மன்னவனூர்
மன்னவனூர் தமிழ் நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் வட்டத்துக்குட்பட்ட வருவாய் கிராமமும், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஓர் ஊராட்சியுமாகும்[4][5]. கொடைக்கானலில் இருந்து கிட்டத்தட்ட 35 கி.மீ தொலைவில் உள்ள மலைக் கிராமம். இவ்வூர் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. மேல் மலைக் கிராமங்களின் மையப் பகுதியாகவும் இவ்வூர் காணப்படுகிறது.
மன்னவனூர் | |
— மலைக் கிராமம் — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திண்டுக்கல் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இங்குள்ள மக்களின் முக்கியத் தொழிலாக விவசாயம் உள்ளது. உருளைக்கிழங்கு, பூண்டு, கேரட், பீன்ஸ், காய்கறிகள் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. இவ்வூரில் ஒரு மேல்நிலைப்பள்ளியும், துவக்கப்பள்ளி ஒன்றும் செயல்படுகின்றது.
ஆராய்ச்சி மையம்
தொகுஇங்கு மத்திய அரசின் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. 1965 ஆம் ஆண்டில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தால், ராஜஸ்தான் மாநிலத்தின் டோங் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மத்திய செம்மறியாடு உரோம ஆராய்ச்சி நிலையத்தின் தென்மண்டலக் கிளையாக இந்த ஆராய்ச்சி மையம் 1970 ஆம் ஆண்டு ஏற்படுதப்பட்டது[6].
ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மெரினா வகை ஆடு, முயல் குறித்த ஆய்வில் இம்மையம் செயல்பட்டு வருகின்றது. இங்கு வளர்க்கப்படும் ஆடுகளில் இருந்து ரோமங்கள் வெட்டி சேகரிக்கப்பட்டு அவை கம்பளி ஆடை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இம்மையத்தின் அருகில் அழகிய ஏரியும் அமைந்துள்ளது.
புல்வெளி
தொகுகொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் மன்னவனூரில் சூழல் சுற்றுலாப் புல்வெளி 150 ஹெக்டேர் பரப்பளவில் மன்னவனூர் ஏரியைச் சுற்றி மூன்று கிலோமீட்டர் நீளத்தில் நடைபாதையும் இரு மரப்பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மன்னவனூர் கைக்காட்டி சூழல் சுற்றுலா குழுவினர் மூலம் இது பாரமரிக்கப்பட்டு வருகிறது.[7][8].
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-10-30.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-04-25. பார்க்கப்பட்ட நாள் 2015-10-30.
- ↑ செம்மறி ஆடு, முயல் வளர்க்க வழிகாட்டு மையம்
- ↑ http://www.dinamani.com/edition_madurai/dindigul/2015/04/29/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81/article2788197.ece மன்னவனூர் புல்வெளி சூழல் சுற்றுலா மையத்தில் பயணிகளுக்கு 8 குடில்கள் அமைக்கத் திட்டம்
- ↑ "சுற்றுலா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த மன்னவனூர் சூழல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-10-30.