மன் கௌர்
சர்தார்னி மன் கௌர் (Sardarni Man(n) Kaur, மார்ச் 1, 1916 - சூலை 31, 2021) ஓர் இந்திய தடகள விளையாட்டு வீரராவார். 100 ஆண்டுகளுக்கும் மேலான பிரிவுகளில் பல்வேறு நிகழ்வுகளுக்காக உலக சாதனைகளைப் படைத்துள்ளார். இவருக்கு 103 வயதாக இருந்தபோது இந்தியக் குடியரசுத் தலைவர் நாரி சக்தி விருது வழங்கினார்.
வாழ்க்கை
தொகுபஞ்சாபி மட்டுமே பேசத்தெரிந்தவரான சுமார் ஐந்து அடி உயரமே இருக்கிறார்.[1] ஆனால், உலக முதுநிலை தடகளப் போட்டிகளில் பல தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.[2][3][4]
தடகளம்
தொகுஇவர் தனது 93 வயது வரை தடகளத்தில் ஈடுபடவில்லை என்றாலும், 2016ஆம் ஆண்டில் இவர் அமெரிக்க முதுநிலை விளையாட்டில் ஒரு போட்டியில் வேகமாக ஓடினார்.[5] 2017 உலக முதுநிலை விளையாட்டுகளில் பங்கேற்பதற்காக இவர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் தவறாமல் பயிற்சி பெற்றார். இவர் பல ஆண்டுகளாக இருந்த தனது சொந்த உலக சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இருந்தார். 79 வயதைக் கடந்த இவரது மகன் குர்தேவ் சிங் இவரது பயிற்சியாளராக இருந்தார்.[6] ஓக்லாந்தில் நடந்த 2017 தடகளப் போட்டிகளில் இவர் 100 மீட்டர் ஓட்டத்தை 74 வினாடிகளில் முடித்தார்.[1]
2019ஆம் ஆண்டில் இவர் போலந்தில் நடந்த தடகளப் போட்டிகளில் நான்கு போட்டிகளில் வென்றார் - குண்டு எறிதல், 60 மீ, 200 மீ ஸ்பிரிண்ட், ஈட்டி எறிதல் ஆகியன. இவர் 60 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 36 வினாடிகளில் முடித்த பின்னர் "தான் நன்றாக இருப்பதாகவே" கூறினார். இதற்குப் பிறகு இவரும், இவரது மகன் குர்தேவும் இமாச்சலப் பிரதேசத்தின் பாரு சாஹிப்பிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு அழைக்கப்பட்டனர். அங்கு மாணவர்களின் சாதனைகளையும் அவர்கள் பின்பற்றும் உணவைப் பற்றியும் பேசி ஊக்கமளித்தனர். உணவில் கொட்டைகள், பருப்பு வகைகள், சோயா பால், பால், கோதுமை சாறு மற்றும் முளைவிட்ட கோதுமை ஆகியவற்றை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வலியுறுத்தினர்.[1]
விருது
தொகு2020 மார்ச் 8 (அனைத்துலக பெண்கள் நாள்) அன்று இவருக்கு நாரி சக்தி விருது வழங்கப்பட்டது. புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்த விருதை இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வழங்கினார். இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார். இவருக்கு "சண்டிகரிலிருந்து வந்த அதிசயம்" என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.[5]
இறப்பு
தொகுபித்தப்பை புற்றுநோய் காரணமாக கௌர் 31 ஜூலை 2021, அன்று தனது 105 வயதில் இறந்தார்.[7][8]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Whatever Happened To ... The 101-Year-Old Champion Runner From India?". NPR.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-12.
- ↑ "Man Kaur, 100-year-old runner from India, wins gold medal at Masters Games". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2017-04-30.
- ↑ "Man Kaur, oldest athlete at World Masters Games, now Auckland's oldest skywalker". stuff.co.nz. பார்க்கப்பட்ட நாள் 2017-04-30.
- ↑ "101-Year-Old Wins Four Gold Medals at the World Masters Games". runnersworld.com. பார்க்கப்பட்ட நாள் 2017-04-30.
- ↑ 5.0 5.1 "Lady mason, centenarian athlete among 15 women conferred Nari Shakti Awards". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-04-10.
- ↑ "101-year-old athlete Mann Kaur sets world record to win World Masters gold". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 2017-04-30.
- ↑ इंटरनेशनल मास्टर एथलीट मान कौर की जिंदगी की दौड़ पूरी, चंडीगढ़ में 105 वर्ष की उम्र में निधन इंटरनेशनल मास्टर एथलीट मान कौर की फाइल फोटो। (in இந்தி)
- ↑ 105 வயது தடகள வீராங்கனை மரணம். மாலை மலர். 1 அகத்து 2021.
{{cite book}}
: Check date values in:|year=
(help)