மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜி. ஆர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். எழுத்தாளர் அகிலன் எழுதிய கயல்விழி என்ற புதினத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.[1]

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
இயக்கம்எம். ஜி. ஆர்
தயாரிப்புசொலீஸ்வர் கம்பைன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
லதா
வெளியீடுசனவரி 14, 1978
நீளம்3993 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

1977 தேர்தலில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர், தமிழக முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் கடைசியாக நடித்த படம் "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்." எம்.ஜி.ஆர், முதல் அமைச்சராகி 6 மாதங்களுக்குப் பின், 1978 பொங்கல் நாளன்று இத்திரைப்படம் வெளிவந்தது. இது நூறு நாள் ஓடிய படமாக அமைந்தது[2].

இப்படத்தின் தொடர்ச்சியாக மாய பின்பம் குழுமம் ''புரட்சித்தலைவன்''' என்ற முப்பரிமாணப் படம் ஒன்றை அமைப்பதாக இருந்தது.[3][4]

புரட்சித் தலைவன் (இயங்குபடம்)

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[5][6]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "மாங்கல்யம்"  முத்துலிங்கம்[7]வாணி ஜெயராம் 3.26
2. "வீரமகன் போராட"  முத்துலிங்கம்[7]டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா 3:41
3. "தாயகத்தின் சுதந்திரமே"  முத்துலிங்கம்[7]டி. எம். சௌந்தரராஜன் 3:53
4. "அமுதத் தமிழில்"  புலமைப்பித்தன்பி. ஜெயச்சந்திரன் & வாணி ஜெயராம் 3:48
5. "தென்றலில் ஆடிடும்"  புலமைப்பித்தன்கே. ஜே. யேசுதாஸ் & வாணி ஜெயராம் 4:43

மேற்கோள்கள் தொகு