மணக்காட்டூர்


மணக்காட்டூர் என்பது திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் குடகிபட்டி ஊராட்சியில்[4] உள்ள கிராமம். இந்த ஊரின் அருகே இயற்கை எழில் மிகுந்த அய்யனார் அருவி உள்ளது.அதன் அருகே பழமையான அய்யனார் கோவில்உள்ளது.அய்யனார் கோவில்...

மணக்காட்டூர்
—  கிராமம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
இணையதளம் www.facebook.com/ManakkatturAruvi

சுமார் 200ஆண்டுகளுக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமாரவதி பகுதிகளில் இருந்த முத்தரையர் சமூகத்தை சார்ந்த மக்கள் தங்கள் பொருளாதார மேம்பாட்றிக்காக மேற்கு நோக்கி இடம் பெயர்ந்தனர்,அச்சமயம் தங்கள் குல தெய்வங்கள் காவல் தெய்வங்களை அழைத்து வந்தனர்,வந்த மக்கள் அவர்கள் குடிபெயர்ந்த ஊர்களில் தங்கள் கோவில்களை நிறுவிக்கொண்டார்.

அந்த அடிப்படையில் மணக்காட்டூர்,மேற்குப்பட்டி,மந்தைக்குளத்துபட்டி,குப்புலிப்பட்டி,குடகிப்பட்டி என அம்மக்கள் உள்ள பகுதிகளுக்கு மைய இடத்தில் கரந்தமலையில் வைத்து வழிபட்டு வந்தனர், 1989ம் ஆண்டு கோவில் எழுப்பி முதல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு அந்த பகுதியில் உள்ள எல்லா மக்களுக்கும் காவல் தெய்வமாக அய்யனார் ஆகினார்.. அந்த பகுதியில் வாழும் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல் காதுகுத்துதல் போன்ற சடங்குகளை அங்கேயே வைத்து செய்கின்றனர்...புனித தீர்த்தமாக அய்யனார் அருவி உள்ளது..

ஐயனார் கோவில்

தொகு

கரந்தமலை சாரலில் திண்டுக்கல் முதல் மணக்காட்டூர் வரை செல்லும் சாலையில் மணக்காட்டூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. பிரிவிலிருந்து கரந்தமலை நோக்கி 4 கி.மீ நடைப்பயணம் செய்தால் அய்யனார் கோவில் உள்ளது. அக்கோவில் மணக்காட்டூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காவல் தெய்வமாகவும் வழிபாட்டுத் தலமாகவும் உள்ளது. மணக்காட்டூர் மக்கள் மூன்று ஆண்டுக்கொரு முறை திருவிழா செய்கின்றனர். 1989 ஆம் ஆண்டு கோவில் கட்டி முடிக்கப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டது. இக்கோவிலைச் சுற்றி மாமரங்கள் உள்ளன. கோவிலின் முன்பு இருபெரும் குதிரை சிலைகள் பார்ப்பவர்களைக் கவரும் வண்ணம் உள்ளன. 2013 ஆம் ஆண்டு கோவில் மீண்டும் குடமுழுக்கு செய்யப்பட்டது. கோயில் வளாகத்தின் வலதுபுறம் சின்னக்கருப்பு, இடதுபுறம் பெரிய கருப்பு சுவாமிகள் காவல் தெய்வங்களாக வீற்றிருக்கின்றனர். பூரணவள்ளி தேவி, சுந்தரவள்ளி தேவி சமேதரராய் மூலவர் அய்யனார் சுவாமி அருள்பாலிக்கிறார். கோயில் முன் குதிரை வாகனங்களை வடிவமைத்துள்ளனர்.

அய்யனார் அருவி

தொகு

மணக்காட்டூரிலிருந்து 8 கி.மீ தொலைவிலும் கோவிலிருந்து 2 கி.மீ தொலைவில் அய்யனார் அருவி உள்ளது. அனைத்துக் காலங்களிலும் தண்ணீர் வந்து கொண்டே இருக்கும். இவ்வருவி நீரில் குளிப்பதால் பித்தம், வாதம், தோல் வியாதிகள் என நாள்பட்ட வியாதிகளைத் தீர்க்கக் கூடியதாக உள்ளதாக நம்பப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மணக்காட்டூர் அருகேயுள்ள அடர்ந்த கரந்தமலை வனத்திற்குள் அய்யனார் சுவாமி எழுந்தருளியுள்ளார். அண்டியோரை வாரியணைக்கும் அற்புத தெய்வமாக அய்யனார் சுவாமி வணங்கப்படுகிறார். குல தெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் அய்யனார் சுவாமி பக்தர்களின் மனதில் நிரந்தரமாக குடிகொண்டு அருள்பாலிக்கிறார்.

நோய் தீர்க்கும் மூலிகை அருவி: வன ராஜாவான அய்யனார் சுவாமிக்கு மண்டபத்துடன் கூடிய கோயில் எழுப்பியுள்ளனர். பழமையான இக்கோயிலுக்கு 20 ஆண்டுக்கு முன் முதல் கும்பாபி ?ஷகமும், சமீபத்தில் இரண்டாவது கும்பாபி ?ஷகமும் மணக்காட்டூர் கிராம மக்கள் மற்றும் பூசாரி வகையறாக்களால் நடத்தப்பட்டது. அய்யனார் கோயிலில் இருந்து 1 கி.மீ., தொலைவு மலைப்பாதையில் நடந்து சென்றால் என்றுமே வற்றாத அய்யனார் மூலிகை அருவியில் தண்ணீர் கொட்டிய வண்ணம் இருக்கும். வனத்தின் மூலிகை காற்றை சுவாசித்து அய்யனார் அருவியில் குளித்து வந்தால் தீராத நோய்களும் அற்றுப்போகும் என்பது நம்பிக்கை.

மணக்காட்டூர் மெயின்ரோட்டில் இருந்து வனத்தில் உள்ள கரந்தமலை அய்யனார் கோயிலுக்கு நடந்து செல்ல வேண்டும். அடர்ந்த வனம் என்பதால் பக்தர்கள் குழுவாக செல்வது பாதுகாப்பு மிக்கது. தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும். பாலிதீன் பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம். அய்யனார் அருவியில் குளித்த பின் தியானம் செய்வது சிறப்புமிக்கது. அருவி தீர்த்தம், விபூதியை எடுத்து வந்து நடக்க முடியாதவர்களுக்கு கொடுப்பது சாலச்சிறந்தது. மணக்காட்டூர் பகுதி மக்கள் தங்களுக்கு காவல் தெய்வமாக இருப்பதற்காக அய்யனாரை பூரணை மற்றும் சுந்தரவள்ளி அம்மனுடன் பிரதிஷ்டை செய்து வழிபடத்துவங்கினர். காலப்போக்கில் இது அனைத்து பகுதி மக்களும் வழிபடும் வழிபாட்டு தலமாக மாறியது. அதிசயத்தின் அடிப்படையில்: அற்புதங்களை நிகழ்த்தும் அய்யனார் சுவாமி பூரணவள்ளி தேவி, சுந்தர வள்ளி தேவி சமேதரராய் திண்டுக்கல் அருகே கரந்தமலையில் எழுந்தருளியிருப்பது வேறெங்கும் காணாத தனிச்சிறப்பு.


மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-23. பார்க்கப்பட்ட நாள் 2014-06-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணக்காட்டூர்&oldid=3566248" இலிருந்து மீள்விக்கப்பட்டது