மத வழிபாட்டுத் தலங்களுக்கு வருகைகள் குறித்த இருதரப்பு நெறிமுறை,1974

மத வழிபாட்டுத் தலங்களுக்கு வருகைகள் குறித்த இருதரப்பு நெறிமுறை,1974 என்பது இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையிலான பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட மத வழிபாட்டுத் தலங்களுக்கு வருகைகள் குறித்த இருதரப்பு ஒப்பந்தமாகும்,

இந்திய மற்றும் பாகிஸ்தானிய குடிமக்கள் இவ்விரு நாடுகளிலும் உள்ள பொதுவான, ஒப்புக்கொள்ளப்பட்ட மத வழிபாட்டுத் தலங்களுக்கு அந்தந்த மத பக்தர்கள் எளிதாக சிக்கலின்றி செல்ல உதவுகிறது. [1] [2] [3] நவம்பர் 2018 நிலவரப்படி, பாகிஸ்தானில் பதினைந்து இடங்களும் இந்தியாவில் ஐந்து இடங்களும் இந்த நெறிமுறையின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.

பந்த்-மிர்சா ஒப்பந்தம் [4] என்றழக்கப்படும் இதன்படி, ஒப்புக் கொள்ளப்பட்ட வழிபாட்டுத் தலங்களின் பட்டியலில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் முறையாக பராமரிக்கப்படுவதையும், அவற்றின் புனிதத்தன்மை பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது அந்தந்த நாடுகளின் கடமையாகும்.

மத வழிபாட்டுத் தலங்ககளின் பட்டியல்

தொகு

இந்த நெறிமுறையின் கீழ் ஒப்புக்கொள்ளப்பட்ட மத வழிபாட்டுத் தலங்களின் பட்டியல்: [5]

இந்தியா

தொகு
  1. அஜ்மீர் ஷெரீப் தர்கா, ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள சூஃபி துறவி மொய்னுதீன் சிஷ்டிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  2. டெல்லியில் உள்ள நிஜாமுதீன் தர்கா, சூஃபி துறவி நிஜாமுதீன் அவுலியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  3. அமீர் குஸ்ரோ, டெல்லியில் சூஃபி இசைக்கலைஞர் அமீர் குஸ்ரோவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது
  4. சிர்ஹிந்த் ஷெரீப், முஜாதித் அல்ஃப் சானி சிர்ஹிந்த், பஞ்சாப், இந்தியா
  5. ஹரித்வாருக்கு அருகில் உள்ள சூஃபி துறவி அலாவுதீன் அலி அகமது சபீருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கல்யார் ஷெரீப்

பாகிஸ்தான்

தொகு
  1. ஹயாத் பிடாஃபி, கோட்கியில் ஷதானி தர்பார்
  2. லாகூரில் உள்ள கடாஸ்ராஜ் தாம்
  3. நங்கனா சாஹிப்பின் குருத்வாராக்கள்
  4. குருத்வாரா பஞ்ச சாஹிப், ஹசன் அப்தால்
  5. ரஞ்சித் சிங்கின் சமாதி, லாகூர்
  6. குருத்வாரா தேரா சாஹிப், லாகூர்
  7. குருத்வாரா ஜனம் ஆஸ்தான், நங்கனா சாஹிப்
  8. குருத்வாரா திவான் கானா, லாகூர்
  9. குருத்வாரா ஷாஹீத் கஞ்ச், சிங்கானியன், லாகூர்
  10. குருத்வாரா பாய் தாரா சிங், லாகூர்
  11. ஆறாவது குருவின் குருத்வாரா, மொசாங், லாகூர்
  12. குரு ராம் தாஸ் பிறந்த இடம், லாகூர்
  13. குருத்வாரா செவீன் பாட்ஷாஹி, மொசாங், லாகூர்
  14. டேட்டா கஞ்ச் பக்ஷ் ஆலயம், லாகூர்
  15. மிர்பூர் மாதெலோ, சிந்து

மேற்கோள்கள்

தொகு
  1. "Pant-Mirza Agreement". Press Information Bureau, National Informatics Centre (NIC), India. Archived from the original on 2018-12-14. பார்க்கப்பட்ட நாள் 2018-12-11.
  2. "Protocol on visits to Religious Shrines". Ministry of External Affairs, India. 14 September 1974. Archived from the original on 2018-12-14. பார்க்கப்பட்ட நாள் 2018-12-11.
  3. "Q.*316 Denial of visa by Pakistan". Institute for Defence Studies and Analyses. 24 August 2011. பார்க்கப்பட்ட நாள் 2018-12-11.
  4. "பந்த்-மிர்சா ஒப்பந்தம்". pib.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-02-17.
  5. "Express Fact Check | Visas for pilgrims: 15 shrines in Pak, 5 in India under protocol". The Indian Express (in Indian English). 27 November 2018. Archived from the original on 2018-12-14. பார்க்கப்பட்ட நாள் 2018-12-11.