மனாசேயின் புதல்வர்கள்
மனாசேயின் புதல்வர்கள் (Bnei Menashe) வடகிழக்கு இந்தியா மாநிலங்களான மணிப்பூர், மிசோரம் பகுதியில் வாழும் ஒரு சிறிய இனக்குழுவாகும். இவர்கள் இசுரேலின் இழந்த கோத்திரங்களில் ஒன்றின் வாரிசுகள் என்று தங்களை அழைப்பதோடு, யூத சமயத்தையும் கடைப்பிடிக்கிறார்கள்.[2][3] மனாசேயின் புதல்வர்கள் எனப்படும் இவர்கள் மிசோ மக்கள், குகி, சின் மக்கள் இனத்தவராகவும், திபெத்திய-பர்மிய மொழிகள் பேசுபவராகவும், இவர்களுடைய மூதாதையர் 17 ஆம், 18 ஆம் நூற்றாண்டுகளில் மியான்மர் பகுதியில் இருந்து ஏழு சகோதரி மாநிலங்களுக்கு குடியேறியவர்களாகவும் உள்ளனர்.[4] 20 ஆம் நூற்றாண்டின் கடைசியில் யூதப் போதகர் ஒருவரால் மனாசே வழி வந்தவர்கள் என்ற பொருளில் "மனாசேயின் புதல்வர்கள்" என அழைக்கப்பட்டனர்.[5] இரு வடகிழக்கு இந்தியா மாநிலங்களில் வாழும் 3.7 மில்லியனுக்கு மேற்பட்டவர்களில் பலர் தங்களை இவ்வாறு கருதுவதில்லை. சிலர் இந்தியாவில் இருந்து பிரிய வேண்டும் என்ற இயக்கத்திற்கு ஆதரவளித்தனர்.
மொத்த மக்கள்தொகை | |
---|---|
10,000[1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
இந்தியா | 7,000[1] |
இசுரேல் | 3,000[1] |
மொழி(கள்) | |
குகி, மிசோ, எபிரேயம் | |
சமயங்கள் | |
யூதம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
மிசோ, குகி, சின் மக்கள், கசின், சான், காரென். |
உசாத்துணை
தொகு- ↑ 1.0 1.1 1.2 3,000th Bnei Menashe touches down in Israel
- ↑ மணிப்பூரில் வசிக்கும் யூதர்களின் நிலை என்ன?
- ↑ Weil, Shalva. "Double Conversion among the 'Children of Menasseh'" in Georg Pfeffer and Deepak K. Behera (eds) Contemporary Society Tribal Studies, New Delhi: Concept, pp. 84–102. 1996 Weil, Shalva. "Lost Israelites from North-East India: Re-Traditionalisation and Conversion among the Shinlung from the Indo-Burmese Borderlands", The Anthropologist, 2004. 6(3): 219–233.
- ↑ Kommaluri, Vijayanand; Subramanian, R; Sagar K, Anand (2005-07-07). "Issues in Morphological Analysis of North-East Indian Languages". Language in India. பார்க்கப்பட்ட நாள் 2007-03-04.
- ↑ Fishbane, Matthew (19 February 2015). "Becoming Moses". Tablet Magazine இம் மூலத்தில் இருந்து 3 ஜூன் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160603071557/https://tabletmag.atavist.com/becoming-moses. பார்த்த நாள்: 2 May 2016.