மக்கபேயர்கள்
மக்கபேயர்கள் (Maccabees), எலனியக் காலத்தில், யூதேயா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை செலூகிக்கியப் பேரரசிடமிருந்து கிளர்ச்சிகள் மூலம் கைப்பற்றி மக்கபேய அரசை நிறுவிய யூத போர் வீரர்கள் ஆவார். .[1][2] இந்த மக்கபேய யூதர்கள் மக்கபேய அரசை கிமு 140 முதல் கிமு 37 முடிய ஆட்சி செய்தனர்.[3]
வரலாறு
தொகுமேற்காசியாவை ஆட்சி செய்த பண்டைய கிரேக்க செலூகிக்கியப் பேரரசர் அந்தியோகஸ் IV எபிபேன்ஸ் (கிமு 175- 164) ஆட்சிக் காலத்தில், எருசலேத்தில் யூத மத குரு ஜேசன் இருந்தார்.[4] யூதேயாவின் ஆளுநர் மூன்றாம் ஒனியசை பதவியிலிருந்து நீக்கி, மெனலாஸ் என்ற யூதரை நியமித்தார் பேரரசர் அந்தியோகஸ்.
இதனால் மெனெலாஸ் ஓனியாசை படுகொலை செய்ததுடன், மெனலாசின் சகோதரர் லிசிமாச்சஸ் சாலமன் கோவிலிலின் புனித பாத்திரங்களை திருடினார். ஓனியாசின் கொலைக்காக மெனலாஸ் கைது செய்யப்பட்டார் மற்றும் பேரரசர் அந்தியோகஸ் முன் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால் அவர் சிக்கலில் இருந்து வெளியேற கையூட்டு கொடுத்தார். யூத மத குரு ஜேசன் மெனலாஸை ஆளுநர் பதவியிலிருந்து வெளியேற்றிவிட்டு மீண்டும் பிரதான ஆசாரியரானார். கிமு 168ஆம் ஆண்டில் செலுக்கியப் பேரரசர் மூன்றாம் அந்தியோகஸ் (ஆட்சிக் காலம் கிமு 223–187) சாலமோனின் கோயிலைக் கொள்ளையடித்ததுடன், எருசலேமைத் தாக்கி, பெண்களையும் குழந்தைகளையும் சிறைப்பிடித்தார்.
இதனால் யூதேயா பகுதியில் மக்கபேய யூதர்கள், கிரேக்க செலூகிக்கியப் பேரரசுக்கு எதிராக பெரும் கிளர்ச்சி செய்து, யூதேயாவில் மக்கபேய அரசை நிறுவினர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Cohn, Marc (2007). The Mathematics of the Calendar. Lulu.com. p. 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1430324966.
- ↑ Fischer-Lichte, Erika (2005). Theatre, Sacrifice, Ritual: Exploring Forms of Political Theatre. Routledge. pp. 195. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0415276757.
- ↑ Wessels, Anton; Jansen, Henry; Hofland, Lucy (2020). The Grand Finale: The Apocalypse in the Tanakh, the Gospel, and the Qur'an. Wipf and Stock Publishers. p. 150. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-7252-7601-7.
The Hasmonean dynasty ruled Judea from the Maccabean revolt in 167 BC until 37 BC.
- ↑ Oesterley, W.O.E., A History of Israel, Oxford, Clarendon Press, 1939.
மேலும் படிக்க
தொகு- Bickerman, Elias J. 1979. The God of the Maccabees: Studies on the Meaning and Origin of the Maccabean Revolt. Leiden, The Netherlands: Brill.
- Cohen, Shaye J. D. 1987. From the Maccabees to the Mishnah. Philadelphia: Westminster.
- Grabbe, Lester L. 2010. An Introduction to Second Temple Judaism: History and Religion of the Jews in the Time of Nehemiah, the Maccabees, Hillel, and Jesus. London: T & T Clark.
- Harrington, Daniel J. 1988. The Maccabean Revolt: Anatomy of a Biblical Revolution. Wilmington, Delaware: Michael Glazier.
- Johnson, Sara Raup. 2004. Historical Fictions and Hellenistic Jewish Identity: Third Maccabees In Its Cultural Context. Berkeley: University of California Press.
- Stewart, Tyler A. (18 April 2017). "Jewish Paideia: Greek Education in the Letter of Aristeas and 2 Maccabees". Journal for the Study of Judaism 48 (2): 182–202. doi:10.1163/15700631-12340146.
வெளி இணைப்புகள்
தொகு- Jewish Encyclopedia: Maccabees, The
- Meistermann, Barnabas (1910). "Jerusalem (Before A.D. 71)". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்) 8. நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
- Fairweather, William (1911). "Maccabees". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 17. 197–198.