மஞ்சள் கீளி
மஞ்சள் கீளி அல்லது பார்க்கீளி (Lutjanus fulvus) என்பது அக்டினோட்டெரிகீயை மீனின் ஒரு இனமாகும். இது கொண்டல் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஸ்னாப்பர் மீனாகும். இது இந்தோ மேற்கு பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்தது. அந்த எல்லைக்குள் பிடிக்கப்படும் முக்கியமான மீன் இதுவாகும்.
மஞ்சள் கீளி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Lutjanus |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/LutjanusL. fulvus
|
இருசொற் பெயரீடு | |
Lutjanus fulvus (Forster, 1801) | |
வேறு பெயர்கள் [2] | |
|
விளக்கம்
தொகுமஞ்சள் கீளியின் முதுகுத் துடுப்பில் 10 முதுகு துடுப்பு முட்கள் மற்றும் 14 மென்மையான கதிர்கள் இருக்கும். குதத் துடுப்பில் 3 முட்கள் மற்றும் 8 மென்மையான கதிர்கள் உள்ளன. [2] இந்த இரண்டு துடுப்புகளின் பின்புறமானது வட்டமாக இருக்கும். மார்பு துடுப்புகள் 16 கதிர்கள் கொண்டிருக்கும், வால் துடுப்பு சற்று உட்குவிந்து இருக்கும். [3] இந்த மீன் அதிகபட்சமாக 40 செமீ (16 அங்குலம்) நீளத்தை அடைகின்றன. இருப்பினும் பொதுவாக 25 செமீ (9.8 அங்குலம்) வரை காணப்படுகின்றன. [2] இந்த இனத்திற்கு பழுப்பு கலந்த வெளிர் மஞ்சள் உடலும், சிவப்பு நிறம் கலந்த கருநிற வாலும் முக்கிய அடையாளமாக உள்ளளது. இதன் முதுக் தூவிகளின் முனைகள் கருமையாகவும், கீழ் தூவி, வால் தூவி, பக்கத் தூவிகள் மஞ்சளாகவும் இருக்கும். இதன் செதில்கள் பழுப்பு நிறத்தில் இருந்து மஞ்சள் நிற விளிம்புகளைக் கொண்டிருக்கின்றன. மேலும் கண்ணின் மேல் ஒரு மஞ்சள் திட்டு உள்ளது. இதன் குஞ்சுகளின் மஞ்சள் நிற உடலில் கிடைமட்டமாக நீல நிறக்கோடுகள் காணப்படும். மேலும் முதுகுத் துடுப்பின் விளிம்பிற்குக் கீழே ஒரு கருப்பு பட்டையைக் கொண்டிருக்கும். [4]
பரவலும், வாழ்விடமும்
தொகுமஞ்சள் கீளிகள் இந்தோ பசிபிக் கடல் பகுதியில் பரவலாக உள்ளன. இது ஏடன் வளைகுடா மற்றும் கிழக்கு ஆபிரிக்காவிலிருந்து தெற்கே தென்னாப்பிரிக்கா வரை இந்தியப் பெருங்கடல் வழியாக காணப்படுகிறது, ஆனால் இது பாரசீக வளைகுடாவில் இருந்து கிழக்கே மார்க்கெசசுத் தீவுகள் மற்றும் லைன் தீவுகள் வரை இல்லை. இது வடக்கே யப்பான் முதல் தெற்கே ஆத்திரேலியா வரை காணப்படுகிறது. [1] ஆத்திரேலியாவில் இது மேற்கு ஆஸ்திரேலியாவின் ஸ்காட் ரீஃப் மற்றும் திமோர் கடலில் உள்ள ஆஷ்மோர் கார்ட்டியர் தீவுகள் முதல் சிட்னி வரை காணப்படுகிறது. இவை கிறிஸ்துமசு தீவு மற்றும் கோகோஸ் (கீலிங்) தீவுகள் மற்றும் மாஸ்மான் கடலில் உள்ள நோர்போக் தீவிலும் காணப்படுகின்றன. [4] 1950 களில் ஹவாய் மீன் மற்றும் விளையாட்டுப் பிரிவு மஞ்சள் கீளிகளை பேர்ள் துறைமுகம் மற்றும் ஓஹூவில் விடுவித்தது, இது இப்போது அவாயித் தீவுகள் முழுவதும் காணப்படுகிறது, என்றாலும் மிகுதியாக இல்லை. [5] இவை 2 முதல் 75 மீ (6 அடி 7 முதல் 246 அடி 1 அங்குலம் வரை) ஆழத்தில் உள்ளன. மேலும் இவை பவழப் பாறைகளின் ஆழப்பொந்துகள், பாறைச் செறீவுகளில் வாழ்கின்றன. இதில் குட்டி மீன்கள் எப்போதாவது ஆழமற்ற சதுப்பு நிலங்களிலும் நன்னீர் நீரோடைகளின் கீழ் பகுதிகளிலும் பதிவு செய்யப்படுகின்றன. [1]
உயிரியல்
தொகுமஞ்சள் கீளி மீன்களானது ஓடுடைய கணுக்காலிகள், கடல் வெள்ளரி, தலைக்காலிகள் போன்றவற்றை இரவு நேரங்களில் வேட்டையாடும். யப்பானின் யாயாமா தீவுகளில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இந்த மீன்களில் வயது முதிர்ந்தது 34 வயதில் உள்ளது என்றும், பெரும்பாலான மீன்கள் 3 வயதுக்கு மேற்பட்டவை என்றும் கண்டறியப்பட்டது. இவை சராசரியாக 22.5 செமீ (8.9 அங்குளம்) நீளத்தில் பாலியல் முதிர்ச்சி அடைகின்றன. பெண் மீன்கள் சுமார் 4 வயதிலும், ஆண் மீன்கள் 20.7 செமீ (8.1 அங்குளம்), 3 வயதிலும் பாலியல் முதிர்ச்சி அடைகின்றன. இவை ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் அப்பகுதியில் முட்டையிடுவதாக என்று கருதப்படுகிறது. [1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Russell, B.; Smith-Vaniz, W.F.; Lawrence, A.; Carpenter, K.E.; Myers, R. (2016). "Lutjanus fulvus". IUCN Red List of Threatened Species 2016: e.T194377A2325959. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T194377A2325959.en. https://www.iucnredlist.org/species/194377/2325959. பார்த்த நாள்: 11 June 2021.
- ↑ 2.0 2.1 2.2 வார்ப்புரு:Fishbase
- ↑
{{cite book}}
: Empty citation (help) - ↑ 4.0 4.1 Bray, D.J. (2018). "Lutjanus fulvus". Fishes of Australia. Museums Victoria. பார்க்கப்பட்ட நாள் 11 June 2021.
- ↑ Pam Fuller; Pamela J. Schofield (2021). "Lutjanus fulvus (Forster in Bloch and Schneider, 1801)". Nonindigenous Aquatic Species Database, Gainesville, FL. U.S. Geological Survey. பார்க்கப்பட்ட நாள் 11 June 2021.
வெளி இணைப்புகள்
தொகு- Photos of மஞ்சள் கீளி on Sealife Collection