மஞ்சள் பள்ளிவாசல்

மேற்கு வங்காளத்திலுள்ள ஒரு பள்ளிவாசல்

மஞ்சள் பள்ளிவாசல் (Yellow Mosque) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள முர்சிதாபாத்தின் அசர்துவாரி அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ளது. இதை சுரூத்து பள்ளிவாசல் என்ற பெயராலும் அழைக்கிறார்கள்.

மஞ்சள் பள்ளிவாசல்
Yellow Mosque
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்முர்சிதாபாத், மேற்கு வங்காளம், இந்தியா
புவியியல் ஆள்கூறுகள்24°11′14″N 88°16′04″E / 24.1873°N 88.2679°E / 24.1873; 88.2679
சமயம்இசுலாம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1756-57
தலைமைநவாபு சிராச் உத் தவ்லா

வரலாறு தொகு

மஞ்சள் பள்ளிவாசல் 1756-57 ஆம் ஆண்டில் நவாப் சிராச் உத்-தௌலாவால் பாகீரதி ஆற்றின் கரையில் உள்ள அசர்துவாரி அரண்மனை வளாகத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. [1]

இந்திய தொல்லியல் துறையின் அறிக்கையின் படி, மேற்கு வங்கத்தில் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மஞ்சள் பள்ளிவாசலும் இந்திய தொல்லியல் துறையின் பட்டியலிடப்பட்ட ஒரு நினைவுச்சின்னமாகும். [2]

வரைபடங்கள் தொகு

 
நிசாமத்து கோட்டை வளாகத்தின் ஒரு பகுதி வரைபடம்: மஞ்சள் நிறத்தில் நிசாமத்து இமாம்பரா மற்றும் அதன் உள்ளே உள்ள கட்டிடங்கள், நியூ மதீனா, இசை அரங்கம் மற்றும் உறுப்பினர் கூடம் ஆகியவற்றைக் காட்டுகிறது.
 
நிசாமத் கோட்டை வளாகத்தின் பெரிய வரைபடம், மஞ்சள் நிறத்தில் நிசாமத்து அவையை காட்டுகிறது, பழைய மதீனா பள்ளிவாசல், அசர்துவாரி அரண்மனை, சவுக் பள்ளிவாசல், பச்சவாலி டோபே, கடிகார கோபுரம், சியா வளாகம் மற்றும் சுரூத்து பள்ளிவாசல் உட்பட அதைச் சுற்றியுள்ள மற்ற கட்டிடங்களைக் காட்டுகிறது.

மஞ்சள் பள்ளிவாசல் படத்தொகுப்பு தொகு

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "ASI, Kolkata Circle". Yellow Mosque, Killa Nizamat. Archaeological Survey of India. பார்க்கப்பட்ட நாள் 20 July 2021.
  2. "List of Ancient Monuments and Archaeological Sites and Remains of West Bengal - Archaeological Survey of India". Item no. 126. ASI. பார்க்கப்பட்ட நாள் 20 July 2021.

புற இணைப்புகள் தொகு

  விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Murshidabad

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_பள்ளிவாசல்&oldid=3781410" இலிருந்து மீள்விக்கப்பட்டது