மன்னவரு சின்னவரு
மன்னவரு சின்னவரு (Mannavaru Chinnavaru) என்பது 1999இல் பி. என். இராமச்சந்திர ராவ் இயக்கத்தில் வெளியான தமிழ்த்திரைப்படம்[1].இப்படத்தில் சிவாஜி கணேசன், அர்ஜூன், சௌந்தர்யா, கே.ஆர். விஜயா ஆகியோர் முன்னணிப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் நடிகர் அர்ஜூனின் நூறாவது படம். இப்படம் சுபவர்தா என்னும் தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ்வடிவமாகும்[2][3]. இப்படத்தின் தெலுங்கு வடிவத்தில் அர்ஜூன், சௌந்தர்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
மன்னவரு சின்னவரு | |
---|---|
![]() மன்னவரு சின்னவரு | |
இயக்கம் | பி. என். இராமச்சந்திர ராவ் |
தயாரிப்பு | எஸ். தாணு |
கதை | பி.என். இராமச்சந்திரா ராவ் பிரசன்ன குமார் |
திரைக்கதை | பி.என். இராமச்சந்திரா ராவ் |
இசை | கீதபிரியன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் அர்ஜுன் சௌந்தர்யா மகேஷ்வரி |
கலையகம் | வி. கிரியேசன்சு |
வெளியீடு | 15 சனவரி 1999 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- சிவாஜி கணேசன் - ராஜசேகராக
- அர்ஜுன்- ராஜாவாக
- சௌந்தர்யா- மேகனாவாக
- மகேஸ்வரி- ஸ்வேதா
- விசு- சண்முகசுந்தரம் என
- கே. ஆர். விஜயா சண்முகசுந்தரத்தின் மனைவியாக
- ஆர்.சுந்தர்ராஜன்- மைனர் ராஜாமணியாக
- எஸ். எஸ். சந்திரன் - சிகரமாக
- நர்ரா வெங்கடேஸ்வர ராவ்- தர்மராஜாக
- ஸ்ரீகரி- சிவராஜ்
- அனு மோகன் - ராஜாமணியின் உறவினராக
- இடிச்சப்புளி செல்வராசு- கிராமத்து மனிதராக
உற்பத்தி
தொகுஅர்ஜுன் தனது தெலுங்குப் படமான சுபாவர்தாவை தமிழில் மறு ஆக்கம் செய்வதில் ஆர்வம் காட்டினார். தாணு ஒரு முக்கியமான பாத்திரத்திற்காக சிவாஜி கணேசனை அணுகினார், அவர் நடிக்க ஒப்புக்கொண்டார். படத்தின் தொடக்க விழா சென்னையில், தேனாம்பேட்டை, காமராஜர் மண்டபத்தில், 6 ஆகஸ்ட் 1998 அன்று நடந்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://m.rediff.com/movies/1999/jan/25ss.htm
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-12-09. Retrieved 2019-11-05.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-03. Retrieved 2019-11-05.