள் நிறுவப்பட்டது.[5]
  • 1846 –சால்சேட் தீவு-மாகிம் இணைப்புச் சாலை போடப்பட்டது.
  • 16 ஏப்ரல் 1853 – மும்பை-தானே இடையே, முதல் இருப்புப்பாதை போடப்பட்டு, தொடருந்து சேவைகள் தொடங்கியது.
  • 1854 – முதல் பருத்தி ஆலை நிறுவப்பட்டது.
  • 1857 – மும்பை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
  • 1858 – இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் சீன பட்டய வங்கியின் மும்பை கிளை திறக்கப்பட்டது.
  • 1864 – பரோடா மற்றும் மத்திய இரயில்வேக்கள் மும்பை வரை சேவைகள் தொடங்கியது.
  • 1870 – மும்பை துறைமுக அறக்கட்டளை அமைக்கப்பட்டது..
  • 1874 – மும்பை துறைமுகப் பகுதியில் செயிண்ட் பீட்டர்ஸ் பள்ளி நிறுவப்பட்டது.
  • 1885 – இந்திய தேசிய காங்கிரசு கட்சி நிறுவப்பட்டது.
  • 1887 – விக்டோரியா தொழில்நுட்ப மையம் (1887–1997) நிறுவப்பட்டது.
  • 1888 – பெருநகரமும்பை மாநகராட்சி நிறுவப்பட்டது.
  • 1893 – இந்து-முஸ்லீம் கலவரங்கள் தொடங்கியது.
  • 1896 –கொள்ளைநோய்க்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1897 – பார்ஸ்டெர் கிராம்டன் கிரீவ்ஸ் என்பவர் பெட்ரோலில் ஓடும் வாகனத்தை இந்தியத் துணை கண்டத்திற்கு அறிமுகப்படுத்தினார்.
  • 1899 – மும்பையில் கொள்ளைநோய் பரவியது.[6]

20ஆம் நூற்றாண்டு

தொகு
  • 1900 – மேற்கு இரயில்வே சார்பில் மும்பையிலிருந்து பல திசைகளில் 45 இரயில்கள் இயக்கப்பட்டது.
  • 1911 – இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் இராணி மேரி மும்பை நகரத்திற்கு இந்தியாவின் நுழைவாயில் வழியாக வருகை புரிந்தனர்.
  • 1912 – மன்னர் ஜார்ஜ் ஆங்கிலப் பள்ளி தாதரில் நிறுவப்பட்டது.[7]
  • 1913 – வணிகக் கல்விக்கான சிடென்கம் கல்லூரி நிறுவப்பட்டது.
  • 12 சனவரி 1915 – மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு மும்பை வழியாக வந்தடைந்தார்.
  • 22 சனவரி 1926 –சேட் கோர்தன்தாஸ் சுந்தர்தாஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மன்னர் எட்வர்டு நினைவு மருத்துவமனை துவக்கப்பட்டது.
  • 15 சூலை 1926 – இந்தியாவில் முதல் மோட்டார் பேருந்துகள் மும்பையில் இயக்கப்பட்டது.
  • 1928 – முதல் மின்சார இரயில் சர்ச்கேட்- போரிவலி வரை இயக்கப்பட்டது.
  • 1930 – மும்பை கிரிக்கெட் சங்கம் தொடங்கப்பட்டது.
  • 15 அக்டோபர் 1932 – ஜெ. ர. தா. டாட்டா, கராச்சியிலிருந்து அகமதாபாத் வழியாக மும்பை வரை விமானம் ஓட்டி வந்தார். இதுவே இந்தியாவில் விமானப் போக்குவரத்திற்கு வித்திட்டது.
  • 1 அக்டோபர் 1933 – வேதியியல் தொழில் நுட்ப நிறுவனம் நிறுவப்பட்டது.[8]
  • 1934 –காங்கிரசு சோசலிசக் கட்சி நிறுவப்பட்டது.[9]
  • 1940 – நிலச் சீரமைப்பு செய்து நாரிமன் பாயிண்ட் பகுதி உருவாக்கப்பட்டது.
  • 8 ஆகஸ்டு 1942 –மும்பையில் கூடிய காங்கிரசு மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் அறிவிக்கப்பட்டது..
  • 14 ஏப்ரல் 1944 – மும்பை துறைமுகத்தில் வெடித்த குண்டுகளால் பலர் கொல்லப்பட்டனர்[10]
  • 21 நவம்பர் 1955 - சம்யுக்த மகாராஷ்டிரா சமிதி உறுப்பினர்கள் நடத்திய போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி & துப்பாக்கிச் சூட்டில் 105 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1958 – இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை தொடங்கப்பட்டது.
  • 1 மே 1960 – புதிய மகாராட்டிரம் மாநிலத்தின் தலைநகராக மும்பை அறிவிக்கப்பட்டது.
  • 31 மார்ச் 1964 – போரி பந்தர் முதல் தாதர் வரை இயக்கப்பட்ட டிராம் சேவைகள் நிறுத்தப்பட்டது.
  • சனவரி,1982 – தத்தா சமந்த் தலைமையில் பெரிய பாம்பே ஜவுளி வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டது.
  • டிசம்பர் 1992 – சனவரி 1993 –இந்து-முஸ்லீம்களிடையே ஏற்பட்ட மும்பை கலவரங்களில் 2,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
  • 1993 – 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்புகளில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1995 – பம்பாயின் பெயர் மும்பை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

21ஆம் நூற்றாண்டு

தொகு
 
தாதர் கடற்கரை அருகே பாந்த்ரா-வொர்லி இணைப்பு கடல் பாலம்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Agri (caste)
  2. "Marriage Customs of Christian Son Kolis". Archived from the original on 2021-11-17.
  3. Schellinger and Salkin, ed. (1996). "mumbai". International Dictionary of Historic Places: Asia and Oceania. UK: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781884964046.
  4. HMS Minden (1810)
  5. Grant Medical College and Sir Jamshedjee Jeejeebhoy Group of Hospitals
  6. Bombay plague epidemic
  7. "I.E.S. Raja Shivaji Vidyalaya". www.iesrsv.com. பார்க்கப்பட்ட நாள் 2016-12-12.
  8. Ṭikekara, Aruṇa (2006). The Cloister's Pale: A Biography of the University of Mumbai (in ஆங்கிலம்). Popular Prakashan. p. 198. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7991-293-5. பார்க்கப்பட்ட நாள் 12 June 2020.
  9. James C. Docherty; Peter Lamb (2006). "Chronology". Historical Dictionary of Socialism (2nd ed.). Scarecrow Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8108-6477-1.
  10. 1944 Bombay explosion
  11. "Blast outside Ghatkopar station in Mumbai, 2 killed". rediff.com India Limited. 6 December 2002. http://www.rediff.com/news/2002/dec/02mum.htm. பார்த்த நாள்: 26 March 2012. 
  12. Mumbai, Vijay Singh in. "Blast near Vile Parle station in Mumbai". Rediff (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-15.
  13. Asthana, N. C.; Nirmal, A. (2009). Urban Terrorism : Myths And Realities. Pointer Publishers. p. 180. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788171325986.
  14. Mumbai, Vijay Singh & Syed Firdaus Ashraf in. "Blast in Ghatkopar in Mumbai, 4 killed". Rediff (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-13.
  15. "Death for three in 2003 Mumbai bomb blasts case". தி இந்து (Chennai, India). 7 August 2009 இம் மூலத்தில் இருந்து 9 August 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090809143518/http://www.hindu.com/2009/08/07/stories/2009080757860100.htm. 
  16. Bhalerao, Sanjana (2014-09-09). "Shiv Sena's Snehal Ambekar elected Mumbai's new mayor". Hindustan Times இம் மூலத்தில் இருந்து 20 October 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141020052410/http://www.hindustantimes.com/india-news/mumbai/shiv-sena-s-snehal-ambekar-elected-mumbai-s-new-mayor/article1-1262009.aspx. பார்த்த நாள்: 18 June 2015. 
  17. "Speed limit 100 km/hr, no bikes and autos: All about India's longest sea bridge". India Today (in ஆங்கிலம்). 2024-01-11. பார்க்கப்பட்ட நாள் 2024-08-15.
  18. "Atal Setu, India's longest bridge news: PM Modi to inaugurate Mumbai Trans Harbour Link today". www.livemint.com. 2024-01-12. பார்க்கப்பட்ட நாள் 2024-08-16.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
History of Mumbai
என்பதில் ஊடகங்கள் உள்ளன.