மஞ்சள் கொண்டைக்குருவி

பறவை இனம்
மஞ்சள் கொண்டைக்குருவி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பைக்னோனோடிடே
பேரினம்:
கைப்சிபெட்சு
இனம்:
கை. எவெரெட்டி
இருசொற் பெயரீடு
கைப்சிபெட்சு எவெரெட்டி
(துவேடேல், 1877)
வேறு பெயர்கள்
  • கிரினிஜெர் எவெரெட்டி Tweeddale, 1877[2]
  • அயோக்சு எவெரெட்டி (துவேடேல், 1877)

மஞ்சள் கொண்டைக்குருவி (Yellowish bulbul-கைப்சிபெட்சு எவெரெட்டி) என்பது கொண்டைக்குருவி குடும்பத்தில், பைக்னோனோடிடேயில் உள்ள பாடும் பறவை சிற்றினமாகும்.

வகைப்பாட்டியல் தொகு

மஞ்சள் கொண்டைக்குருவி முதலில் கிரைனிகர் பேரினத்தின் கீழ் விவரிக்கப்பட்டது. பின்னர் 2010-ல் கைப்சிபெட்சு பேரினத்தில் மறு வகைப்படுத்தப்படுவதற்கு முன்பு இக்சோசு பேரினத்தில் வைக்கப்பட்டது. வரிமார்பு கொண்டைக்குருவியின் மாற்று பெயர்களில் எவரெட்டின் கொண்டைக்குருவி, வெற்று-தொண்டை கொண்டைக்குருவிமற்றும் மஞ்சள் கொண்டைக்குருவி ஆகியவை அடங்கும். இதன் விலங்கியல் பெயர் இங்கிலாந்து காலனித்துவ நிர்வாகி மற்றும் விலங்கு சேகரிப்பாளர் ஆல்பிரட்கார்ட் எவரெட்டை நினைவுகூறுகிறது.

துணை இனங்கள் தொகு

இரண்டு துணையினங்கள் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளன:

  • கை. எவெரெட்டி - (துவீடேல், 1877): கிழக்கு-மத்திய மற்றும் தென்கிழக்கு பிலிப்பீன்சு
  • சுலு கொண்டைக்குருவி (கை. எ. கைனால்டி) - (பிளேசியசு, டபிள்யூ, 1890): முதலில் கிரினிகர் பேரினத்தில் ஒரு தனி சிற்றினமாக விவரிக்கப்பட்டது. சுலு தீவுக்கூட்டத்தில் (தென்மேற்கு பிலிப்பீன்சு) காணப்படுகிறது

கமிகுயின் சூரில் காணப்படும் கமிகுயின் கொண்டைக்குருவி (கை. கேடார்மானென்சிசு) முன்னர் ஒரு துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் சமீபத்திய ஆய்வுகள் இது ஒரு தனித்துவமான இனம் எனக் கண்டறிந்துள்ளன.

பரவல் தொகு

மஞ்சள் கொண்டைக்குருவி பிலிப்பீன்சில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Hypsipetes everetti". IUCN Red List of Threatened Species 2016: e.T103823433A94364608. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103823433A94364608.en. https://www.iucnredlist.org/species/103823433/94364608. பார்த்த நாள்: 17 November 2021. 
  2. Internet Bird Collection. Yellowish Bulbul (Ixos everetti). Accessed 19 November 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_கொண்டைக்குருவி&oldid=3809714" இலிருந்து மீள்விக்கப்பட்டது