மனித உரிமைகளுக்கான மையம்

உக்ரேனிய குடிமை சமூக அமைப்பு மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமைப்பு

மனித உரிமைகளுக்கான மையம் (The Center for Civil Liberties)[2] உக்ரேனிய வழக்கறிஞர் ஒலெக்சாண்ட்ரா மட்விச்சுக் தலைமையில் தொடங்கப்பட்ட ஒரு உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பாகும் . [3] உக்ரைன் அரசாங்கத்தை மேலும் ஜனநாயகமாக்குவதற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடன் இது தொடங்கப்பட்டது. [4] [5] அலெசு பிலியாத்சுக்கி மற்றும் உருசிய அமைப்பான மெமோரியல் ஆகியவற்றுடன் இணைந்து 2022 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இந்த அமைப்புக்கு வழங்கப்பட்டது.[6]

மனித உரிமைகளுக்கான மையம்
உருவாக்கம்30 மே 2007; 17 ஆண்டுகள் முன்னர் (2007-05-30)
வகைமனித உரிமைகள் அமைப்பு
நோக்கம்மனித உரிமைகள் குழுமம்
தலைமையகம்கீவ், உக்ரைன்[1]
தலைவர்
ஒலெக்சாண்ட்ரா மட்விச்சுக்
விருது(கள்)அமைதிக்கான நோபல் பரிசு (2022)
வலைத்தளம்ccl.org.ua/en/

வரலாறு

தொகு

குடிமை உரிமைகளுக்கான மையம், 30 மே 2007 அன்று உக்ரைனில் உள்ள கீவ் நகரில் நிறுவப்பட்டது [7] உக்ரைனை மேலும் ஜனநாயகமாக்குவதற்கும் உக்ரைனில் சட்ட அமலாக்கம் மற்றும் பாதுகாப்பு மற்றும் நீதித்துறையின் பொதுக் கட்டுப்பாட்டை மேம்படுத்துவதற்கும் ஒரு முயற்சியில் சட்ட திருத்தங்களை அறிமுகப்படுத்துவதில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது. [4] உக்ரைனின் குற்றவியல் சட்டத்தை புதுப்பித்தலில் அமைப்பின் கவனம் செலுத்துகிறது. [4]

பணிகள்

தொகு

2013-2014 யூரோமைதான் போராட்டங்களின் போது, போராட்டங்களில் பங்கேற்ற எதிர்ப்பாளர்களுக்கு சட்டப்பூர்வ ஆதரவை வழங்கவும், அப்போதைய அரசுத் தலைவர் விக்டர் யானுகோவிச்சின் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட முறைகேடுகளைக் கண்காணிக்கவும் யூரோமைதான் பாதுகாப்புத் திட்டத்தை குழு தொடங்கியது. [5]

2014 இல் கிரிமியாவை உருசியா இணைத்துக் கொண்டு, தொன்பாஸ் போர் தொடங்கிய பிறகு (2014 இல்), இந்த அமைப்பு கிரிமியாவில் அரசியல் துன்புறுத்தல் மற்றும் உருசிய ஆதரவு பிரிவினைவாத இலுகன்சுக் மக்கள் குடியரசு மற்றும் தனியெத்சுக் மக்கள் குடியரசு ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படும் பிரதேசத்தில் குற்றங்களை ஆவணப்படுத்தத் தொடங்கியது. [8] உருசியா, தனது நாட்டுடன் இணைக்கப்பட்ட கிரிமியா மற்றும் தொன்பாஸ் ஆகிய நாடுகளில் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கான சர்வதேச பிரச்சாரங்களையும் இந்த அமைப்பு தொடங்கியது. [4] [9]

2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பைத் தொடர்ந்து, குடிமை உரிமைகளுக்கான மையம் போரின் போது நடந்த உருசியப் போர்க்குற்றங்களை ஆவணப்படுத்தத் தொடங்கியது. [10] நோர்வே நோபல் குழு 2022 ஆம் ஆண்டில், "குற்றவாளிகள் தங்கள் போர்க் குற்றங்களுக்கு பொறுப்பேற்பதில் ஒரு முன்னோடி பாத்திரத்தை வகிக்கிறது" என்று கூறியது. [11]

நோபல் பரிசு

தொகு

7 அக்டோபர் 2022 அன்று, அலெசு பிலியாத்சுக்கி மற்றும் உருசிய அமைப்பான மெமோரியல் ஆகியவற்றுடன் இணைந்து 2022 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இந்த குடிமை உரிமைகளுக்கான மையத்திற்கு வழங்கப்பட்டது.[12] உக்ரேனிய குடிமகன் அல்லது அமைப்புக்கு வழங்கப்பட்ட முதல் நோபல் பரிசு இதுவாகும். 8 அக்டோபர் 2022 அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, குடிமை உரிமைகளுக்கான மையத்தின் தலைவர் ஒலெக்ஸாண்ட்ரா மட்விச்சுக், நோபல் பரிசை வென்றதற்கு உக்ரேனிய அரசுத் தலைவர் வலோதிமிர் செலேன்சுக்கி அல்லது வேறு எந்த (உக்ரேனிய) அரசாங்க அதிகாரியோ வாழ்த்தவில்லை என்று வருத்தப்பட்டார். [13] அவரும் அவரது சகாவும் "ஒரு வணிக பயணத்திலிருந்து திரும்பி வருவதால்" அவர்கள் முயற்சித்திருக்கலாம் ஆனால் தோல்வியுற்றிருக்கலாம் என்று மட்விச்சுக் கூறினார். [13]

நவம்பர் 2022 இல் ஒலெக்சாண்ட்ரா மட்விச்சுக் உக்ரைனில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை விடுவிக்க உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். இது உருசிய கூட்டமைப்பால் செய்யப்படும் நீண்டகால குற்றங்களைத் தடுக்க சிறந்த வழியாகும். [14]

மேற்கோள்கள்

தொகு
  1. "Nobel Committee Champions Human Rights With 2022 Peace Prize". Radio Free Europe (in ஆங்கிலம்). 7 October 2022. பார்க்கப்பட்ட நாள் 7 October 2022.
  2. "Statute of Centre for Civil Liberties Civil Society Organisation – new version" (PDF). 27 June 2022. Archived from the original (PDF) on 7 October 2022. பார்க்கப்பட்ட நாள் 7 October 2022.
  3. "Oleksandra Matviychuk – Ukraine | Coalition for the International Criminal Court". www.coalitionfortheicc.org. பார்க்கப்பட்ட நாள் 17 August 2021.
  4. 4.0 4.1 4.2 4.3 "Meet Oleksandra Matviichuk from Ukraine". பார்க்கப்பட்ட நாள் 7 October 2022.
  5. 5.0 5.1 "Ukraine's Center for Civil Liberties was documenting rights violations long before Russia's full-scale invasion.". https://www.nytimes.com/2022/10/07/world/europe/ukraine-center-for-civil-liberties-nobel-peace-prize.html. 
  6. "Nobel Peace Prize to activists from Belarus, Russia, Ukraine". பார்க்கப்பட்ட நாள் 7 October 2022.
  7. "Ukraine's Center for Civil Liberties becomes one of Nobel Peace Prize laureates". பார்க்கப்பட்ட நாள் 7 October 2022.
  8. "Belarus, Ukraine, Russia activists win Nobel Peace Prize". BBC News (in ஆங்கிலம்). 7 October 2022. பார்க்கப்பட்ட நாள் 7 October 2022.
  9. "Oleksandra Matviichuk". religiousfreedom.in.ua. பார்க்கப்பட்ட நாள் 17 August 2021.
  10. "Nobel peace prize given to human rights activists in Belarus, Russia and Ukraine" (in ஆங்கிலம்). 7 October 2022. பார்க்கப்பட்ட நாள் 7 October 2022.
  11. "Nobel peace prize 2022 awarded to human rights campaigners in Ukraine, Russia and Belarus – as it happened" (in ஆங்கிலம்). 7 October 2022. பார்க்கப்பட்ட நாள் 7 October 2022.
  12. "Nobel Peace Prize to activists from Belarus, Russia, Ukraine" (in ஆங்கிலம்). 7 October 2022. பார்க்கப்பட்ட நாள் 7 October 2022."Nobel Peace Prize to activists from Belarus, Russia, Ukraine".
  13. 13.0 13.1 "We hope to create an international tribunal and punish Putin and Lukashenko, – Central Committee on the Nobel Prize" (in Ukrainian). 8 October 2022. பார்க்கப்பட்ட நாள் 8 October 2022.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  14. "Nobel Peace Laureate Calls for Weapons to Free Ukraine". 28 November 2022. பார்க்கப்பட்ட நாள் 28 November 2022.

வெளி இணைப்புகள்

தொகு