மனை விற்பனை (ஒழுங்குபடுத்துதல், மேம்படுத்துதல்) சட்டம் 2016

மனை விற்பனை (ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேம்பாட்டுத்துதல்) சட்டம் (The Real Estate (Regulation and Development) Act, 2016 )என்பது 2013 ஆம் ஆண்டில் வீட்டு வசதி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ,மாநிலங்கவையில் ஆகத்து 14,2013 ஆம் நாள் இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது மே 1,2016 .[1].அந்தந்த மாநில அரசுகள் இதற்கான வரைவுச்சட்டத்தினை ஆறு மாத காலத்திற்குள் வகுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது..[2]

மனை விற்பனை (ஒழுங்குபடுத்துதல், மேம்படுத்துதல்) சட்டம் 2016
Real Estate (Regulation and Development) Bill, 2016
சான்றுNo. 16 of 2016
இயற்றியதுஇந்திய நாடாளுமன்றம்
இயற்றப்பட்ட தேதி15 மார்ச் 2016
இயற்றப்பட்ட தேதி10 மார்ச் 2016
சம்மதிக்கப்பட்ட தேதி25 மார்ச் 2016
கையொப்பமிடப்பட்ட தேதி25 மார்ச் 2016
சட்ட வரலாறு
சட்ட முன்வரைவுReal Estate (Regulation and Development) Bill, 2016
அறிமுகப்படுத்தியதுDr. Girija Vyas, Minister of Housing and Urban Poverty Alleviation

மனை விற்பனை

தொகு

மனை என்பது இயற்கை வளங்களுடன் கூடிய வெற்று இடங்களோ அல்லது கட்டிடங்களுடன் உள்ள இடங்களைக்குறிப்பது ஆகும். மனை விற்பனை என்பது வீடு அல்லது இடங்களை வாங்குவதோ அல்லது விற்பனை செய்வதோ அல்லது வாடகைக்கு விடுவதை ஒரு தொழிலாக செய்து வருவது. .[3]

சட்டம் உருவாக காரணம்

தொகு

மனை வாங்குபவர்களிடத்தில் ஏற்பட்ட குழப்பங்களும், தவறான கட்டுமானங்களினால் ஏற்பட்ட விபத்துகளினாலும் அதன் விளைவுகளாலும் நாடு முழுவதும் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன.வீட்டுமனை செயல்திட்டம் பற்றிய ஒரு புரிதல் மக்களுக்கு இல்லாததே இதன் காரணம் என கருதிய நடுவன் அரசு 2013-ஆம் ஆண்டு வீட்டுமனை விற்பனை செய்யும் துறையானது வெளிப்படைத்தன்மையுடன் ,எளிமையான முறையில் அமைய வழி செய்ய கேட்டுக்கொண்டது. அதற்கேற்ப 2009- ஆம் ஆண்டு வீட்டு வசதி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் ஒரு மாதிரி சட்டமசோதாவினை தாக்கல் செய்தது. அதில் மாநில அரசு தங்களுக்கென்ற வகையில் மாற்றங்களைச் செய்ய அனுமதிவழங்கியுள்ளது.இந்தச் சட்டமானது அகில இந்திய காங்கிரஸ் ஆட்சியின்போது கொண்டுவரப்பட்டது.[4]

ரெரா(RERA)

தொகு

மாநிலங்களும் ,யூனியன் பிரதேசங்களும் ரெரா ( REAL ESTATE REGULATORY AUTHORITIES) எனப்படும் மாநில அளவிலான பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும்.

ரெராவின் பங்களிப்புகள்

தொகு
  • குடியிருப்புக்கான மனைவிற்பனைத் திட்டம் , விற்பனையாளர்களின் விவரம் அனைத்தும் ரெராவின் வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.
  • விற்பனையாளர், வாங்குபவர், இடைத்தரகர், போன்றவர்களின் பொறுப்புகள் என்ன என்பதனை வரையறை செய்தல்.[5]
  • ஒவ்வொரு ரெரா குழுவிலும் மனைவிற்பனை செய்வதில் அனுபவம் கொண்ட

மற்றும் சட்டம் ,வணிகதுறை சார்ந்த முழுநேர ஊழியர்களை குழுவில் இடம் பெறச்செய்ய வேண்டும் வேண்டும்.

  • மனைவிற்பனைக்கான மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒன்றை துவங்கி ரெரா சம்பந்தப்பட்ட புகார்களை விசாரிக்க வகை செய்தல்.

விற்பனையாளர் , மனைவாங்குபவர்

தொகு
  • மனையின் வரைபடம் ,எத்தனை வகையான சொத்துகளை விற்பனைசெய்கிறார், கட்டிமுடிக்கபட்ட விவரம் போன்றவற்றை விற்பனையாளர் ரெரா வலைத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.இதில் ஏதேனும் தவறு ஏற்படின் வட்டியுடன் பணத்தை செலுத்த வேண்டும்.
  • திட்டத்தின்70% தொகையினை மனை வாங்குபவர்களிடத்தில் இருந்து தான் பெற வேண்டும்.அதனை அந்த திட்டத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • 70% என்ற அளவினை அந்தந்த மாநில அரசு குறைக்கலாம்.
  • உடன்படிக்கையின் படி பதிவு செய்யப்பட்ட முண்பணத்தில் 10% -ற்கும் அதிகமான பணத்தை வாடிக்கையாளரிடம் இருந்து வாங்கக்கூடாது.
  • மனை வாங்குபவர் உடன்படிக்கையின் படி பதிவு செய்யப்பட்ட பணத்தை அதில் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கொடுக்க வேண்டும் இல்லையேல் அதற்கான அபராத தொகையுடன் செலுத்த வேண்டும்.

அபராத தொகை

தொகு
  • மனைவிற்பனையாளர் ரெராவில் பதிவு செய்யவில்லையெனில் அந்த மனையின் செயல்திட்டத்தின் மொத்த மதிப்பில் 10% அபராதம் செலுத்த வேண்டும்.
  • சட்டத்தை மீறினால் 3 வருட சிறை அல்லது 10% அதிக தொகை செலுத்த வேண்டும்.
  • தரகர் இந்த சட்டத்தை மீறினால் மீறிய நாட்களில் இருந்து ஒவ்வொரு நாளுக்கும் 10,000 ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும்.[6]

நடைமுறைப்படுத்திய மாநிலங்கள்

தொகு
மாநிலம்/யூனியன் பிரதேசங்கள் அறிவித்த நாள் விதிகள் வலைத்தளம்
குசராத் 29 அக்டோபர்,2016 [2] http://gujrera.gujarat.gov.in/ பரணிடப்பட்டது 2019-01-11 at the வந்தவழி இயந்திரம்
உத்தரப்பிரதேசம் 11 அக்டோபர், 2016 [3] www.up-rera.in
சண்டிகர் 31 அக்டோபர், 2016 [4] http://rera.chbonline.in பரணிடப்பட்டது 2019-01-15 at the வந்தவழி இயந்திரம்
Dadra and Nagar Haveli 31 அக்டோபர், 2016 [5] http://maharera.mahaonline.gov.in/
அந்தமான் நிக்கோபார் தீவுகள் 31 அக்டோபர், 2016 [6] http://www.tnrera.in/ பரணிடப்பட்டது 2018-12-31 at the வந்தவழி இயந்திரம்
இலட்சத்தீவுகள் 31 October 2016 [7]
டாமன் டையூ 31 அக்டோபர், 2016 [8] http://maharera.mahaonline.gov.in/
மத்தியப் பிரதேசம் 22 அக்டோபர், 2016 Rules http://rera.mp.gov.in/ பரணிடப்பட்டது 2019-01-05 at the வந்தவழி இயந்திரம்
புது தில்லி 24 நவமபர், 2016 [9] http://dda.org.in/rera/index.aspx பரணிடப்பட்டது 2018-12-19 at the வந்தவழி இயந்திரம்
மகாராட்டிரம் 19 ஏப்ரல், 2017 [10] https://maharera.mahaonline.gov.in/
ஆந்திரப் பிரதேசம் 28 மார்ச், 2017 [11] பரணிடப்பட்டது 2018-10-08 at the வந்தவழி இயந்திரம் https://www.rera.ap.gov.in பரணிடப்பட்டது 2017-10-02 at the வந்தவழி இயந்திரம்
ஒடிசா 25 பெப்ரவரி,2017 [12] பரணிடப்பட்டது 2018-09-20 at the வந்தவழி இயந்திரம் http://orera.in/ பரணிடப்பட்டது 2018-11-19 at the வந்தவழி இயந்திரம்
பீகார் 1 மே, 2017 [13] பரணிடப்பட்டது 2017-12-15 at the வந்தவழி இயந்திரம் https://nagarseva.bihar.gov.in/rerabihar/ பரணிடப்பட்டது 2018-12-19 at the வந்தவழி இயந்திரம்
ராஜஸ்தான் 1 மே, 2017 [14] http://rera.rajasthan.gov.in/
சார்க்கண்ட் 18 மே, 2017 [15] பரணிடப்பட்டது 2019-08-19 at the வந்தவழி இயந்திரம் http://rera.jharkhand.gov.in/ பரணிடப்பட்டது 2019-04-23 at the வந்தவழி இயந்திரம்
உத்தராகண்டம் 28 ஏப்ரல், 2017 [16] பரணிடப்பட்டது 2018-12-18 at the வந்தவழி இயந்திரம் http://www.uhuda.org.in/real-estate-act/ பரணிடப்பட்டது 2018-12-18 at the வந்தவழி இயந்திரம்
தமிழ்நாடு 22 சூன், 2017 [17] பரணிடப்பட்டது 2017-10-25 at the வந்தவழி இயந்திரம் http://www.tnrera.in/index.php பரணிடப்பட்டது 2019-04-26 at the வந்தவழி இயந்திரம்
கருநாடகம் 10 சூலை, 2017 [18] பரணிடப்பட்டது 2017-07-15 at the வந்தவழி இயந்திரம் https://rera.karnataka.gov.in/
பஞ்சாப் (இந்தியா) 8 சூன், 2017 [19] பரணிடப்பட்டது 2018-04-03 at the வந்தவழி இயந்திரம் https://www.rera.punjab.gov.in/
சத்தீசுகர் 26 ஏப்ரல், 2017 [20] https://rera.cgstate.gov.in/[தொடர்பிழந்த இணைப்பு]
அரியானா 28 சூலை, 2017 [21] http://www.harera.in/
அசாம் 6 மே, 2017 [22]
தெலுங்கானா 4 ஆகஸ்டு, 2017 [23] http://rera.telangana.gov.in/
இமாச்சலப் பிரதேசம் 28 செப்டமபர், 2017 [24] பரணிடப்பட்டது 2017-10-09 at the வந்தவழி இயந்திரம் http://www.hprera.in/
கோவா (மாநிலம்) 24 நவம்பர், 2017 [25] https://rera.goa.gov.in/ பரணிடப்பட்டது 2019-02-08 at the வந்தவழி இயந்திரம்
திரிபுரா 27 அக்டோபர், 2017 [26] பரணிடப்பட்டது 2017-11-07 at the வந்தவழி இயந்திரம்
புதுச்சேரி 18 சூலை, 2017 [27] பரணிடப்பட்டது 2017-11-07 at the வந்தவழி இயந்திரம்
கேரளம் 18 சூன், 2018 [28]

மேற்கோள்கள்

தொகு
  1. "Commencement Notification" (PDF). Archived from the original (PDF) on 2016-06-01. பார்க்கப்பட்ட நாள் 2017-05-15.
  2. "Real Estate Bill is an act now, may protect home buyers". Economic Times. பார்க்கப்பட்ட நாள் 2 May 2016.
  3. "ரியல் எஸ்டேட்” த அமெரிக்கன் ஹெரிடேஜ் டிக்ஷனரி ஆஃப் த இங்கிலீஷ் லேங்குவேஜ், நான்காவது பதிப்பு. ஹடன் மிஃப்லின் கம்பெனி, 2004. Dictionary.com பரணிடப்பட்டது 2009-02-01 at the வந்தவழி இயந்திரம் 2008ம் ஆண்டு ஜூலை 12ம் தேதியில் மீட்கப்பட்டது.
  4. "Rahul Gandhi assures home buyers of a strong Real Estate bill", தி எகனாமிக் டைம்ஸ், 3 March 2016
  5. http://mhupa.gov.in/writereaddata/Real_Estate_Act_2016.pdf பரணிடப்பட்டது 2017-05-19 at the வந்தவழி இயந்திரம், page 34
  6. [1]