மராட்டிய வங்கி

இந்திய பொதுத்துறை வங்கி

மராட்டிய வங்கி அல்லது மகாராஷ்டிர வங்கி இந்தியாவில் செயல்பட்டுவரும் பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். இவ்வங்கியின் மொத்த பங்குகளில், 81.2% விழுக்காடு பங்குகளை இந்திய அரசு கொண்டுள்ளது.[2] இவ்வங்கி, இந்தியா முழுவதும் 15 இலட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு தனது 1868 -க்கும் அதிகமான கிளைகளின் மூலமாக சேவைகளை வழங்கி வருகிறது. இது மராட்டிய மாநிலத்தில் மற்ற பொதுத்துறை வங்கிகளை விட அதிகமான கிளைகளைக் கொண்டுள்ளது.

மராட்டிய வங்கி
Bank of Maharashtra
வகைபொதுப் பங்கு நிறுவனம்
BSE & NSE: MAHABANK
நிறுவுகை1935
தலைமையகம்1501, லோக்மாங்கல்,
சிவாஜி நகர்,
புனே இந்தியா
முதன்மை நபர்கள்சுஷில் முநாத் (Sushil Muhnot), தலைவர் & மேலாண்மை இயக்குநர் ஆர். கே. குப்தா, , (நிர்வாக இயக்குநர்)
ஆர். ஆத்மராம் (நிர்வாக இயக்குநர்)
தொழில்துறைவங்கித் தொழில்,
மூலதன சந்தை மற்றும் துணை சந்தைகள்
உற்பத்திகள்கடன்கள், கடன் அட்டைகள், சேமிப்புகள், முதலீடுகள் மற்றும் பல.
வருமானம் 60939 மில்லன் கள் [1]
மொத்தச் சொத்துகள் 481 மில்லியன்
இணையத்தளம்www.bankofmaharashtra.in

வரலாறு

தொகு

இந்த வங்கி புனேவில் வி. ஜி காலே மற்றும் டி. கே. சத்ய நிறுவினர். இது சிறு வணிகங்களுக்கு நிதி உதவி அளித்து மேலும் பல தொழில்துறை வீடுகளை பெற்றது. 1969 இல் இந்த வங்கி தேசியமயமாக்கப்பட்டது.

ஏ. சு. ராஜீவ் என்பவர் 2 டிசம்பர் 2018 அன்று இந்த வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார் [3] ஏ.பி.விஜயகுமார் என்பவர் 10 மார்ச் 2021 அன்று செயல் இயக்குநர் பொறுப்பை பெற்றார். மேலும் ஆஷிஷ் பாண்டே என்பவர் 31 டிசம்பர் 2021 அன்று நிர்வாக இயக்குநர் பொறுப்பை பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-09-21. பார்க்கப்பட்ட நாள் 2015-06-29.
  2. "Autited FInancial Report 2014". பார்க்கப்பட்ட நாள் 31 May 2014. {{cite web}}: |first= missing |last= (help)
  3. "BoM appoints new MD CEO". www.livemint.com. பார்க்கப்பட்ட நாள் 2018-12-02.

இதனையும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மராட்டிய_வங்கி&oldid=4158215" இலிருந்து மீள்விக்கப்பட்டது