மணிமாறன் சித்தார்த்
மணிமாறன் சித்தார்த் (Manimaran Siddharth பிறப்பு: சூலை 3,1998) இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். உள்ளூர்ப் போட்டிகளில் தமிழ்நாடு அணிக்காகவும், இந்தியன் பிரீமியர் லீக்கில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காகவும் விளையாடுகிறார். இவர் ஓர் இடது கை வழமைச் சுழல் பந்து வீச்சாளராவார் .[1]
உள்ளூர்ப் போட்டிகள் தொகு
2019 நவம்பர் 22இல், சையத் முஷ்டாக் அலிக் கோப்பையில் தமிழ்நாடு அணிக்காக இருபது20 போட்டியில் அறிமுகமானார்.[2] 2019 திசம்பர் 9இல் ரஞ்சிக் கோப்பையில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[3] இவர் 20 பிப்ரவரி 2021இல் விஜய் அசாரே கிண்ணத்தில் பட்டியல் அ துடுப்பாட்டத்தில் அறிமுகமானார்.[4]
இந்தியன் பிரீமியர் லீக் தொகு
2020 ஐபிஎல் ஏலத்தில், 2020 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் இவர் வாங்கப்பட்டார்.[5] 2021 ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.[6] காயம் காரணமாக இவருக்குப் பதிலாக குல்வந்த் கெஜ்ரோலியா நியமிக்கப்பட்டார்.[7]
மேற்கோள்கள் தொகு
- ↑ "Manimaran Siddharth". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 November 2019.
- ↑ "Super League Group B, Syed Mushtaq Ali Trophy at Surat, Nov 22 2019". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 November 2019.
- ↑ "Elite, Group B, Ranji Trophy at Dindigul, Dec 9-12 2019". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 December 2019.
- ↑ "Elite, Group B, Indore, Feb 20 2021, Vijay Hazare Trophy". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 February 2021.
- ↑ "IPL auction analysis: Do the eight teams have their best XIs in place?". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 December 2019.
- ↑ "IPL 2021 auction: The list of sold and unsold players". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 February 2021.
- ↑ "IPL 2021: Kulwant Khejroliya Replaces Injured Manimaran Siddharth In Delhi Capitals Squad". NDTV Sports. பார்க்கப்பட்ட நாள் 15 September 2021.