மணிந்திர சந்திர நந்தி
மகாராஜா சர் மனிந்திர சந்திர நந்தி (Maharaja Sir Manindra Chandra Nandy) (1860 மே 29 - 1929 நவம்பர் 12) இவர் 1898 முதல் 1929 வரை கோசிம்பசார் இராச்சியத்தின் மகாராஜாவாகவும், வங்காள மறுமலர்ச்சிக் காலத்தில் ஒரு தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டவராகவும் மற்றும் சீர்திருத்தவாதியாகவும் இருந்தார்.
மணிந்திர சந்திர நந்தி | |
---|---|
பிறப்பு | மணிந்திர சந்திர நந்தி 29 மே 1860 |
இறப்பு | 12 நவம்பர் 1929 | (அகவை 69)
தேசியம் | இந்தியன் |
பட்டம் | மகாராஜா சர் மனிந்திர சந்திர நந் |
குடும்பம்
தொகுமணிந்திர சந்திர நந்தி 1860 மே 29 அன்று கோசிம்பசாரின் அரச குடும்பத்தில் பிறந்தார். இவரது தாயார் கோபிந்த சுந்தரி இவருக்கு இரண்டு வயதாக இருந்தபோது இறந்தார். இவரது தந்தை இவரது பத்து வயதில் இறந்தார். [1]
1897 இல் மகாராணி சுவர்ணமயி இறந்த பின்னர் நேரடி ஆண் சந்ததியினர் உயிருடன் இல்லாததால், கோசிம்பசார் ராஜ குடும்பத்தின் விருப்பப்படி இவர் கோசிம்பசாரின் மகாராஜா ஆனார். [1]
கல்வி
தொகுமணிந்திர சந்திரா தனது பதினான்கு வயதில் கடுமையான நோயால் அவதிப்பட்டார். இது இவரை பள்ளிக்குச் செல்வதைத் தடுத்தது. பின்னர் இவர் நோயிலிருந்து மீண்டாலும், இவர் வீட்டிலேயே படித்தார். முறையான கல்வியைப் பெறவில்லை. [1]
திருமணம்
தொகுஇவர் தனது பதினேழு வயதில் வர்த்தமானின் ஜபகிராம் மகாராணி காசிச்சுவரியை மணந்தார். இவர்களுக்கு மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் இருந்தனர். இவர்களின் மூத்த மகன் மோகிம் சந்திர நந்தி 1906இன் ஆரம்பத்தில் இறந்தார். இவரது மற்ற இரண்டு மகன்கள் சிறிசு சந்திர நந்தி மற்றும் கீர்த்தி சந்திர நந்தி. [1]
கல்வியை மேம்படுத்துவதற்கான பங்களிப்பு
தொகுகிருட்டிணாக் கல்லூரி
தொகு1902 ஆம் ஆண்டில், மணிந்திர சந்திராவின் தாய்மாமனும், மகாராணி சுவர்ணமயியின் கணவருமான ராஜா கிருட்டிணா ராயின் நினைவாக பகரம்பூர் கல்லூரிக் கிருட்டிணக் கல்லூரி என மறுபெயரிடப்பட்டது. 1905ஆம் ஆண்டில், கிருட்டிணாக் கல்லூரியின் கட்டுப்பாடு மணிந்திர சந்திர நந்தியிடம் இடமாற்ற பத்திரத்தின் மூலம் அரசாங்கத்தால் ஒப்படைக்கப்பட்டது. அதன் நிர்வாக குழுவின் தலைவராக நந்தி இருந்தார். கல்லூரியின் பராமரிப்புக்காக நந்தி ஆண்டுக்கு ரூ.45,000 செலவிட்டார்[1] [2]
கிருட்டிணாத் கல்லூரிப் பள்ளி
தொகுகிருட்டிணாக் கல்லூரிப் பள்ளியில் 1,200 மாணவர்கள் தங்குவதற்கு பரகரம்பூர் கல்லூரியில் ஒரு பெரிய கட்டிடம் கட்டுவதற்கு மகாராஜா மணிந்திர சந்திர நந்தி ரூ.135,000 நிதியளித்தார். 1909ஆம் ஆண்டில் இதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் பள்ளி முறையாக 1911இல் திறக்கப்பட்டது. [3]
மாற்றுத்திறனாளிகளிக்கான பள்ளிகள்
தொகுமணிந்திர சந்திரா தனது மூதாதையர் கிராமமான வர்த்தமானில் ரூ.50,000. செலவில் தங்கும் விடுதியுடன் ஒரு ஆங்கில நடுத்தர உயர்நிலைப் பள்ளியை நிறுவினார். இவர் மற்ற கிராமங்களில் பள்ளிகளையும், கொல்கத்தாவில் ஊனமுற்றோருக்கான பள்ளிகளையும் பராமரித்தார். [1]
மாற்றுத்திறனாளிகளிக்கான கல்லூரிகள்
தொகுநந்தி 1904 ஆம் ஆண்டில் கொகல்கத்தா மருத்துவப் பள்ளி மற்றும் வங்கிய மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை கல்லூரி கட்டுமானத்திற்காக ரூ.15,000 ரூபாய் நிதியுதவி அளித்தார். [4] இவர் தௌலத்பூர் கல்லூரிக்கு ரூ.5,000, இரங்க்பூர் கல்லூரிக்கு ரூ.50,000 நன்கொடை அளித்தார். 1914 ஆம் ஆண்டில், மருத்துவக் கல்லூரி மற்றும் பெண்களுக்கான மருத்துவமனை மற்றும் புதுதில்லியில் உள்ள செவிலியர் பயிற்சி நிறுவனத்திற்கு ரூ.5,000 பங்களித்தார். பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் ஒரு இருக்கையும், சர் ஜெகதீஷ் சந்திரபோஸ் ஆய்வகத்தில் அறிவியல் இருக்கையும் உருவாக்கினார். இவர் வங்காள தொழில்நுட்ப நிறுவனம், தேசியக் கல்லூரி மற்றும் இந்தியர்களின் அறிவியல் மற்றும் தொழில்துறை கல்விக்கான சங்கம் ஆகியவற்றை ஆதரித்தார். [1]
வெளியீடுகள்
தொகுஇவர் தி மெடிசனல் பிளான்ட், எ ஹிஸ்டரி ஆப் இன்டியன் பிலாசாபி, பண்டமென்டல் யூனிட்டி ஆப் இன்டியா, ஹிஸ்டரி ஆப் இன்டியன் சிப்பிங் அன்ட் இன்டியன் மேரிடைம் ஆக்டிவிட்டி போன்ற பல புத்தகங்களை எழுதினார். [1]
வகித்த பதவிகள்
தொகுமணிந்திர சந்திரா 1922, 1923, மற்றும் 1929 ஆம் ஆண்டுகளில் பிரிட்டிசு இந்திய சங்கத்தின் தலைவராகவும், 1913 முதல் 1921 வரை இம்பீரியல் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். நந்தி பகரம்பூர் நகராட்சி மற்றும் முர்சிதாபாத் மாவட்ட வாரியத்தின் தலைவராகவும் இருந்தார். [1] இவர் வங்காள தேசிய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும், பின்னர் அதன் தலைவராகவும் இருந்தார். இவர் ஒரு தலைவராகவும் இந்து மகாசபையின் உறுப்பினராகவும் இருந்தார் [5]
விருதுகள் மற்றும் கௌரவங்கள்
தொகுமணிந்திர சந்திரா 1898 மே 30 அன்று மகாராஜா என்ற பட்டத்தைப் பெற்றார். இவர் 1915இல் தனது வீரத்திருத்தகை என்ற பட்டத்தைப் பெற்றார். நந்தி கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கௌரவ சக ஊழியராகவும் இருந்தார். [1]
இறப்பு
தொகுமகாராஜா 1929 நவம்பர் 12 இல் இறந்தார்.
நினைவுச் சின்னங்கள்
தொகுமகாராஜா மணிந்திர சந்திர கல்லூரி இவரது நினைவுச்சின்னமாக நிற்கிறது, இது இவரது மகன் மகாராஜா சிறிசு சந்திர நந்தி அவர்களால் நிறுவப்பட்டது.
குறிப்புகள்
தொகு- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 Official website of Murshidabad Fire Dekha, Biography of Maharaja Manindra Chandra Nandy
- ↑ Official website of Murshidabad Fire Dekha, History of Krishnath College
- ↑ Official website of Murshidabad Fire Dekha, History of Krishnath College School
- ↑ Official website of R. G. Kar Medical College and Hospital Batch 1982–1987 பரணிடப்பட்டது 13 சூலை 2014 at the வந்தவழி இயந்திரம், History of R. G. Kar Medical College and Hospital
- ↑ Najarula Isalāma (1 January 2005). Son of the Soil. Viva Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-309-3097-8.