மன்மோடி குகைகள்
மன்மோடி குகைகள் (Manmodi caves) (मानमोडी लेणी) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின், புனே மாவட்டத்தில், ஜூன்னார் நகரத்தின் தெற்கில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த பௌத்த தொல்லியல் களம் ஆகும்.[1] ஜூன்னார் நகரத்திற்கு அருகில் அமைந்த பிற பௌத்த குகைகள் துளஜா குகைகள், சிவனேரி மற்றும் லெண்யாத்திரி குகைகள் ஆகும்.[1]
மன்மோடி குகைகள், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ளது.
மன்மோடி குகைகளின் குடைவரைகள் கிமு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து, கிபி மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை நிறுவப்பட்டுள்ளது. [1]
மூன்று தொகுதிகளாக பிரிக்கப்பட்ட மன்மோடி குகைகளை, இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது. இக்குகைகளை மூன்று தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்:
- பூதலிங்க குகைத் தொகுதி (भूत लेणी), இதனை யவனர்கள் அளித்த கொடை மூலம் நிறுவப்பட்டதாக கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளது.
- அம்பா-அம்பிகா குகைத் தொகுதி (अंबा-अंबिका)
- பீமாசங்கர் குகைத்தொகுதி[2]
மன்மோடி மலையின் தென்கிழக்கில் மேற்கு சத்திரபதி மன்னர் நகபானரின் முதலமைச்சர் அய்மாவின் கிபி 124ம் ஆண்டின் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளது.[3] அம்பா-அம்பாலிகை குடைவரைகள், நேமிநாதர் உள்ளிட்ட தீர்த்தங்கரர்களின் சிற்பங்களைக் கொண்டது.
அமைவிடம்
தொகுமகாராட்டிரா மாநிலத்தின் புனே நகரத்திற்கு வடக்கில் 91.7 கிமீ தொலைவில், ஜூன்னாரில் (19°10’ N; 73°53’ E) பாகையில் மன்மோடி குகைகள் அமைந்துள்ளது.
படக்காட்சிகள்
தொகு-
மன்மோடி குகையின் சைத்தியம், புகைப்படம், 1880
-
பூதலிங்க குகையின் சைத்தியம்
-
யவனர்களின் கொடையால் நிறுவப்பட்ட சைத்தியம்
-
குகையின் கிபி இரண்டாம் நூற்றாண்டின் பிராமி கல்வெட்டுக்கள்
-
குகையின் பிராமி கல்வெட்டு எழுத்து
-
குகையின் பிராமி கல்வெட்டு எழுத்து
-
குகையின் பிராமி கல்வெட்டு எழுத்து
-
பூதலிங்க சைத்தியத்தின் உட்புறம்
-
பிக்குகள் தங்குதவதற்கான சிற்றறைகளும், சைத்தியமும்
-
அம்பா-அம்பிகா குகைகள்
-
அம்பா-அம்பிகை குகையின் சைத்தியம்
-
அம்பா-அம்பிகா குகையின் அறைகளில் ஓவியங்கள்
-
பீமசங்கர் குகைகள்
-
மேற்கு சத்திரபதி மன்னரின் அமைச்சரின் உதவியால் நிறுவப்பட்ட மன்மோடி குகைகள், கிபி 124
-
பீம்சங்கர் குகைகள்
-
பீம்சங்கர் குகையின் சைத்தியம்
-
மன்மோடி குகைகளின், அம்பிகா குகைகள்
-
பூதலிங்க குகையின் சைத்தியம்
-
தியான மண்டப சைத்தியம், மன்மோடி குகை
-
இரண்டு அடுக்குகள் கொண்ட மன்மோடி விகாரை
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Brancaccio, Pia (2010). The Buddhist Caves at Aurangabad: Transformations in Art and Religion (in ஆங்கிலம்). BRILL. p. 34. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9004185259.
- ↑ "Lenyadri Group of Caves, Junnar - Ticketed Monument - ArchaeologicalSurvey of India". asi.nic.in. Archaeological Society of India.
- ↑ Lenyadri Group of Caves, Junnar