மங்குசுத்தான்

Purple Mangosteen
Illustration from "Fleurs, Fruits et Feuillages Choisis de l'Ile de Java" 1863-1864 by Berthe Hoola van Nooten (Pieter De Pannemaeker lithographer)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Malpighiales
குடும்பம்:
Clusiaceae
பேரினம்:
Garcinia
இனம்:
G. mangostana
இருசொற் பெயரீடு
Garcinia mangostana
L.

கடார முருகல் (மங்குசுத்தான் அல்லது மங்குஸ்தீன்- மலேசியத் தமிழ்) (தாவரவியல் பெயர்:Garcinia mangostana, ஆங்கிலம்:mangosteen), வெப்பவலயத்துக்குரிய என்றும் பசுமையான தாவரம் ஆகும். இது சுண்டாத் தீவு மற்றும் இந்தோனேசியாவின் மொலாக்கா பகுதியைத் தாயகமாகக் கொண்டது. இம்மரம் 7 முதல் 25 m (20–80 ft) உயரனானது. மங்குசுத்தான் பழம் (உள்ளோட்டுச் சதயம்) இனிப்பும் இலேசான புளிப்பும் கொண்டதாகவும் சாற்றுத்தன்மையும் சிறிதளவும் நார்த்தன்மையுமுள்ள பழமாகவும் காணப்படும் இது வெள்ளை நிறமுடையது. பழத்தின் சுற்றுக்கனியம் கருங்கபில நிறமானது. இது உண்ணப்படுவதில்லை.[1] பழத்தின் உள்ளாக இருவித்திலை வித்து காணப்படும்[2]

இலங்கையில் மங்குசுத்தான்

தொகு

இலங்கையில் தாழ்நில ஈரவலயத்தைச் சேர்ந்த களுத்துறை, கம்பகா, கொழும்பு, காலி ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் கேகாலை, கண்டி மாவட்டங்களில் சில பகுதிகளிலும் மங்குசுத்தான் பயிரிடப்படுகிறது. பொதுவாக வீட்டுத்தோட்டப் பயிராகவே இது செய்கை பண்ணப்படுகிறது.

சுற்றுக்கனியமும் உண்ணப்படும் உள்ளோட்டுச் சதயமும்

தொகு

கருக்கட்டப்படாத பூவிலிருந்தே காயுருவாகும். காய் இளம் பச்சை நிறமாகக் காணப்படும். மரத்தின் அங்குரத்தின் கீழ் காணப்பட்டால் வெள்ளை நிறத்தில் இருக்கும். அடுத்து வரும் இரண்டு மூன்று மாதங்களில் சுற்றுக்கனியம் கடும்கபில நிறத்துக்கு மாறும். உள்ளோட்டுச் சதயம் உண்ணப்படும் பகுதியாகத் திரிபடையும். 6-8 சதம மீட்டர் விட்ட அளவு கொண்டதாக பழம் மாறும் பருவம் பழுப்பதற்குத் தயாராகும் பருவமாகும்.

போசணை மற்றும் வேதியியல் கூறுகள்

தொகு
மங்குசுத்தான்,
பிரித்தெடுக்கப்பட்ட சாற்றுப் பொதி
உணவாற்றல்305 கிசூ (73 கலோரி)
18 g
நார்ப்பொருள்1.8 g
0.6 g
0.4 g
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(1%)
10 மிகி
இரும்பு
(2%)
0.2 மிகி
பாசுபரசு
(3%)
20 மிகி
நீர்81 g
சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

மங்குசுத்தானில் உண்ணப்படும் பகுதியான உள்ளோட்டுச்சதயம் பிரதான போசனைக் கூறுகளைக் கொண்டிருக்கவில்லை.[3]

 
மங்குசுத்தான் மரம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Mangosteen: Sweet, Tangy, Delicious". Exotic Fruit For Health. 26 August 2011. Archived from the original on 30 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 22 October 2011.
  2. Mabberley, D.J. 1997. The plant book: A portable dictionary of the vascular plants. Cambridge University Press, Cambridge.
  3. Mangosteen nutrient information
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்குசுத்தான்&oldid=4175487" இலிருந்து மீள்விக்கப்பட்டது