மந்திப் புறா

பறவை இனம்

மந்திப் புறா (Mountain imperial pigeon) தென்கிழக்கு ஆசியாவில் பரவலாக காணப்படும் புறா வகைகளுள் ஒன்றாகும்.

மந்திப் புறா
Ducula badia insignis from Mahananda Wildlife Sanctuary, West Bengal, இந்தியா
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
துகுலா
இனம்:
D. badia
இருசொற் பெயரீடு
Ducula badia
(Raffles, 1822)

பெயர்கள் தொகு

தமிழில்  :மந்திப் புறா

ஆங்கிலப்பெயர்  :Mountain Imperial – Pigeon

அறிவியல் பெயர் :Ducula badia [2]

 
Subspecies insignis

உடலமைப்பு தொகு

அதிகபட்ச உடல் நீளம் 43 செ.மீ. வரை இருக்கும். ஆலிவ் பழுப்பு நிறங்கொண்ட உடலும் வெளிர்சாம்பல் நிறத்தலையும் மார்பினையும் கொண்டது.

காணப்படும் பகுதிகள் தொகு

வடகிழக்கு இந்தியாவின் மலைப் பகுதிகளிலும் தென்மேற்கு இந்தியாவின் மலைப் பகுதிகளும் மட்டுமே இவை காணப்படும். இந்தியாவின் இடைப்பட்ட பகுதிகளில் காணப்படுவதில்லை. தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பசுங்காடுகளில் காணப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2000 மீட்டர் உயரம் வரை இவற்றைக் காணலாம்.

உணவு தொகு

இவை 15 முதல் 20 வரையான குழுவாக வாழும்; பெரிய மரங்களில் இலை தழைகளிடையே மறைந்து இரை தேடும். பழங்களையே முக்கிய உணவாகக் கொள்ளும். இது சாதிக்காயை முழுவதுமாக அப்படியே விழுங்கும் பழக்கமுடையது. காலையிலும் பிற்பகலிலும் உயரக்கிளைகளில் அமர்ந்து வெயில் காயும். இது இருட்டுவதற்கு முன்பே அடையும் இடம் செல்லும். கஉயுக்கோ க்உயூக்கோ என குரல் கொடுக்கும்.

இனப்பெருக்கம் தொகு

ஜனவரி முதல் மே வரை சிறிய மரங்களிலும் அவற்றில் சுற்றி வளர்ந்திருக்கும் பெரிய கொடிகளிடையும் கூடமைத்து ஒரு முட்டையிடும்.[3]

படங்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ducula badia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

மேற்கோள்கள் தொகு

  1. "Ducula badia". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. "மந்திப் புறாMountain Imperial – Pigeon". பார்க்கப்பட்ட நாள் 8 அக்டோபர் 2017.
  3. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:66
"https://ta.wikipedia.org/w/index.php?title=மந்திப்_புறா&oldid=3773668" இலிருந்து மீள்விக்கப்பட்டது