மனு ஜோசப்
மனு ஜோசப் (Manu Joseph) (பிறப்பு 22 ஜூலை 1974) [1] [2] ஒரு இந்திய ஊடகவியலாளர் மற்றும் எழுத்தாளர் ஆவர். இவர் ஓபன் இதழின் முன்னாள் ஆசிரியரக இருந்தார்.
மனு ஜோசப் | |
---|---|
பிறப்பு | சூலை 22, 1974 கோட்டயம், கேரளம், இந்தியா |
கல்வி | இலயோலாக் கல்லூரி, சென்னை |
பணி | ஊடகவியலாளர், எழுத்தாளர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | 'சீரியஸ் மென்' நூல் மற்றும் திரைப்படம், டீகப்பில்டு - இணையத் தொடர் |
பிள்ளைகள் | 1 |
வாழ்க்கை மற்றும் தொழில்
தொகுமனு கேரளாவின் கோட்டயத்தில் பிறந்து, சென்னையில் வளர்ந்தார் . சென்னை லயோலா கல்லூரியின் பட்டதாரியான இவர், சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, சொசைட்டி இதழில் எழுத்தாளராக ஆனார்.[2] இவர் ஓபன் இதழின் முன்னாள் ஆசிரியராக இருந்தார்.மேலும், தி நியூயார்க் டைம்சு, தி ஹிந்துஸ்தான் டைம்சு ஆகிய இதழ்களுக்கு கட்டுரையாளராக இருந்தார். 2007 இல், அவர் செவனிங் அறிஞராக இருந்தார். [3] இவர் தற்போது டெல்லியில் வசித்து வருகிறார். [2]இவரது முதல் புதினமான சீரியஸ் மென் (2010) தி இந்து இலக்கிய பரிசு மற்றும் பென் /ஓபன் புக் விருதை வென்றது . இப்புதினத்தை அடிப்டையாகக் கொண்டு, இயக்குனர் சுதிர் மிஸ்ரா ஒரு திரைப்படத்தை வெளியிட்டார். அக்டோபர் 2020இல், இத்திரைப்படம் அதே பெயரில் அமேசான் பிரைமில் வெளியிடப்பட்டது.
இவரது இரண்டாவது புதினம், தி இலிசிட் ஹேப்பினஸ் ஆஃப் அதர் பீப்பிள், செப்டம்பர் 2012 [4] இல் வெளியிடப்பட்டது. இவரது மூன்றாவது புதினம், மிஸ் லைலா: ஆர்ம்ட் அண்ட் டேன்ஜர்அஸ் செப்டெம்பர் 2017இல் வெளியிடப்பட்டது. [5] மேலும், லவ் கிச்சடி (2009) திரைப்படத்திற்கும் மனு திரைக்கதை எழுதியுள்ளார். [6]
ஜனவரி 2014 இல், மனு ஓபன் இதழின் ஆசிரியர் பதவியை ராஜினாமா செய்தார். [7]
மனு, 17 டிசம்பர் 2021 அன்று நெட்ப்ளிஸில் வெளியிடப்பட்ட இந்திய ஆங்கில மொழி நகைச்சுவை வலைத் தொடரான 'டிகப்பில்ட்' இன் எழுத்தாளர் ஆவார். [8]
புதினங்கள்
தொகு- சீரியஸ் மென் (2010)
- தி இலிசிட் ஹேப்பினஸ் ஆஃப் அதர் பீப்பிள் (2012)
- மிஸ் லைலா: ஆர்ம்ட் அண்ட் டேன்ஜர்அஸ் (2017)
திரைப்படங்கள் மற்றும் தொடர்கள்
தொகு- லவ் கிச்சடி
- சீரியஸ் மென்
- டீக்கபில்டு
இணைப்புகள்
தொகு- ↑ "Manu Joseph". www.goodreads.com.
- ↑ 2.0 2.1 2.2 "About the Author". manujoseph.com. Archived from the original on 25 November 2011. பார்க்கப்பட்ட நாள் 15 November 2011.
- ↑ "Slimme mannen – Manu Joseph". literairnederland. Archived from the original on 25 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 15 November 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "The Illicit Happiness of Other People (extracts)". The Hindu Prize. பார்க்கப்பட்ட நாள் 4 October 2012.
- ↑ "From the flea market of frailties: an interview with Manu Joseph".
- ↑ "Extraordinary Minds, Ordinary Fathers". http://www.newindianexpress.com/magazine/2018/jul/08/extraordinary-minds-ordinary-fathers-1838815.html.
- ↑ "Manu Joseph resigns". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 9 June 2015.
- ↑ "‘Decoupled’ : The comedy of separation". https://www.thehindu.com/entertainment/r-madhavan-surveen-chawla-netflix-show-decoupled-written-by-manu-joseph/article37861737.ece. பார்த்த நாள்: 2022-02-21.